அதிகார விளக்கம்: காதலரைப் பார்க்கும் ஏக்கத்தால் தலைவியின் கண்கள் உறக்கமின்றி தவிக்கின்றன. காதலரைப் பார்த்த நினைவுகளும் அவரை மீண்டும் காணும் ஆசையும் கண்களின் துயரத்தை வெளிப்படுத்துகின்றன.
| எண் | குறள் |
|---|---|
| 1171 |
கண்டாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய் தாங்காட்ட யாங்கண் டது பொருள்: தணியாத காதல் துன்பத்தை நான் அறிந்ததே இந்தக் கண்கள் எனக்கு அவரைக் காட்டியதால்தானே? இப்போது அவரைக் காட்டு என என்னிடம் அழுவது எதற்கு?
|
| 1172 |
தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப் பைதல் உழப்ப தெவன் பொருள்: வரப்போவதை அறியாமல் அன்று அவரை எனக்குக் காட்டிய என் மை தீட்டப்பட்ட கண்கள், இன்று இது நம்மால் வந்தது; நாம்தாம் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணாமல் துன்பப்படுகின்றனவே எதற்காக?
|
| 1173 |
கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும் இதுநகத் தக்க துடைத்து பொருள்: அன்றைக்கு அவரை வேகமாகப் பார்த்துவிட்டு, இன்றைக்குத் தனியாக இருந்து இந்தக் கண்கள் அழுவதைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது.
|
| 1174 |
பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா உய்வில்நோய் என்கண் நிறுத்து பொருள்: மை தீட்டப்பட்ட இந்தக் கண்கள் நான் தப்பிக்கவும், வாழவும் முடியாத காதல் துன்பத்தை எனக்குத் தந்துவிட்டுத் தாமும் அழ முடியாமல் நீர் வற்றிப் போய்விட்டன.
|
| 1175 |
படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றக் காமநோய் செய்தவென் கண் பொருள்: கடலைவிடப் பெரிதாகும் காதல் துன்பத்தை எனக்குத் தந்த கண்கள், தாமும் தூங்காமல், துன்பத்தையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றன.
|
| 1176 |
ஓஒ இனிதே எமக்கிந் நோய் செய்தகண் தாஅம் இதற்பட் டது பொருள்: எனக்கு இந்தக் காதல் துன்பத்தைத் தந்த கண்கள் தாமும் தூங்காமல் அழுவது நன்றாகத்தான் இருக்கிறது.
|
| 1177 |
உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து வேண்டி அவர்க்கண்ட கண் பொருள்: விரும்பி மகிழ்ந்து விடாமல் அன்று அவரைக் கண்ட கண்களின் உள் இருக்கும் கண்ணீர் எல்லாம் இன்று வருந்தி வருந்தி வற்றிப் போகட்டும்!
|
| 1178 |
பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க் காணா தமைவில கண் பொருள்: உள்ளத்தால் என்னை விரும்பாமல் வாயால் மட்டுமே விரும்பியவர் நன்றாக இருக்கட்டும்; ஆனால், அவரைக் காண முடியாமல் என் கண்கள் தூங்காமல் இருக்கின்றன.!
|
| 1179 |
வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை ஆரஞர் உற்றன கண் பொருள்: அவர் வராதபோது வரவை எதிர்பார்த்துத் தூங்குவதில்லை. வந்தபோதோ, எப்போது பிரிவாரோ என்று அஞ்சி் தூங்குவதில்லை; இரண்டு வழியிலும் என் கண்களுக்குத் தூங்க முடியாத துன்பந்தான்.
|
| 1180 |
மறைபெறல் ஊராhக் கரிதன்றால் எம்போல் அறைபறை கண்ணார் அகத்து பொருள்: அடிக்கப்படும் பறைபோன்று மனத்துள் இருப்பதை அழுது வெளியே காட்டிவிடும் எம்போன்ற பெண்களின் ரகசியத்தை அறிந்து கொள்வது இவ்வூரில் இருப்பவர்க்கு எளிது.
|