ஹூஸ்டனில் தமிழர் சாம் கண்ணப்பன் நிறுவியுள்ள இந்திய அருங்காட்சியம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹூஸ்டன்(யு.எஸ்): டெக்சாஸ் மாநிலத்தில் முதல் ஆசிய அருங்காட்சியத்தை, மாநில அரசு ஆதரவுடன் அமெரிக்கத் தமிழர் சொக்கலிங்கம் 'சாம்' கண்ணப்பன் உருவாக்கியுள்ளார். கண்ணப்பன் அருங்காட்சியம் என்ற பெயருடன் நிறுவப்பட்டுள்ளது. பெரும்பாலும் தமிழக பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் அரும் பெரும் பொருட்களின் சேகரிப்பு உள்ளது.

இது வரையிலும் டெக்சாஸில் 19 அருங்காட்சியங்கள் உள்ளன. இவற்றில் ஒன்று கூட ஆசியாவுக்கானது அல்ல. ஆசிய கண்டத்தை பிரதிபலிக்கக்கூடிய வகையில் வடிவமைப்பதாகத் தான் முதலில் சாம் கண்ணப்பன் எண்ணினார். ஆனால் அவருடைய அரும் பெரும் பொருட்களின் சேகரிப்பை பார்த்த டெக்சாஸ் மாநில அதிகாரிகள் இதை இந்திய அருங்காட்சியமாகவே வடிவமைக்க கேட்டுக் கொண்டனர்.

Indian Museum in Houston

அதைத் தொடர்ந்து மேலும் பல்வேறு பொருட்களை சேகரிக்கத் தொடங்கிவிட்டார். இந்த அருங்காட்சியத்திற்கான தொடக்க விழாவில் பியர்லேண்ட் டாம் ட்ரீட் மற்றும் இந்திய துணைத் தூதுவர் சுரேந்தர் ஆதானா பங்கேற்றனர்.

டாம் ட்ரீட் பேசும்போது பியர்லேண்ட் நகரில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுக்கொரு முறை இந்த தென்னிந்திய அருங்காட்சியத்திற்கு கட்டாய வருகை தருவதற்கு உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக கூறினார்.

தென்னிந்திய, குறிப்பாக தமிழர்கள் வாழ்க்கை முறையை விளக்கும் இந்த அருங்காட்சியத்திற்கு அமெரிக்க மாணவர்கள் வருகை தருவது என்பது தமிழர் பாரம்பரித்திற்கு மிகப்பெரிய அங்கீகாரம் ஆகும்.

Indian Museum in Houston

தற்போது பியர்லேண்ட் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகே ஒரு வாடகை கட்டிடத்தில் அருங்காட்சியம் செயல்பட்டு வருகிறது பொது மக்களின் பார்வைக்கு வாரத்தில் செவ்வாய், வியாழன், ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் அனுமதிக்கப் படுகிறது.. முன் அனுமதி பெற்று மற்ற நாட்களிலும் செல்லலாம்.

பார்வை நேரம் மற்றும் முன் அனுமதிக்கு heidilodc@sbcglobal.net என்ற மெயில் ஐடி அல்லது 713 518 8417 என்ற தொலைபேசி எண்ணில், பொறுப்பாளர் ஹெய்டி வைஸ் 2 (Heidi Wiess) ஐ தொடர்பு கொள்ளலாம்.

மேலும் அருங்காட்சியத்திற்கான கட்டிடம் கட்டுவதற்கு பியர்லேண்ட் நகராட்சியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேயர் டாம் ட்ரீட் ஆவண செய்வதாக கூறியுள்ளார்.

Indian Museum in Houston

அருங்காட்சியத்தின் நிறுவனர் சாம் கண்ணப்பன் டெக்சாஸ் மாநிலத்தில் முக்கியமான முன்னோடித் தமிழர்களில் ஒருவர் ஆவார். தமிழகத்தின் நாட்டரசன் கோட்டையில் பிறந்த அவர், கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக டெக்சாஸில் வசித்து வருகிறார்.

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பொறியியல் பட்டம் பயின்ற பின், ஆஸ்டின், டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலை படித்தார். தொடர்ந்து டெக்சாஸில் சிறப்புப் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

2012 முதல் 2017 வரையிலான காலத்திற்கு Texas Professional Engineers Board ல் Enforcement Committee Chairman ஆக சாம் கண்ணப்பனை டெக்சாஸ் கவர்னர் ரிக் பெர்ரி நியமனம் செய்தது குறிப்பிடத் தக்கது.

தமிழர் ஒருவர் டெக்சாஸில் முக்கிய அரசுப் பணியில் பணியாற்றியது இதுவே முதல் முறையாகும்.. மேலும் பல முக்கிய அமைப்புகளிலும் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வருகிறார்.

சாம் கண்ணப்பனின் 60 வது பிறந்த நாளை ஹூஸ்டன் மேயர் ' கண்ணப்பன் தினம்' என்று ஆணை பிறப்பித்து சிறப்பு செய்தார். தமிழ்நாடு அறக்கட்டளை உள்ளிட்ட தமிழர் அமைப்புகளிலும் பல்வேறு பொறுப்புகள் வகித்துள்ளார்.

கண்ணப்பன் அருங்காட்சியம் அமெரிக்காவில் தமிழர்களின் பாரம்பரியத்தை பறை சாற்றும் முக்கிய அமைப்பாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை.

- இர தினகர்

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Kannappan Art Museum has been inaugurated in Houston Texas by Sockalingam 'Sam' Kannappan. Texas government has given support to this initiative by allotting land for free of cost. Currently the museum is functioning from a rented property near Meenakshi Temple, opened for visitors three days in a week. Initial phase of works started for the construction of the permanent building for the museum. Sam Kannapan is one of the pioneer Tamil living in Texas around 50 years. His 60th birthday was declared as Kannappan Day by Houston Mayor. Sam Kannapan was appointed as Enforcement Committee Chairman of Texas Professional Engineeris Board by Governor Rick Perry, for the period 2012 and 2017.
Please Wait while comments are loading...