துபாய் தமிழ்ப் பெண்கள் சங்கம் நடத்திய சித்திரை விஜயம் நிகழ்ச்சி
துபாய்: துபாய் தமிழ்ப் பெண்கள் சங்கத்தின் சித்திரை விஜயம் நிகழ்ச்சி கடந்த 17ம் தேதி அன்று ஜபில் ஸ்கூல் கராமாவில் வைத்துச் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு உறுப்பினர்கள் பெருந்திரளாக வந்து சிறப்பித்தனர். காயத்ரி சந்திரசேகர் வந்திருந்தோரை வரவேற்க, தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி இனிதே துவங்கியது. சங்கத் தலைவி மீனாகுமாரி பத்மநாதன் வரவேற்புரை வழங்கியதோடு சித்திரை விஜயம் பற்றி சிறு கவிதை மூலமாகத் தன்னுடைய கருத்துக்களை உறுப்பினர்களுக்கு தெரிவித்துக் கொண்டார்.
சிறு குழந்தைகள் வண்ண உடை உடுத்தி மனதை மயக்கவும், குழந்தைத் தொழிலாளர் குறித்து நச்சென்று சில செய்திகளைக் குழந்தைகளே சொன்ன விதமும் அழகு குறள் சொல்லும் நேரத்தில் அடக்கம் அதிகாரத்தில் குழந்தைகள் குறளோடு பொருள் சொல்லி அடக்கத்தின் மேன்மை விளக்கினர். இந்து பத்மநாதனின் நடன அமைப்பில் பாம்பிற்கும் மயிலுக்குமான நடனம் சபாஷ் சரியான போட்டி என்ற பாரட்டைப் பெற்றது.
வீணை, வயலின், கீபோர்டு மூன்றின் சங்கமத்தில் இசை அமுத மழையாகப் பாய வழி செய்தவர் மாஸ்டர் பாபு அவர்கள். உடலில் ஊனமிருக்கலாம் ஆனால் மனதில் இல்லாமல் இருந்தால் வெற்றி நிச்சயம் என்ற கருத்தில் சிறுவர்களின் நடனத்தை வடிவமைத்து அனைவரின் பாரட்டையும் பெற்றார் ஸ்ரீரங்கநாச்சியார் அசோக்குமார். திருமதி ஷோபா குடும்பத்தினரின் வாழும் வரைப் போராடுவோம் என்ற முயற்சிக்கான பாடல் அருமை. ரமா மலர்வண்ணனின் குழந்தைகள் செய்யும் குறும்புகள் அனைத்தும் ஓவியமே கவிதையும், அவரோடு ரமா ராம்நாத், உமா பாலாஜி ஆகியோரின் பொருள் திரிந்த பழமொழிகளின் சரியான விளக்கம் குறித்தக் கலந்துரையாடலும் அருமையாக இருந்தது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழும், பரிசும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த அனைவருக்கும் மீனாட்சி செட்டிநாடு உணவகத்தின் சுவையான உணவு வழங்கப்பட்டது. வருகை, வெற்றி குறித்த பொருளில் அமைந்த சித்திரை நிகழ்ச்சியின் சிறப்பு போல வருகின்ற அனைத்து நிகழ்ச்சிகளும் அமையட்டும் என்று வந்திருந்தோர் வாழ்த்திச் சென்றது மனதிற்கு நிறைவாக இருந்தது.
நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதோ...

சித்திரை விஜயம்

சித்திரை விஜயம்

சித்திரை விஜயம்

சித்திரை விஜயம்

சித்திரை விஜயம்

சித்திரை விஜயம்

சித்திரை விஜயம்

சித்திரை விஜயம்

சித்திரை விஜயம்

சித்திரை விஜயம்

சித்திரை விஜயம்

சித்திரை விஜயம்

சித்திரை விஜயம்
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications