For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

45 வயதுக்கு மேல் அப்பாவாக நினைக்கிறீங்களா? இதைப் படிங்க!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ஸ்வீடன்: வயதான பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்வதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதைப் போல வயது முதிர்ந்த ஆண்கள் தந்தையாக நினைப்பதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

45 வயதுக்கு மேல் உள்ள ஆண்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் மனநலனில் பிரச்சினைகள் ஏற்படுமாம்.

ஸ்வீடன் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் இது தொடர்பாக மேற்கொண்ட பல ஆண்டுகால ஆய்வில் ஆதாரங்களை கண்டறிந்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.

1973லிருந்து 2001ம் ஆண்டு வரை ஸ்வீடனில் பிறந்த 26 லட்சம் குழந்தைகள் குறித்த சான்றிதழ்களையும், குறிப்புகளையும், பரிசீலித்த ஆய்வாளர்கள் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

இளம் வயதில் அப்பாவாயிடுங்க

இளம் வயதில் அப்பாவாயிடுங்க

20லிருந்து 24 வயதான ஆண்களுக்கு பிறக்கும் குழந்தைகளைக் காட்டிலும், வயதான தந்தைக்கு பிறக்கும் குழந்தைகளே அதிக சிக்கல்களைச் சந்திக்கின்றனர்.

ஆட்டிசம் பாதிப்பு

ஆட்டிசம் பாதிப்பு

45 வயதுடைய ஆணுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு, ஆட்டிசம், கவனக் குறைவு, பிளவுண்ட மனோநிலை ( ஸ்கிஷோப்ரெனியா) போன்ற பிரச்சினைகள் உருவாகும் சாத்தியக்கூறு அதிகம் காணப்பட்டதாக அவர்கள் கூறுகிறார்கள்.

மனநோய் ஆபத்து

மனநோய் ஆபத்து

அதேசமயம் முதிய தந்தையருக்குப் பிறக்கும் குழந்தைகள் மனநோய்ப் பிரச்சினைகளை நிச்சயம் எதிர்கொள்ளும் ஆபத்து சிறிதாகவே இருப்பதாக அவர்கள் கூறினர்.

சரியான வயதில்

சரியான வயதில்

ஆணோ, பெண்ணோ குழந்தை பிறப்பிற்காக வருடங்களைத் தள்ளிப் போடாமல் விரைவில் குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

English summary
Dads who wait until age 45 to have a child may face a significantly increased risk their offspring may have mental health and academic problems including autism, ADHD, schizophrenia, suicidal ideation, low IQ scores and failing grades.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X