For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சபரிமலை நடைதிறப்பு: நாளை விஷுகனி உற்சவம்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: சித்திரை விஷு உற்சவத்திற்காக சபரி்மலை ஐயப்பன் கோவில்நடை திறக்கப்பட்டுள்ளது. நாளை அதிகாலை வி்ஷுகனி உற்சவம் நடைபெறுகிறது.

கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் சபரி்மலை ஐயப்பன் கோவிலில் சித்திரை விஷுகனி உற்சவத்திற்காக கோவில் நடை கடந்த 10ம் தேதி மாலை திறக்கப்பட்டது. தந்திரி கண்டேரு மகேஸ்வரரு முன்னிலையில் மேல்சாந்தி பாலமுரளி நம்பூதரி நடையை திறந்தார். அன்றைய தினம் வேறு பூஜைகள் எதுவும் நடக்கவில்லை.

நேற்று அதிகாலை கணபதி ஹோமத்துடன் வழக்கமான பூஜைகள் தொடங்கின. மேலும் நேற்று துவங்கிய சிறப்பு பூஜைகளான புஷ்பாபிஷேகம், படி பூஜை போன்றவை வரும் 18ம் தேதி வரை தொடர்ந்து 8 நாடகள் நடைபெறுகின்றன. நாளை(13ம் தேதி) அதிகாலை சித்திரை விஷுகனி உற்சவம் நடைபெறும். மண்டல, மகர ஜோதி உற்சவத்திற்கு அடுத்தபடியாக அதிகளவு பக்தர்கள் வரும் உற்சவமாக இது திகழ்வதால் பம்பை, சபரி்மலை, சன்னிதானம் ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

English summary
Vishukani utsav will be held in Sabarimala temple tomorrow. Since devotees throng the temple for Vishukani after Makarajyothi, security has been beefed up there.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X