For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் சராசரியாக 274.9 மிமீ மழை

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இயல்பான மழையளவை விட பல மடங்கு அதிகமாக மழை பெய்துள்ளது.

மாநிலத்திலேயே நீலகிரி மாவட்டத்தில் மிக அதிகபட்சமாக மழை பெய்துள்ளது. தமிழகத்தில் நேற்று வரை 7 நாட்களில் பதிவான சராசரி மழையளவு 274.9 மில்லி மீட்டரை எட்டியது.

கடந்த 7 நாட்களில் மாவட்டம் வாரியாக பெய்துள்ள மழையளவு விவரம்:

சென்னை மாவட்டத்தில் மழையளவு 407.9 மில்லி மீட்டர் பதிவானது. இது இயல்பை காட்டிலும் 386% கூடுதலாகும்.
கோயம்புத்தூரில் மழையளவு 139.4 ம.மீ. இயல்பை காட்டிலும் 263% அதிகம், திருச்சியில் மழையளவு 150.2 மி.மீ. இது இயல்பை விட 358% அதிகம்.

மதுரையில் மழையளவு 157.8 மி.மீ, இயல்பை விட 316% அதிகம். திருநெல்வேலியில் 263.9 மழையளவு பதிவானது. இயல்பான மழையளவைக் காட்டிலும் இது 350% கூடுதலாகும். நீலகிரியில் பதிவான மழையளவு 536.6 மி.மீ. இது இயல்பைக் காட்டிலும் 1245% கூடுதலாகும்.

கடலூர் 404.0 மி.மீ - 422 % கூடுதல், தருமபுரி 72.3 மி.மீ - 189% கூடுதல், திண்டுக்கல் 200.8 மி.மீ - 416% கூடுதல், ஈரோடு 148.5 மி.மீ - 332% கூடுதல், காஞ்சிபுரம் 363.0 மி.மீ - 365% கூடுதல், கன்னியாகுமரி 119.2 மி.மீ - 118% கூடுதல், கரூர் 186.1 மி.மீ - 332% கூடுதல், கிருஷ்ணகிரி 90.5 மி.மீ - 285% கூடுதல், நாகப்பட்டினம் 405.9மி.மீ - 297% கூடுதல், நாமக்கல் 71.2 மி.மீ - 160% கூடுதல், பெரம்பலூர் 149.4 மி.மீ- 254% கூடுதல், புதுச்சேரி 388.1 மி.மீ- 273% கூடுதல், புதுக்கோட்டை 179.1 மி.மீ- 422% கூடுதல், ராமநாதபுரம் 188.7மி.மீ- 242% கூடுதல், சேலம் 72.5 மி.மீ- 154% கூடுதல், சிவகங்கை 171.3 மி.மீ- 310% கூடுதல், தஞ்சாவூர் 181.0 மி.மீ- 263% கூடுதல், தேனி 184.5 மி.மீ- 293% கூடுதல், திருவள்ளூர் 266.5 மி.மீ- 308% கூடுதல், திருவண்ணாமலை 169.0 மி.மீ- 337% கூடுதல், திருவாரூர் 256.9மி.மீ - 296 கூடுதல், தூத்துக்குடி 191.7 மி.மீ - 258% கூடுதல், வேலூர் 99.1 மி.மீ- 208% கூடுதல், விழுப்புரம் 244.3 மி.மீ- 415% கூடுதல், விருதுநகர் 156.9 மி.மீ- 211% கூடுதல். அரியலூரில் மழையளவு 168.2 மில்லி மீட்டர் பதிவானது. இது இயல்பைக் காட்டிலும் 299% அதிகமாகும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X