ஹேசல்வுட் இல்லப்பா.. ஆர்சிபி பிளேயிங் 12ல் நடக்கும் 2 மாற்றங்கள்.. பெங்களூரில் ரன் மழைக்கு ரெடியா!
பெங்களூர்: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணியின் பிளேயிங் லெவனில் 2 முதல் 3 மாற்றங்கள் இருக்கலாம் என்று பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஹேசல்வுட் காயம் காரணமாக விலகி இருக்கும் சூழலில், அவருக்கு பதிலாக ஜேக்கப் டஃபி மற்றும் யாஷ் தயாளுக்கு பதிலாக மங்கேஷ் யாதவ் களமிறங்குவார் என்று தெரிய வந்துள்ளது.
ஐபிஎல் தொடர் இன்று தொடங்க இருக்கும் நிலையில், முதல் போட்டியில் ஐதராபாத் அணியை எதிர்த்து டிஃபெண்டிங் சாம்பியன் ஆர்சிபி அணி களமிறங்க உள்ளது. கடந்த ஆண்டு நடந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இதன் காரணமாக ஐபிஎல் தொடக்க விழா நடத்தப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில் ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் காயம் காரணமாக களமிறங்கவில்லை. இதனால் பொறுப்பு கேப்டனாக இஷான் கிஷன் செயல்பட உள்ளார். மறுபக்கம் ஆர்சிபி அணியில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஹேசல்வுட் காயம் காரணமாக முதல் போட்டியில் ஆட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் யாஷ் தயாளும் பாலியல் குற்றச்சாட்டுகளால் இந்த சீசனில் ஆடவில்லை.
இதனால் ஆர்சிபி அணியின் பவுலிங் அட்டாக் புவனேஷ்வர் குமாரை நம்பியே இருக்கிறது. அதேபோல் ஹேசல்வுட் இடத்தில் டஃபியும், யாஷ் தயாள் இடத்தில் இளம் வேகப்பந்துவீச்சாளர்களான மங்கேஷ் யாதவும் அறிமுகம் செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது. மற்றபடி க்ருணால் பாண்டியா, சுயாஷ் சர்மா மற்றும் ரஷீக் சலாம் ஆகியோர் சேர்க்கப்படுவார்கள்.
ஆனால் பேட்டிங் லைன் அப்பில் விராட் கோலி, பில் சால்ட், தேவ்தத் படிக்கல், ரஜத் பட்டிதார், ஜித்தேஷ் சர்மா ஆகியோர் இடம்பெறுவார்கள். ஆனால் நம்பர் 6 வரிசையில் ஜேக்கப் பெத்தல் அல்லது டிம் டேவிட் ஆகியோரில் ஒருவர் மட்டுமே சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. இதில் பெத்தல் ஸ்பின்னர்களை வெளுக்க கூடியவர். டிம் டேவிட் ஃபினிஷிங்கில் ஆடக் கூடியவர். இதனால் டிம் டேவிட் சேர்க்கப்படவே அதிக வாய்ப்புள்ளது.
ஆல்ரவுண்டர்களாக ரொமாரியோ ஷெப்பர்ட், க்ருணால் பாண்டியா ஆகியோர் இடம்பெறுவார்கள். பில் சால்ட் மோசமான ஃபார்மில் இருந்தாலும், பயிற்சி போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அதேபோல் படிக்கல் சிறந்த ஃபார்மில் உள்ளார். ஒருவேளை படிக்கல் சில போட்டிகளில் சொதப்பினாலும், வெங்கடேஷ் ஐயர் மாற்று வீரராக வாங்கப்பட்டுள்ளார். இதனால் ஆர்சிபி அணி வலுவாக இருப்பதாக பார்க்கப்படுகிறது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications