For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர்கள் வெறும் 10 % மட்டுமே: சுஷ்மா வருத்தம்

By Siva
Google Oneindia Tamil News

Sushma Swaraj
டெல்லி: நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர்கள் வெறும் 10 சதவீதம் தான் உள்ளனர். இது வருத்தம் அளிப்பதாக இருக்கிறது என்று பாஜக தலைவர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

சபாநாயகர் மீராகுமார் பேசுகையில்,

கல்வி, விஞ்ஞானம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பெண்களுக்கு சம உரிமை வழங்க அனைவரும் அர்ப்பணிப்புடன் பாடுபட உறுதி மேற்கொள்வோம் என்றார்.

சுஷ்மா சுவராஜ் பேசியதாவது,

இந்தியாவின் ஜனாதிபதி, சபாநாயகர் உள்ளிட்ட நான்கு பெரிய பதவிகளில் பெண்கள் தான் உள்ளனர். நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர் எண்ணிக்கை வெறும் 10 சதவீதம் மட்டுமே உள்ளது. இது எனக்கு வருத்தம் அளிப்பதாக இருக்கிறது என்றார்.

அப்போது பேசிய மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி சபாநாயகர் தான் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அதற்கு மீராகுமார் 5 மாநில சட்டசபை தேர்தல் முடிந்ததும் இது குறித்து அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டம் கூட்டப்படும் என்று தெரிவித்தார்.

English summary
BJP leader Sushma Swaraj told that the parliament has only 10% women members and this makes her sad. Members insist to pass the women's reservation bill as early as possible. Speaker Meira Kumar announced that she will arrange for all party leaders meet to discuss about this after the elections in 5 states.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X