அதிகார விளக்கம்: கல்வி மனிதனுக்கு அறிவு, சிந்தனை, தெளிவு மற்றும் உலகைப் புரிந்துகொள்ளும் திறனை வழங்குகிறது. கற்ற அறிவை நடைமுறையில் பயன்படுத்தி வாழ்வை மேம்படுத்துவதும், தொடர்ந்து கற்றுக்கொள்வதும் உயர்வுக்கு வழியாகும்.
| எண் | குறள் |
|---|---|
| 391 |
கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக பொருள்: கற்கத் தகும் நூல்களைப் பிழை இல்லாமல் கற்க; கற்ற பிறகு கற்ற கல்விக்கு ஏற்ப நல்ல வழிகளில் வாழ்க.
|
| 392 |
எண்ணென்ப ஏனை யெழுத்தென்ப இவ்விரண்டுங் கண்ணென்ப வாழும் உயிர்க்கு பொருள்: வாழும் நல்லவர்க்கு அறிவியலும் கலைஇயலும் சிறந்த கண் என்று அறிந்தவர் கூறுவர்.
|
| 393 |
கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர் பொருள்: கற்றவரே கண் உடையவர்; கல்லாதவரோ முகத்தில் இரண்டு புண்ணையே உடையவர்.
|
| 394 |
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில் பொருள்: மற்றவர்கள் கூடி வரும்போது, மனம் மகிழ அவர்களுடன் கலந்து பேசி, இனி இவரை எப்போது, எவ்வாறு சந்திக்கப் போகிறோம் என்று அவர்கள் எண்ணுமாறு பிரிவது கற்று அறிந்தவரின் செயல்.
|
| 395 |
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார் கடையரே கல்லா தவர் பொருள்: செல்வர் முன்னே ஏழைகள் நிற்பது போல் ஆசிரியர் முன்னே, விரும்பிப் பணிந்து கற்றவரே உயர்ந்தவர்; அப்படி நின்று கற்க வெட்கப்பட்டுக் கல்லாதவர், இழிந்தவரே.
|
| 396 |
தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு பொருள்: மணலில் தோண்டிய அளவு சிறு குளத்தில் நீர் ஊறும்; மக்கள் கற்ற அளவே அறிவும் வளரும்.
|
| 397 |
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு பொருள்: கற்றவனுக்கு எல்லா நாடும் சொந்த நாடாம்; எல்லா ஊரும் சொந்த ஊராம். இதனைத் தெரிந்தும் ஒருவன் இறக்கும் வரை கூடப் படிக்காமல் இருப்பது ஏன்?
|
| 398 |
ஒருமைக்கண் தான்னற்ற கல்வி ஒருவற் கெழுமையும் ஏமாப் புடைத்து பொருள்: ஒருவன் ஒரு பிறவியில் கற்ற கல்வி, அவனுக்கு ஏழு பிறப்பிலும் – எழும் பிறவிதோறும் கூடவே சென்று உதவும்.
|
| 399 |
தாமின் புறுவ துலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார் பொருள்: தம் மனத்தை மகிழ்விக்கும் கல்வியினால் உலகம் மகிழ்வதைக் கண்டு கற்று அறிந்தவர்கள் மேலும் கற்கவே விரும்புவார்கள்.
|
| 400 |
கேடில் விழுச் செல்வங் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை பொருள்: கல்வியே அழிவு இல்லாத சிறந்த செல்வம்; பிற எல்லாம் செல்வமே அல்ல.
|