For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பார்வையாளர்களை ஈர்க்கும் குற்றாலம் அருகே உள்ள கேரளா சுற்றுலா தலங்கள்

By Staff
Google Oneindia Tamil News

தென்மாவட்டத்தில் பிரபல சுற்றுலா தலமான குற்றாலத்திற்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய சீசன் மாதங்களிலும், நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய சபரிமலை புனித பயண சுற்றுலா மாதங்களிலும் வந்து செல்கின்றனர்.

குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள் கேரள மாநிலத்தில் உள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கும் படையெடுக்கிறார்கள்.

செந்தூருணி வனவிலங்கு சரணாலாயம், தென்மலை சூழ்நிலை சுற்றுலா (எக்கோ) வளர்ச்சி திட்டத்ம் ஆகியவை சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதாக உள்ளன.

இவ்விரு இடங்களும் குற்றாலத்திலிருந்து சுமார் 35 கிமீ தூரத்தில் அமைந்துள்ளன.

செந்தூருணி வனவிலங்கு சரணாலயம்

செந்தூருணி என்ற சொல் செங்குருணி என்ற இப்பகுதிக்கே சொந்தமான ஒரு அரிய வகை மரத்தின் பெயரிலிருந்து மருவி அழைக்கப்படுவதாகும். செந்தூருணி வனவிலங்கு சரணாலயம் 1984ம் ஆண்டு அமைக்கப்பட்டது.

செந்தூருணி, குழத்துபுழா நதிக்கூடங்களில் கட்டப்பட்டுள்ள பாராப்பர் அணைகட்டின் விளைவாக 26 சதுரகிமீ பரப்பளவுள்ள ஒரு செயற்கை ஏரியை உருவாக்கியுள்ளது. இந்த அணையி்ன் கட்டுமானத்தினால் மேலும் 23 கிமீ சதுர வனப்பகுதி சரணாயலத்துடன் இணைந்துள்ளது.

செந்துரூணி வனவிலங்கு சரணாயமாக உருவாகும் முன்பு தென்மலை வனசரகத்தின் கீழ் இருந்தது. வனப்பகுதியில் மரங்களை வெட்டுதலில் இரண்டு வகை உண்டு. ஒன்று அனைத்து மரங்களையும் வெட்டுதல், மற்றொன்று தேர்ந்தெடுத்து வெட்டுதல் என்று இரண்டு வகை உண்டு.

இந்த இரண்டு வகை மரம் வெட்டும் முறைகள் ஒரு காலத்தில் இந்த வனப்பகுதியில் வழக்கத்தில் இருந்து வந்தது. இந்த வகைகளில் ஓன்றான அனைத்து மரங்களையும் வெட்டுதல் என்ற முறையில் இப்பகுதியில் உள்ள வனப்பகுதிகள் பெருமளவில் அழிக்கப்பட்டு மலைத் தோட்ட மரங்கள் வளர்க்கும் திட்டம் குறிப்பாக ரப்பர எஸ்டேட்டுகளாக உருமாறியது.

அதுமட்டுமல்லாது 1940களில் திருவனந்தபுரம்-செங்கோட்டை சாலை உருவாக்கப்பட்ட போது இந்த வனப்பகுதி பெருமளவு சீர்குலைந்தது.

இத்தகைய சீக்குலைவுக்கு பின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வனவிலங்கு சரணாலயம் அமைக்க தகுந்த பகுதியாக செந்தூருணி பள்ளத்தாக்கு பகுதியை கொல்லம் வனச்சரக கமிட்டியின் சிபாரிசின் பேரில் கேரள அரசு செந்தூருணியை வனவிலங்கு சரணாலயமாக 1984ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் நாள் அறிவித்தது.

தற்போது இந்த வனவிலங்கு சரணாலயம் திருவனந்தபுரம் வனவிலங்கு கோட்டத்தின் கீழ் நிர்வாகிக்கப்படுகிறது. இந்த வனவிலங்கு சரணாலயம் 100.32 சதுர கிமீ பரப்பளவு கொண்டது. எனினும் தமிழகத்துடன் உள்ள எல்கை சர்வே இதுவரையிலும் முழுமை பெறாத நிலையில் உள்ளது.

செந்தூருணிக்கு ஒரு வரலாற்று சிறப்பு உண்டு. புனே டெக்கான் கல்லூரியின் ஒரு பரிவான தொல்பொருள் ஆராய்ச்சி பிரிவை சேர்ந்த டாக்டர் பி.ராஜேந்திரன் என்பவரால் நடத்தப்பட்ட ஆய்வில் கற்காலத்தின் ஒரு மிகப்பெரிய குகையின் அகழ்வுகள் செந்தூருணி ஆற்றின் வடமேற்கு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

செந்தூருணி ஆற்று பள்ளதாக்கு கலாச்சாரம் இந்தியாவின் மிக பழமையான நாகரீகம் என்பது இந்த ஆய்வின் முலம் கண்டறியப்பட்டது. சிந்து சமவெளி நாகரிகத்தைவிட மிகவும் பழமை வாய்ந்த நாகரீகமாக செந்தூருணி ஆற்று பள்ளதாக்கு தற்போது கருதப்படுகிறது.

அதாவது இந்த ஆற்று பள்ளதாக்கு நாகரீகம் கிமு 4400 முதல் கிமு 3700 வரைஉள்ள காலகட்டத்தை சார்ந்தது. ஆனால் செந்தூருணி ஆற்று பள்ளதாக்கு நாகரீகம் கி்மு 5210 முதல் கிமு 4420க்கும் உள்பட்ட காலகட்டத்தை சார்ந்தது. இங்குள்ள குகை ஓவியங்கள் மத்திய இந்தியாவின் குகை ஓவியங்களுடன் ஓப்பிடலாம்.

இங்கு காணப்படும் குகை ஒரே நேரத்தில் சுமார் 20 மனிதர்களை தன்னுள் அடக்கிக் கொள்ளும் அளவில் உள்ளது. குகையின் முன்னாள் சற்று கீழே காணப்படும் சதுப்பு நிலம் ஒரு காலத்தில் ஏரியா இருந்திருக்கலாம் என டாக்டர ராஜேந்திரன் ஆய்வு கூறுகிறது.

செந்தூருணி ஆற்று பள்ளதாக்கு நாகரீகம் வரலாற்றிற்கு முந்தைய ஒரு நாகரீகத்திற்கு ஊக்கமளித்தது என்ற பெருமையை பெருகிறது.

இந்த சரணாலயத்தில் பல்வேறு அரியவகை மரங்கள், செடி, கொடிகள், ஏராளமான வனவிலங்குள், நீரோடைகள், சிறு சிறு அருவிகள் உள்ளது. செந்தூருணி வனவிலங்கு சரணாலயத்திற்கு செல்ல சிறப்பு அனுமதி பெற வேண்டும். தென்மலை கல்லடா அணைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள செந்தூருணி வனவிலங்கு சரணாலயத்தின் வனவிலங்கு காப்பாளர் அலுவலகத்தை அணுகி அனுமதி பெறலாம்.

செந்தூருணி வனவிலங்கு சரணாலயம் செல்ல தென்காசி மற்றும் செங்கோட்டையிலிருந்து (அச்சன்கோவில் தவிர) கேரள செல்லும் அனைத்து தமிழக மற்றும் கேரள அரசு பேருந்துகளில் தென்மலை கல்லடா அணைக்கட்டு வரை செல்லலாம்.

ரயில் மூலம் செல்ல விரும்புவோர் செங்கோட்டையிலிருந்து புனலூர் செல்லும் ரயிலில் தென்மலை ரயில் நிலையத்தில் இறங்கி தென்மலை கல்லடா அணைக்கட்டு பகுதிக்க பேரூந்து மற்றும் ஜீப் மூலம் சென்றடையலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X