அதிகார விளக்கம்: காதலர்களின் ஊடலுக்குப் பின்னர் ஏற்படும் சமரசமும் மீண்டும் கூடுதலும் தரும் மகிழ்ச்சியை இவ்வதிகாரம் எடுத்துரைக்கிறது. சிறிய மனக்கசப்புக்குப் பிறகு ஏற்படும் இணைவு காதலின் இனிமையையும் நெருக்கத்தையும் மேலும் அதிகரிக்கிறது.
| எண் | குறள் |
|---|---|
| 1321 |
இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல் வல்ல தவரளிக்கும் ஆறு பொருள்: அவரிடம் தவறே இல்லை என்றாலும், அவர் என்னிடம் மிகுந்த அன்பைச் செலுத்தும்படி செய்யவல்லது ஊடல்.
|
| 1322 |
ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி வாடினும் பாடு பெறும் பொருள்: ஊடல் காரணமாக என்னிடம் தோன்றும் சிறு துன்பத்தினால் அவர் என்மீது காட்டும் பேரன்பு வாடினாலும் பெருமை பெறும்.
|
| 1323 |
புலத்தலிற் புத்தேள்நா டுண்டோ நிலத்தொடு நீரியைந் தன்னார் அகத்து பொருள்: நிலத்தோடு நீர் கலந்தாற்போன்ற ஒற்றுமையை உடைய என்னவரோடு ஊடிப் பெறும் இன்பத்தைப் போலத் தேவர்கள் நாட்டு இன்பம் இருக்குமோ?
|
| 1324 |
புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென் உள்ளம் உடைக்கும் படை பொருள்: என்னவரைத் தழுவிக் கொண்டு, விடாமல் இருப்பதற்குக் காரணமாகிய ஊடலில் அதற்குமேலே சென்று என் உறுதியையும் உடைக்கும் ஆயுதம் இருக்கிறது.
|
| 1325 |
தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள் அகறலின் ஆங்கொன் றுடைத்து பொருள்: ஆண்கள் மீது தவறு இல்லை என்றாலும் தவறு செய்தவராகவே நின்று, மனைவியால் ஊடப்பட்டு தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோள்களைக் கூடப் பெறாதபோது, அந்த ஊடலிலும் ஓர் இன்பம் இருக்கிறது.
|
| 1326 |
உணலினும் உண்ட தறலினிது காமம் புணர்தலின் ஊடல் இனிது பொருள்: உண்பதைவிட உண்டது செரிப்பது இனியது; அதுபோலக், கூடிக் கலப்பதை விட ஊடுவது காதலுக்கு இனியது.
|
| 1327 |
ஊடலின் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலிற் காணப் படும் பொருள்: ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவார்; அந்த வெற்றியைக் கூடிப் பெறும் இன்பத்தில் அறியலாம்.
|
| 1328 |
ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு பொருள்: நெற்றி வியர்க்கும்படி கலவியில் தோன்றும் சுகத்தை இன்னுமொரு முறை இவளுடன் ஊடிப் பெறுவோமா?
|
| 1329 |
ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப நீடுக மன்னோ இரா பொருள்: ஒளிமிகும் அணிகளை அணிந்த இவள் இன்னும் என்னோடு ஊடட்டும், அப்போது அதிக நேரம் இருக்கும்படி நான் வேண்டிக்கொள்ள, இந்த இரவு விடியாது நீளட்டும்.
|
| 1330 |
ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின் பொருள்: காதல் நுகர்ச்சிக்கு இன்பம் ஊடுதலே அவ்வூடலுக்கும் இன்பம், அளவு அறிந்து ஊடலை நீக்கிக் கூடித் தழுவுதலே.
|