For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உலகின் டாப்-10 பசுமை நகரங்கள்: கால்கேரிக்கு முதலிடம்

By Staff
Google Oneindia Tamil News

Ottawa
நியூயார்க்: வெப்பமயமாயதல் காரணமாக தற்போது உலகம் கடுமையான எதிர் விளைவுகள் சந்தித்து வருகிறது. மறுபுறம் தொழிற்சாலை கழிவுகளால் சுற்றுப்புற சூழல் மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து பல சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறது.

இந்த பேரிடரை தடுக்க உலகம் முழுவதும் இருக்கும் சுற்றுப்புற சூழல் ஆர்வாளர்களும், அரசு நிறுவனங்களும் முயன்று வருகின்றன. இதை தெடார்ந்து தற்போது மக்கள் மத்தயிலும் மாசுபாட்டு குறைக்கும் வேண்டும் என்ற விழிப்புணர்வு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், டாப்-10-லிஸ்ட்(top-0-list.org) என்ற இணையதளம் இது குறித்து மக்களிடையே மேலும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் நோக்கில் உலகின் பசுமையான நகரங்களை பட்டியலிட முடிவு செய்தது.

இதன் முக்கிய தகுதியாக கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேற்றப்படும் அளவு கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டது. குறைந்தளவு கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுவை வெளியிடும் நகரம் பசுமை நகரமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், துரதிருஷ்டவசமாக இதில் எந்த இந்திய நகரமும் இடம்பெறவில்லை. அந்த சர்வேயின் முடிவுகள்:

1. கால்கேரி

முதலிடத்தை பிடித்திருப்பது கால்கேரி நகரம். கனடாவின் ஆல்பர்டா மாகாணத்தில் உள்ளது. அழகிய மலைகள் சூழ்ந்த, ரிசார்ட்கள் நிறைந்த இந்த நகரம் குளிர்கால வாசஸ்தலமாக இருக்கிறது.

இந்நகரத்தின் வர்த்தகம் பெட்ரோலியம் துறையை அதிகம் நம்பியுள்ளது. விவசாயம், சுற்றுலாத்துறை, உயர் தொழில்நுட்ட தொழிற்சாலைகள் ஆகியவையும் வளர்ச்சிக்கு உதவுகின்றன.

இந்நகர் கனடாவின் முக்கிய ரயில் மையமாகவும் இருக்கிறது. இங்கு அதிக அளவில் தொழிற்சாலைகள் இருந்த போதிலும், சுற்றுப்புற சூழல் கட்டுப்பாடு மற்றும் திறமையான நிர்வாகம் ஆகியவற்றின் காரணமாக இங்கு மாசுபாடு மிகவும் குறைவாக இருக்கிறது. அதனால் தான் முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

2. ஹோனலுலு

அமெரிக்காவின் தீவு மாகாணமான ஹவாயின் தலைநகர் தான் இந்த ஹோனலுலு. இந்த பகுதி மித வெப்ப பகுதியாகும். இங்கு ஆண்டு முழுவதும் சூரியனின் வெப்பத்தை பெறலாம்.

இப்பகுதியில் இருக்கும் தொழிற்சாலைகள் மாசுபடுத்தும் தன்மையற்றவை. இந்நகர பேருந்துகள் நம்மூர் பேருந்துகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை. அவற்றில் இருந்து சுத்தமாக புகையே வருவதில்லை. கடலுக்கு அருகாமையில் இருப்பதால் இதன் சுற்றுப்புற சூழல் சூப்பராக இருப்பதாக கூறப்படுகிறது.

3. ஹெல்சின்கி

பின்லாந்தின் நாட்டின் தலைநகரான ஹெல்சின்கி நகருக்கு உலக அளவில் மூன்றாவது இடம் கிடைத்தாலும். ஐரோப்பாவில் இந்நகருக்கு தான் முதலிடம்.

இந்த நகரின் மக்கள் தொகை 5 லட்சத்து 79 ஆயிரம், பின்லாந்தின் அதிக மக்கள் தொகை கொண்ட நகர் இது தான். இங்கு பிறக்கும் மக்களில் 10 சதவீதம் பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.

இந்நகர வாசிகள் தங்கள் ஊரை சுத்தமாகவும், மாசுபடுத்தப்படாமல் இருப்பதையும் பெருமையாக கருதுகிறார்கள். மக்கள் கார் போன்ற வாகனங்களை பயன்படுத்துவதை குறைத்துவிட்டு ரயில்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.

4. ஒட்டாவா

டாப்-10 பசுமை நகரங்கள் வரிசையில் இடம் பெற்றிருக்கும் இரண்டாவது கனடா நகரம் இது. அந்நாட்டின் தலைநகரான இது நான்காவது இடம் பிடித்துள்ளது.

இங்கு சொந்த விருப்பத்தின் பேரில் நகரை அழகாக்க வேண்டும் என்று நினைக்கும் குடிமகன்கள் அதிகமாக இருக்கின்றனர். அவர்களின் முயற்சியால் இந்நகர் பசுமையாக மாறியுள்ளது.

இந்நகரின் அதிகபட்ச வெப்பநிலை 37.8 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் -38.9 டிகிரி செல்சியஸ். உலகில் குறைந்த வெப்பநிலை பதிவான தலைநகரங்களில் இது நான்காவது இடத்தை பிடித்துள்ளது. முதல் மூன்று இடங்களில் மங்கோலியாவின் உலன்பட்டார், கஜகஸ்தானின் அஸ்தனா, ரஷ்யாவின் மாஸ்கோ ஆகியவை உள்ளன.

இங்கு ஆண்டுதோறும் வசந்த காலமான ஏப்ரல் 15 முதல் மே 15 வரை ஸ்பிரிங் கிளினிங் என நகரை தூய்மையாகும் நிகழ்ச்சி விழாவாக கொண்டாப்படுகிறது. இதில் சுமார் 60 ஆயிரம் குடிமகன்கள் விருப்பத்துடன் பங்கேற்கிறார்கள். அவர்கள் சாலைகள், பூங்காக்கள், நடைபாதைகள் என அனைத்தையும் தூய்மையாக்கி, பசுமையாக்குகின்றனர்.

இங்கும் மற்ற பசுமை நகரங்களை போல பேருந்துக்களை விட மக்கள் ரயிலை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

5. மின்னபோலிஸ்

அமெரிக்காவின் மின்னிசோடா மாநிலத்தின் மிகப் பெரிய நகர் இது. தூய்மை மற்றும் சுற்றுப்புற சூழலின் நண்பனாக மாற்றியது நகர நிர்வாகத்தின் ஹால்மார்க் செயல்பாடுகளே காரணம் என கூறப்படுகிறது.

இங்கு மழை காலத்தில் கடும் குளிர் ஏற்படும். காற்று உலர்ந்து காணப்படும். ஆனால், வெயில் காலத்தில் வெப்பம் அதிகமிருக்கும் போதும். காற்றில் ஈரப்பதம் அதிகமிருக்கும்.

நகர நிர்வாகம் ரயில் போக்குவரத்துக்கு அதிக வசதிகள் செய்து கொடுத்துள்ளது. அதே நேரத்தில் சைக்கிள் பயணத்தின் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் மக்களுக்கு எடுத்துரைக்கிறது.


6. ஒஸ்லோ

நார்வேயின் தலைநகரான இது கலாச்சாரம், விஞ்ஞானம், வர்த்தகம், நிர்வாகம் என அனைத்திலும் தலைசிறந்து விளங்குகிறது. வங்கி, தொழிற்சாலை, துறைமுகம் போன்ற துறைகளில் நார்வேயின் இணைப்பு நகரமாக விளங்குகிறது.

நகரின் வளர்ச்சி பணி குழுவினர் சுற்றுப்புற சூழலை முக்கிய கொள்ளையாக வகுத்துள்ளனர். அடுத்த ஆண்டு முதல் சுற்றுப்புற சூழலுக்கு அதிக கேடு விளைவிக்காத மனித கழிவுகளில் இருந்து உருவாக்கப்பட்ட எரிபொருளை கொண்டு பேருந்துக்களை இயக்க முடிவு செய்துள்ளனர்.

நகரில் சுமார் 90 பகுதிகளில் சைக்கிள்களை வாடைகக்கு வழங்கி, மக்கள் சைக்கிள் ஓட்டுவதை உற்சாகப்படுத்துகின்றனர்.

7. ஸ்டாக்ஹோம்

சுவீடனின் தலைநகர். 2008ம் ஆண்டு கணக்குபடி சுவீடனின் மக்கள் தொகையில் 21 சதவீதம் பேர் இங்கு தான் இருக்கின்றனர். மொத்த உற்பத்தியில் 35 சதவீதம் இங்கு உருவாகிறது. அந்த அளவுக்கு ஜன நெருக்கடியும், தொழிற்சாலைகளும் நிறைந்த நகரமாக இருந்தாலும் பசுமை நகரங்கள் வரிசையில் இடம்பெற்று சாதித்துள்ளது.

எரிபொருள் பயன்படுத்தும் கார்களில் இருந்து ஹைபிரட் வகை கார்களுக்கு மாறி வரும் உலகின் முன்னணி பகுதியாக சுவீடனை இந்நகர் மாற்றியுள்ளது. இந்த நகரில் ஓடும் கார்களில் 5 சதவீதம் ஹைபிரட் வகையை சேர்ந்தவை.

மற்ற பசுமை நகரங்களை போல் இங்கு போக்குவரத்து துறை பசுமை மற்றும் மாசுகட்டுபாட்டில் உறுதியாக இருக்கிறது.

8. ஜூரிச்

சுவிட்சர்லாந்தின் தலைநகரம் பெர்ன் நகராக இருந்தாலும் அதிக முக்கியத்துவம் பெற்றது ஜூரிச் நகர் தான். முக்கிய வர்த்தக மையம் மற்றும் கலாச்சார தலைநகர்.

கடந்த 2006 முதல் 2009ம் ஆண்டு வரை எடுக்கப்பட்ட பல சர்வேக்களில் உலகில் அனைத்து வசதிகளும் பெற்று வாழ சிறந்த நகராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பாவின் பணக்கார நகராகவும் இருக்கிறது.

இங்கும் பயன்படுத்தப்படும் வாகனங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டு மாசுகட்டுபாடு சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது.

9. கட்ஷூயாமா

டாப்-10 பசுமை நகரங்கள் வரிசையில் இடம்பெற்றுள்ள ஒரே ஆசிய நகரம். ஜப்பானில் புகியூ தீவில் இருக்கிறது. இந்த வரிசையில் இடம்பெற்றுள்ள நகரங்களிலே மிகவும் சிறியது.

இப்பகுதியின் முக்கிய வர்த்தகம் சுற்றுலா தான் என்பதால் பசுமை மற்றும் மாசுகட்டுபாட்டில் கூடுதலான அக்கறை செலுத்தப்படுகிறது.

1954ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த நகரின் மக்கள் தொகை சுமார் 30 ஆயிரம் மட்டுமே. கடந்த 2007ல் சுகாதாரமான நகரங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட சர்வேயில் 9வது இடம் பிடித்திருந்தது. தற்போது இந்த பட்டியலிலும் 9வது இடம் கிடைத்துள்ளது.

10. பெர்ன்

சுவிட்சர்லாந்தின் தலைநகரம். சுமார் 1 லட்சத்து 22 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். பெர்ன் நகரின் வரலாற்று மையம் யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்களில் 1983ம் ஆண்டு இடம்பெற்றுள்ளது. உலகில் வாழ தலைசிறந்த டாப்-10 நகரங்களின் வரிசையிலும் இடம்பெற்றுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X