For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லதா மங்கேஷ்கர் உடல் மீது ஷாரூக் கான் துப்பினாரா? சமூக ஊடகங்களில் வைரலாகும் புகைப்படம் -என்ன நடந்தது?

By BBC News தமிழ்
|

இந்திய திரையுலகில் புகழ்பெற்ற முதுபெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் இறுதிச்சடங்கின்போது, தமது மத வழக்கப்படி பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பிரார்த்தனை (துவா) செய்த விவகாரத்தை சிலர் சர்ச்சையாக குறிப்பிட்டு பதிவிட்டு வரும் தகவலால் இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஷாரூக் கானின் இந்த செயல், இந்தியாவின் மதசார்பின்மையை நிரூபிப்பதாக ஒரு சிலர் வரவேற்ற அதே சமயம், வேறு சிலர் ஷாரூக்கின் செயலை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

லதா மங்கேஷ்கர் பிப்ரவரி 6ஆம் தேதி காலமானார். அவருடைய மறைவுக்கு இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோதி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள், பாலிவுட் பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர்.

மும்பை சிவாஜி பார்க்கில் நடந்த இறுதிச்சடங்கில், பிரதமர் மோதி, மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பகத்சிங் கோஷியார், முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். திரை பிரபலங்கள் ஷாரூக்கான், ஜாவேத் அக்தார், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரும் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்த நிலையில், ஷாருக்கான் தனது மேலாளர் பூஜா தட்லானியுடன் லதா மங்கேஷ்கரின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டார். அப்போது, ஷாரூக்கான் தன் மத வழக்கமான 'துவா' எனப்படும் தொழுகையில் ஈடுபட்டார். பின்னர், லதா மங்கேஷ்கர் சிதையின் காலில் விழுந்தும் வணங்கினார். அவரது செயல் சமூக ஊடகங்களில் வைரலாகும் அளவுக்கு அங்கு என்ன நடந்தது?

லதா மங்கேஷ்கரின் இறுதிச்சடங்குக்கு முன்னதாக, ஷாரூக்கான் அஞ்சலி செலுத்தியபோது தமது இஸ்லாமிய மத வழக்கத்தின்படி துவா செய்து பிரார்த்தனை செய்தார். அவருக்கு அருகே இருந்த அவரது மேலாளர் பூஜா தட்லாணி தமது இரு கைகளை கூப்பி வேண்டிக் கொண்டார்.

இந்த புகைப்படம் சிறிது நேரத்திலேயே ட்விட்டரில் டிரெண்டானது. அப்போது, இந்து மதத்தை சேர்ந்த ஒருவரும் (பூஜா தட்லாணி), முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஒருவரும் (ஷாரூக்கான்) தங்கள் மத வழக்கங்களின்படி, இந்தியாவின் முக்கியமான பாடகிக்கு அஞ்சலி செலுத்தியது, இந்தியாவின் மதசார்பின்மையை நிரூபிப்பதாக, நெட்டிசன்கள் பலரும் பாராட்டினர். மத நல்லிணக்கத்தின் உதாரணமாக, இந்த புகைப்படம் இருப்பதாக பலரும் பாராட்டினர்.

ஆனால், ஷாரூக்கானின் செயலுக்கு சிறிது நேரத்திலேயே எதிர்ப்பும் கிளம்பியது.

Actor Shahrukh Khan not spitting on the Popular Singer Lata Mangeshkar

ஷாரூக்கான் 'துவா' செய்தபோது, தன் முக கவசத்தை கழற்றி, காற்றில் ஊதியதை குறிப்பிட்டு, லதா மங்கேஷ்கரின் சிதை அருகே, எச்சில் உமிழ்ந்ததாக கூறி பலரும் ட்விட்டரில் விமர்சித்து வருகின்றனர். மேலும், இந்து மதப்படி நடைபெற்ற இறுதிச்சடங்கில், இஸ்லாமிய முறைப்படி பிரார்த்தனை செய்ததையும் சிலர் விமர்சித்து இடுகைகளை பதிவிட்டனர்.

ஷாரூக்கானுக்கு எதிரான பிரசாரத்திற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக, ஹரியாணா பாஜகவின் மாநில பொறுப்பாளர் அருண் யாதவ் தன் ட்விட்டர் பக்கத்தில், ஷாரூக்கான் அஞ்சலி செலுத்தியுள்ள வீடியோவை பகிர்ந்து, அவர் "எச்சில் உமிழ்ந்தாரா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

https://twitter.com/beingarun28/status/1490328629003182082

ஷாரூக்கானுக்கு எதிராக அருண் யாதவ் வெறுப்பு பிரசாரம் செய்வதாக குறிப்பிட்டு சிலர் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தனர்.

சிவசேனை காட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி, "சிலர் பிரார்த்தனைக்கும் இரக்கத்திற்கும் தகுதியற்றவர்கள், மனதின் விஷத்தை நீக்க அவர்களுக்கு மருந்து மட்டுமே தேவை" என தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/priyankac19/status/1490557268617666562

'தி வயர்' இணையதளத்தின் ஆசிரியரான சித்தார்த் வரதராஜன், "இந்த கொடூரமான ட்வீட் பாஜக நிர்வாகியிடமிருந்து வந்திருக்கிறது. எந்த கும்பல் சமூகத்தில் அசுத்தத்தையும் விஷத்தையும் பரப்புகிறது என்பதில் சந்தேகம் வேண்டாம். அருண் யாதவ் 'துவா' பற்றி அறியாதவராக இருந்தால், ஷாரூக்கான் எச்சில் உமிழ்ந்தார் என கூறுவதற்கு முன்பு யாரிடமாவது கேட்டிருக்கலாம்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/svaradarajan/status/1490377983110283264

ஷாருக்கான் காற்றில் ஊதினாரே தவிர, எச்சில் உமிழவில்லை என ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் ட்விட்டரில் ஷாரூக்கானுக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
Actor Shahrukh Khan not spitting on the Popular Singer Lata Mangeshkar
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X