For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

150 கிலோ எடை மெகா திருக்குறள் நூல் வெளியீடு

By Staff
Google Oneindia Tamil News

Giant book on Tirukural unveiled
சென்னை: 7 அடி உயரமும், 4 அடி அகலமும், 150 கிலோ எடையும் கொண்ட மெகா சைஸ் திருக்குறள் புத்தகத்தை உருவாக்கியுள்ளார் கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜா ஷெரீப்.

உலகப் பொது மறையான திருக்குறளை பிரம்மாண்டமாக வடிவமைத்துள்ளார் ராஜா ஷெரீப். 7 அடி உயரமும், 4 அடி அகலமும். 150 கிலோ எடையும் கொண்ட இந்த மெகா சைஸ் திருக்குறள், 6 மாத கால உழைப்பில் மலர்ந்துள்ளது.

குறளும் அதற்கான தெளிவுரையும் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. 304 பக்கங்கள் கொண்டதாக இந்த பிரமாண்ட நூல் உள்ளது. இந்த பிரம்மாண்ட முயற்சி கையெழுத்தால் ஆனது என்பது இதன் கூடுதல் சிறப்பு. சென்னையில் நடந்த இதன் வெளியீட்டு விழாவில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தமிழ்வாணன் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.

திருக்குறளை சாதனைக்காக இப்படி வடிவமைக்கவில்லை. உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட திருவள்ளுவரின் திருக்குறளின் மீது மேலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். திருக்குறளை அனைவரும் படித்து பயன்பெற வேண்டும் என்றுதான் இவ்வளவு பெரிதாக வடிவமைத்தேன் என்கிறார் ராஜா ஷெரீப்.

இந்த பிரமாண்ட நூலை உருவாக்குவதற்காக, குஜராத்தில் இருந்து சிந்தடிக் ஷீட்டுகளை பிரத்யேகமாக வரவழைத்து செய்துள்ளார் ராஜா. தினமும் 8 மணிநேரம் உழைத்திருக்கிறார். இவரது முந்தைய படைப்புகளும் அதிகம் பேசப்பட்டவைதான்.

2003ம் ஆண்டு திருக்குறளை பனை ஓலையில் எழுதியும், 2006ம் ஆண்டு 250 கிலோ எடை கொண்ட கையால் எழுதப்பட்ட குரான் நூலை வெளியிட்டும் பிரமிக்க வைத்தவர் இலக்கிய ஆர்வம் படைத்த ராஜா ஷெரீப்.

உலகிலேயே கையால் எழுதப்பட்ட பெரிய நூல் இதுதான் என்கிறார் ராஜா ஷெரீப். மார்க்கர் பேனாவைப் பயன்படுத்தி எழுதியுள்ளார் ஷெரீப். அவரது இந்த பெரும் முயற்சிக்கு குடும்பத்தினர் பேருதவியாக இருந்துள்ளனர்.

ஷெரீப்பின் இந்த பிரமாண்ட குறள் நூலில் ஒவ்வொரு பக்கத்திலும் 5 குறள்களும், தெளிவுரையும் இடம் பெற்றுள்ளது.

இந்த பிரமாண்ட நூலை அமெரிக்காவில் உள்ள தமிழ்ச் சங்கத்திற்குக் கொடுக்கலாம் என சிலர் யோசனை கூறியுள்ளனராம். ஆனால் அதுகுறித்து இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்ைல என்கிறார் ராஜா ஷெரீப்.

ஷெரீப்பின் அடுத்த கட்ட திட்டம், திருக்குறளை இதேபோன்ற பிரமாண்ட சைசில், ஆங்கிலத்தில் எழுதி வெளியிடுவதுதானாம்.

திருக்குறளுக்கு புது மகுடம் சூட்டியுள்ள ராஜா ஷெரீப், குறள் போல் நீடூழி வாழ்க!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X