3ம் உலகப்போர்! அடி போடும் அமெரிக்கா.. அடிபணிய மறுக்கும் ரஷ்யா! டிரம்புக்கு கட் அண்ட் ரைட் பதில்
மாஸ்கோ: ஐரோப்பிய நாடுகளின் வான் பரப்புகளை ரஷ்ய போர் விமானங்கள் மீறுவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இதனையடுத்து, எல்லையை மீறும் விமானங்களை சுட்டு வீழ்த்த நேட்டோ படைகளுக்கு உத்தரவிட்டிருந்தார் டிரம்ப். இந்நிலையில் ரஷ்யா இந்த விவகாரம் தொடர்பாக பதிலடி கொடுத்திருக்கிறது.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடக்கும் போர் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால், சமீப நாட்களாக இந்த நாடுகளுக்கு பக்கத்தில் உள்ள சின்ன சின்ன நாடுகள் முக்கியமான குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளன.

அதாவது ரஷ்யாவின் போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் எங்கள் நாடுகளில் அத்துமீறுகிறது என ருமேனியா, எஸ்தோனியா மற்றும் போலந்து உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டியிருக்கின்றன. இந்த நாடுகள் எல்லாம் அமெரிக்காவின் நட்பு நாடுகள் ஆகும். மட்டுமல்லாது நேட்டோவில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கின்றன. நேட்டோ அமைப்பில் எந்த நாடுகள் இணைந்தாலும், அந்த நாடுகள் மீது இந்த அமைப்பில் இல்லாத வேறு நாடுகள் தாக்குதல் நடத்தினால், உதவிக்கு அமைப்பில் உள்ள மொத்த நாடுகளும் திரண்டு வரும்.
சிம்பிளாக சொல்வதெனில் போலந்து நேட்டோவில் உறுப்பினராக உள்ளது. அதன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தினால், உடனே அமெரிக்கா உள்ளே வரும். இதுதான் விஷயம். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பின்னால் அமெரிக்காவின் சதி இருப்பதாக பேசப்படுகிறது. அதாவது கடந்த மூன்று ஆண்டுகளாக ரஷ்யாவுக்கும்-உக்ரைனுக்கும் நடந்து வரும் போர் இதுவரை முடிவை எட்டவில்லை. எனவே போரை முடிக்கவும், இந்த விவகாரத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லவும் நேட்டோ உறுப்பு நாடுகளை வைத்து அமெரிக்கா கேம் விளையாடுகிறது. என்று சர்வதேச அரசியல்வாதிகள் விமர்சித்துள்ளனர்.
இந்த பஞ்சாயத்துக்கிடையில்தான் ரஷ்ய விமானங்கள் அத்துமீறினால் அவற்றை சுட்டு தள்ளுங்கள் என்று டிரம்ப் நேட்டோ படைக்கு உத்தரவிட்டிருந்தார். இதற்கு ரஷ்யா பதிலடி கொடுத்திருக்கிறது. அதாவது, "எங்கள் ராணுவ விமானங்கள் யாருடைய வான் எல்லையையும் தாண்டி உள்ளே நுழையவில்லை. இந்த குற்றச்சாட்டுகள் எல்லாம் மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கிறது மற்றும் ஆதாரமற்றதாக இருக்கிறது" என்று ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறி இருக்கிறார்.
இதன் மூலம், நாங்கள் உக்ரைனுடன் மட்டுமே சண்டை செய்ய திட்டமிட்டிருக்கிறோம், நேட்டோ படைகளுடன் கிடையாது என்பதை ரஷ்யா உறுதி செய்திருக்கிறது.
-
இந்தியாவால் ஆடிப்போன சீனா... அமெரிக்காவுடன் இணைந்து மாஸ்டர் மூவ்.. உற்று பார்க்கும் உலக நாடுகள் -
பாகிஸ்தான் கூட டிரம்ப்பை மதிக்கல.. அமெரிக்காவை சீண்டும் ஷெரீப் அரசு.. இனி தான் இருக்கு சம்பவம்! -
எஸ்-400 ஏவுகணை அமைப்புகளை களமிறக்கும் இந்தியா.. ரஷ்யாவுடன் அவசர டீலிங்.. திடீர்ன்னு என்ன ஆனது? -
யுரேனியத்தை ஒப்படைத்தால் கூட.. ஈரான் தப்பிக்காது! டிரம்ப் கொடுத்த பகிரங்க வார்னிங்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே!












Click it and Unblock the Notifications