அதிகார விளக்கம்: காதலர்களுக்கிடையே ஏற்படும் ஊடல், மனக்கசப்பு, கோபம் மற்றும் அதன் பின்னால் மறைந்திருக்கும் அன்பை இவ்வதிகாரம் எடுத்துரைக்கிறது. ஊடல் காதலின் ஆழத்தை வெளிப்படுத்துவதோடு, மீண்டும் கூடுவதற்கான எதிர்பார்ப்பையும் உருவாக்குகிறது.
| எண் | குறள் |
|---|---|
| 1301 |
புல்லா திராஅப் புலத்தை அவருறும் அல்லல்நோய் காண்கம் சிறிது பொருள்: நாம் ஊடும்போது அவர் அடையும் காதல் வேதனையை நாமும் கொஞ்சம் பார்க்கலாம்; அதனால் அவரைத் தழுவாதே; ஊடல் செய்.
|
| 1302 |
உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல் பொருள்: உணவின் அளவிற்கு ஏற்ப உப்பின் அளவு அமைவதை போல், கலவி இன்பத்திற்கு வேண்டும் அளவிற்கு ஏற்ப ஊடல் அமையட்டும்; அதை அளவு கடந்து கொஞ்சம் நீட்டினாலும், உப்பின் அளவைக் கூட்டுவது போல் ஆகும்.
|
| 1303 |
அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல் பொருள்: தன்னுடன் ஊடல் கொண்ட மனைவியின் ஊடலை நீக்கிக் கூடாமல் போவது, ஏற்கனவே துன்பப்பட்டவர்களுக்கு மேலும் அதிகத் துன்பத்தைக் கொடுத்தது போலாம்.
|
| 1304 |
ஊடி யவரை உணராமை வாடிய வள்ளி முதலரிந் தற்று பொருள்: தன்னுடன் ஊடல் கொண்ட மனைவிக்கு அவள் ஊடலைத் தெளிவுபடுத்தி, அவளுடன் கூடாமல் போவது, முன்பே நீர் இல்லாமல் வாடிய கொடியை அடியோடு அறுத்தது போலாம்.
|
| 1305 |
நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகை பூவன்ன கண்ணார் அகத்து பொருள்: நல்ல குணங்களால் உயர்ந்தவருக்கு அழகு தருவது, பூப்போன்ற கண்ணை உடைய மனைவியின் மனத்தே நடக்கும் ஊடலின் மிகுதியே.
|
| 1306 |
துனியும் புலவியும் இல்லாயின் காமம் கனியும் கருக்காயும் அற்று பொருள்: வளர்ந்த ஊடலாகிய துனியும், இளம் ஊடலாகிய புலவியும் இல்லாது போய்விட்டால், காதல் நிறைந்த இல்லறம், முதிர்ந்த பழமும் இளங்காயும் போல் ஆகிவிடும்.
|
| 1307 |
ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது நீடுவ தன்றுகொல் என்று பொருள்: இனிக் கலவி நீளுமோ நீளாதோ என்று எண்ணுவதால், இன்பத்திற்கு இன்றியமையாத ஊடலிலும் ஒரு துன்பம் உண்டு.
|
| 1308 |
நோதல் எவன்மற்று நொந்தாரென் றஃதறியும் காதலர் இல்லா வழி பொருள்: இவர் நமக்காக வருந்தினார் என்று அவ் வருத்தத்தை அறியும் அன்பரைப் பெறாதபோது, ஒருவர் வருந்துவதால் என்ன பயன்?
|
| 1309 |
நீரும் நிழல தினிதே புலவியும் வீழுநர் கண்ணே இனிது பொருள்: நீரும்கூட வெயிலுக்குக் கீழ் இராமல் நிழலுக்குக் கீழ் இருப்பது இனிமை; ஊடலும் அன்புள்ளவரிடம் மட்டுமே இனிமை ஆனது.
|
| 1310 |
ஊடல் உணங்க விடுவாரோ டென்னெஞ்சம் கூடுவேம் என்ப தவா பொருள்: ஊடி, என் நெஞ்சை வாட விட்டிருப்பவனோடும் கூடுவோம் என்று என் நெஞ்சம் முயல்வதற்குக் காரணம் ஆசையே.
|