For Daily Alerts
Just In
மதுரையில் 21 முதல் சைவ சித்தாந்த மாநாடு
மதுரை: சைவ சித்தாந்த அமைப்பின் 4வது அகில உலக மாநாடு மதுரையில் நடக்கிறது.
21ம் தேதி தொடங்கி 3 நாட்கள் மாநாடு நடக்க உள்ள இம் மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, மலேசியா, தென்னாப்பிரிக்கா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் சைவ மடாதிபதிகளும், அறிஞர்களும், பேராசிரியர்களும் கலந்து கொள்கின்றனர்.
மாநாட்டில் சைவ சித்தாந்தத்தின் சிறப்புகள் குறித்து உரைகள் ஆற்றப்படும் என்று தருமபுரம் ஆதினம் குமாரசாமி தம்பிரான் தெரிவித்தார்.