For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சபரிமலையில் 1 மாதத்தில் ரூ.64 கோடிக்கும் மேல் வசூல்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல கால பூஜை தொடங்கிய ஒரு மாதத்தில் உண்டியல் வசூல் ரூ. 64 கோடியை தாண்டியுள்ளது.

கேரளாவில் உள்ள பிரசித்த பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல கால பூஜை நடந்து வருகிறது. இதற்கு நாடு முழுவதும் இருந்து ஐயப்ப பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

கடந்த மாதம் 16-ம் தேதி மாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. அன்று முதலே கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகம் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனால் கோயில் வருமானமும் கணிசமாக அதிகரித்து உள்ளது.

சபரி்மலையில் கடந்த மாதம் 16-ம் தேதி முதல் இம்மாதம் 15-ம் தேதி வரை வசூலான உண்டியல் காணிக்கை நிர்வாகிகள் முன்னிலையில் எண்ணப்பட்டது. இதில் இதுவரை ரூ. 65 கோடியே 17 லட்சம் வசூலாகி உள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.8 கோடி அதிகம் ஆகும்.

English summary
Devotees throng Sabarimala Ayappan temple for Mandala Pooja. From november 16, the day pooja started, till december 15 the temple income crosses Rs. 64 crore. Compared to last year"s income , this year"s has increased by Rs. 8 crore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X