ஒன்னோட மீசை மேல எனக்கு ரொம்ப ஆசை…. மீசை பற்றி சில சுவாரஸ்யங்கள்
ஆண்களுக்கு அழகு மீசை... அதை ஆண்மையின் அடையாளமாகவும் கூறுகின்றனர். வீரமான ஆண் என்று அடையாளப்படுத்தவும் கூட மீசையை வளர்ப்பதுண்டு. சங்க காலத்தில் ஆண்கள் முறுக்கு மீசையுடன் வலம் வந்தனர்.
நாகரீகம் வளர வளர மனிதனின் நடை, உடை பாவனை மாறியது. முறுக்கு மீசையும் தொங்கு மீசையானது. வெளிநாடுகளில் வசிக்கும் ஆண்களில் பெரும்பாலான பேர் மீசை இல்லாத முகத்தையே விரும்புகின்றனர். தமிழர்களில் பெரும்பாலான பேர் மீசை வைத்துக்கொள்வதை அவசியமாக கருதுகிறார்கள்.
பென்சில் மீசை, முறுக்கு மீசை, புசுபுசு மீசை, புதர் மீசை, ஹிட்லர், சார்லிசாப்லின் மீசை, வீரப்பன் மீசை என பலவித மீசைகள் உண்டு. தமிழ்நாட்டில் மீசையினால் பிரபலமானவர்களும் உண்டு. சில நடிகர்களும் தங்களின் படங்களில் தங்களை வித்தியாசப்படுத்திக் காட்ட வித்தியாசமான மீசை கெட்டப்பில் வந்து ரசிகர்களை கவர்வதுண்டு. மீசையைப் பற்றிய சில தகவல்களைப் பற்றியும் மீசை நாயகர்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்களேன்.

கட்டபொம்மன் – பாரதி
மீசை என்றாலே கட்டபொம்மன் மீசைதான் எல்லோருக்கும் நினைவு வரும். பாரதியின் மீசையும் நாளடைவில் தமிழக மக்களின் மனதில் பதிந்துவிட்ட மீசைகள்.

சிவாஜிகணேசன் மீசை
போலீஸ் வேடத்தில் நடிக்கும் போது முறுக்கு மீசை சிவாஜிக்கு தனி அடையாளத்தை தரும். தேவர்மகன் படத்தில் அந்த அருவா மீசை தனி அடையாளத்தை தந்தது சிவாஜிக்கு.

கமல்ஹாசன் மீசை
கமலஹாசனின் தேவர்மகன் மீசையும், விருமாண்டி மீசையும் ரசிகர்களின் ரசனைக்கு உரியது.

அஜீத் அசல் மீசை
அசல் படத்திற்காக தாடி உடன் இணைத்து மீசை வைத்த அஜீத்திற்கு தனி அடையாளம் தந்தது.

வடிவேலு மீசை
வடிவேலுவின் 23 ஆம் புலிகேசியின் மீசை நகைச்சுவையோடு ரசிக்கத்தக்கதாக இருக்கும்.

சே குவேரா, ஸ்டாலின்
சினிமா நடிகர்கள் தவிர பிரபலங்களாக இருந்தவர்களின் மீசைகள் அவர்களை அடையாளப்படுத்தி காட்டியது. புரட்சி நாயகன் சே, ரஷ்ய தலைவர் ஸ்டாலின் ஆகியோரின் மீசைகள் தனி அடையாளத்தை தந்தவை.

விடுதலைப் புலி பிரபாகரன்
விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மீசையும் அழகாய் அடையாளத்திற்குரியதாய் இருக்கும். பிரபாகரன் சிரிக்கும் அபூர்வ தருணங்களில் அவரது மீசையும் சேர்ந்து சிரிக்கும்.

சந்தனக்கடத்தல் வீரப்பன்
ஒரு காலத்தில் சத்தியமங்கலம் காட்டில் உலாவந்த சந்தனக்கடத்தல் வீரப்பனின் மீசை தனி அடையாளமாக பேசப்பட்டது.

நக்கீரன் கோபால்
பத்திரிக்கை துறையில் இருப்பவர்களில் நக்கீரன் இதழ் ஆசிரியர் கோபால் மீசை தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது.

இனி மீசையைப் பற்றி
பெரிதாக மீசை வளர்த்துப் பராமரிக்கும் ஒருவர் தினமும் 760 தடவையாவது மீசையைத் தடவிக் கொடுப்பதாகச் சொல்லப்படுகிறது. சாதாரணமாக மனிதர்களுக்கு முடி ஒரு நாளைக்கு 0.014 இஞ்ச்சும், ஒரு வருடத்தில் 5 -6 இன்ச்சும் மீசை வளர்கிறதாம்.

வெயில் காலத்தில் வேகம்
பெரிய மீசை ஒரு சில அடையாளத்தையும், தடயத்தையும் மறைக்கப் பயன்படுகிறது. மேலுதட்டிலுள்ள குறைகளையும், தழும்பு மற்றும் வீக்கத்தையும் மறைக்கிறது. உடலில் உள்ள மற்ற இடங்களை விட, மீசைமுடி விரைவாக வளர்வதாகத் தெரிகிறது. குளிர்காலத்தை விட, வெயில் காலத்தில் விரைவாக வளர்கிறது.

அழகோடு தோரணை
ஒரு கணக்கெடுப்பின்படி, 61 சதவிகிதத்தினர் பெரிய மீசை நாகரிகத்தையும், பெரிய மனித தோரணையும் காட்டுவதாகவும், 39 சதவிகிதத்தினர் முட்டாள்களும், கபடர்களும் வளர்ப்பதாகச் சொல்கிறார்கள். நீங்க என்ன சொல்றீங்க?
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications