அதிகார விளக்கம்: காதலர் பிரிவால் தலைவி உடல் மெலிந்து, மனம் வருந்தி, தன் இயல்பான அழகை இழக்கும் நிலையை இவ்வதிகாரம் உணர்ச்சியுடன் விளக்குகிறது. பிரிவு உடலையும் உள்ளத்தையும் ஒருசேர பாதிக்கிறது.
| எண் | குறள் |
|---|---|
| 1161 |
மறைப்பேன்மன் யானிஃதோ நோயை தறைப்பவர்க் கூற்றுநீர் போல மிகும் பொருள்: என் காதல் துன்பத்தை மற்றவர் அறிந்துவிடக்கூடாது என்று மறைக்கவே செய்தேன்; ஆனாலும் இறைக்க இறைக்க ஊற்றுநீர் பெருகுவது போல மறைக்க மறைக்க என் துன்பமும் பெருகவே செய்கிறது.
|
| 1162 |
கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க் குரைத்தலும் நாணுத் தரும் பொருள்: இந்தத் துன்பத்தை என்னால் மறைக்கவும் முடியவில்லை. துன்பத்தைத் தந்த இவருக்கு (எழுத்தில் தொலைபேசியில்) இதைச் சொல்லவும் வெட்கமாக இருக்கிறது.
|
| 1163 |
காமமும் நாணும் உயிர்காவாத் தூங்குமென் நோனா உடம்பின் அகத்து பொருள்: காதல் துன்பத்தையும், அவரிடம் சொல்ல முடியாமல் நான்படும் வெட்கத்ததையும் தாங்க முடியாத என் உடம்பில், என் உயிரையே காவடித் தண்டாகக் கொண்டு அதன் ஒரு புறத்தில் காதல் நோயும், மறுமுனையில் வெட்கமும் தொங்குகின்றன.
|
| 1164 |
காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும் ஏமப் புணைமன்னும் இல் பொருள்: காதல் துன்பம், வெட்கம், இவ்விரண்டிலும் என்னுள் மிகுந்திருப்பது காதல் துன்பம் என்னும் கடலே; அதைக் கடக்கப் பாதுகாப்பான படகுதான் இல்லை.
|
| 1165 |
துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு நட்பினுள் ஆற்று பவர் பொருள்: இன்பம் தருவதற்குரிய நட்பிலேயே துன்பத்தைத் தரம் இவர், பகைமையில் என்னதான் செய்வாரோ?
|
| 1166 |
இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால் துன்பம் அதனிற் பெரிது பொருள்: காதல் மகிழ்ச்சி கடல்போலப் பெரிது; ஆனால் பிரிவினால் அது துன்பம் செய்யத் தொடங்கிவிட்டால் அத்துன்பம் கடலைக் காட்டிலும் பெரிது.
|
| 1167 |
காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன் யாமத்தும் யானே உளேன் பொருள்: காதல் துன்பமாகிய கடலை நீந்தியும் என்னால் கரை காண முடியவில்லை. நள்ளிரவுப் பொழுதினும் உறங்காமல் நான் தனியாகவே இருக்கிறேன்.
|
| 1168 |
மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா என்னல்ல தில்லை துணை பொருள்: பாவம் இந்த இரவு! இது எல்லா உயிர்களையும் தூங்கச் செய்துவிட்டுத் தனியாகவே இருக்கிறது. இதற்கு என்னைத் தவிர வேறு துணை இல்லை!
|
| 1169 |
கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள் நெடிய கழியும் இரா பொருள்: இப்போதெல்லாம் இரவுகள் கழிவதற்கு நெடும்பொழுது ஆகிறது; என்னைப் பிரிந்து போன என் கணவரின் கொடுமையிலும் இவை மிகக் கொடுமையாக இருக்கின்றன.
|
| 1170 |
உள்ளம்போன் றுள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர் நீந்தல மன்னோவென் கண் பொருள்: என் மனம் போலவே என் கண்களும் என்னவர் இருக்கும் ஊருக்குச் செல்ல முடியுமானால், அவை கண்ணீர் வெள்ளத்தில் நீந்தமாட்டா.
|