கராமா மெடிக்கல் சென்டரில் மருத்துவ முகாம்
அல்கூஸ் நகரில் உள்ள கராமா மெடிக்கல் சென்டரில், மாபெரும் இலவச மருத்துவ முகாமுக்கு தவ்ஹீத் ஜமாத் மற்றும் கராமா மெடிக்கல் குழுமம் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன
28ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் 12 மணி வரை இந்த முகாம் நடைபெறுகிறது. பொது மருத்துவம், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், கண் மற்றும் தோல் மருத்துவம் குறித்து இந்த முகாமில் ஆலோசனைகள் வழங்கப்படும்.
இதுகுறித்த தகவல்களை அறிய தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:
அல்கூஸ் கிளை - 055- 6105419, 8460075, 9759016, 9740756
சோனாப்பூர் கிளை - 050 - 8520146
தேரா கிளை - 050 - 3118322
ஹோர் அல் அன்ஸ் கிளை - 055 - 8438853
சத்வா கிளை - 050 - 5756518, 3157331
ரியாத்தில் தமிழர்கள் ரத்ததானம்
இதற்கிடையே ரியாத் நகரில் தமிழர்கள் ஒருங்கிணைந்து நடத்திய மாபெரும் ரத்த தானம் முகாம் அனைவரையும் கவர்ந்தது.
தியாகங்கள் மற்றும் தானங்கள் செய்வதில் தமிழர்கள் முதன்மையானவர்கள் என்பதை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நிரூபித்து வருகின்றனர்.
சவூதி அரேபியா வாழ் தமிழர்கள், 21-11-2008 அன்று ரியாத் மாநகரில் சவூதி அரேபியாவின் மிகப்பெரும் மருத்துவமனையான கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டியில் இரத்ததான முகாம் ஒன்றை நடத்தினர்.
மருத்துவமனை முழுவதும் தமிழ்க்குரலாகவே ஒலித்துக் கொண்டிருந்த இந்த முகாமை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலம் ஏற்பாடு செய்திருந்தது.
இது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மாநகரில் நடத்தும் 5வது இரத்த தான முகாமாகும். சவூதி அரேபியாவில் ஒரே நாளில் அதிகமானோர் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கியதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகின்றது.
இந்த 5வது முகாமில் ஆண்கள், பெண்கள் உட்பட ஜாதி மத பேதமின்றி தமிழ் பேசும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னூறுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இம்முகாமில் நேரமின்மையால் 229 பேர் மட்டும் இரத்தம் வழங்கும் வாய்ப்பை பெற்றனர்.
கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டியின் இரத்த வங்கி முதன்மை மருத்துவர் ஃபத்தூஹ் அல் ஆலம் கூறுகையில்,
நீங்கள் குறிப்பிடக்கூடிய யாருக்கு இரத்தம் தேவைப்பட்டாலும்; எங்களுக்கு தெரியப்படுத்தினால், அது இந்த சவூதி அரேபியாவிலே எந்த பகுதியாக இருந்தாலும், அவருக்கு இரத்தம் வழங்கி உயிர் காக்க இந்த கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி தயாராக இருக்கிறது என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications