காதல்னாலே இப்படித்தானா...?

காதலிலும் இப்படித்தான். எத்தனை முறை சண்டை போட்டாலும், எப்படிப்பட்ட சண்டை போட்டாலும் கடைசியில் இருவரும் கூடிக்கொள்ளத்தான் செய்கிறார்கள். ஒரு வேளை காதல்னாலே இப்படித்தானா...
என்னதான் சண்டை போட்டாலும், எப்படித்தான் வாதிட்டுக் கொண்டாலும்
கடைசியில் அந்தப் பிரிவின் மெளனம் மனதை அழுத்தி, இருவரையும் மீண்டும்
நெருங்க வைத்து விடுகிறது. அதுதான் காதல்.
உன்னை நான் நேசிக்கிறேன், உண்மையாக நேசிக்கிறேன், உன் பெயரை மட்டுமே சுவாசிக்கிறேன், உனக்காகவே சுவாசிக்கிறேன் என்று கவிதை எழுதும் அளவுக்கு காதலர்கள், கோபதாபங்களை மறந்து குழந்தை போல யாசிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். நம் மீதான கோபம் பறந்து போய் விடும் என்ற நம்பிக்கை கலந்த எதிர்பார்ப்புதான் அவர்களிடம் மிஞ்சி நிற்கிறதாம்.
நான் உன்னைக் கைவிடுவதுமில்லை
உன்னை விட்டுப் பிரிவதும் இல்லை
சொன்னது நீதானே...
உன்னை வருத்தியிருந்தால்
மன்னித்து விடு...
இந்த சண்டைக்கு முடிவே இல்லை
பாசத்தின் வெடிப்புதான் இந்த கோபத் துடிப்பு
இன்னும் உன் நினைவிலேயே...
மன்னிக்க மாட்டாயா என் தேவதையே... என்று காதலியைப் பார்த்து காதலன் எந்தக் கல்மிஷமும் இல்லாத மனதுடன் சொல்லும்போது எந்த மனதாக இருந்தாலும் இறங்கித்தானே போகும்...
மனதில் எதையும் வைத்துக் கொள்ளாமல் சட்டென இறங்கி வந்து என்னடா என் மீது கோபமா, மன்னித்து விடடா என்று குழைந்து நிற்கும்போது எப்படிப்பட்ட மனதாக இருந்தாலும் மன்னிக்கத்தானே தோன்றும். இன்னும் சொல்லப் போனால், சண்டை போடப் போட உறவுகள் மேலும் மேலும் வலுக்கவே செய்கிறதாம். மன சஞ்சலங்களை, சங்கடங்களைத் துடைத்துப் போட்டு விட்டு எந்தவிதமான ஈகோவும் இல்லாமல், நீதான் எல்லாம், உனக்காவே எல்லாம், என்னைக் கைவிட்டுவிடாதே என்று மனதார இறைஞ்சி நிற்கும்போது எந்தக் காதலிலும் முறிவுக்கு வாய்ப்பே இல்லையாம்.
காதல்னாலே இப்படித்தான்.. மோதல், கோபம், வேகம் என்று ஒருபக்கம் அலையடித்தாலும், மறுபக்கம் தென்றலைப் போல சத்தமே போடாமல் நேசம் கூடிக் கொண்டேதான் இருக்குமாம்... அதுதான் காதல்...!
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications