அதிகார விளக்கம்: தனது குறைகளையும் தவறுகளையும் அறிந்து அவற்றை நீக்கிக் கொள்வது நல்ல வாழ்க்கைக்கு அவசியம். பிறரின் குறைகளைக் கண்டுபிடிப்பதற்கு முன் தன் குறைகளை ஆராய்ந்து திருத்திக்கொள்வதே உண்மையான அறிவாகும்.
| எண் | குறள் |
|---|---|
| 431 |
செருக்குஞ் சினமுஞ் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து பொருள்: தான் என்னும் அகங்காரம், கோபம், பெண்ணாசை என்னும் சிறுமை இவை இல்லாத ஆட்சியாளர்களின் செல்வம் மேன்மையானது.
|
| 432 |
இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா உவகையும் ஏதம் இறைக்கு பொருள்: நியாயமாகத் தேவைப்படுவோர்க்குத் தேவையானவற்றைக் கொடாதிருப்பது, பெரியோர் என்று தெரிந்தும் தம் பதவிப் பெருமை கருதி வணங்காதிருப்பது, தீயவற்றில் மகிழ்வது – இவை ஆட்சியாளர்க்குக் குற்றங்களாம்.
|
| 433 |
தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார் பொருள்: பழிபாவங்களுக்கு அஞ்சி, நானும் பெரியோர், தினை என மிகச்சிறிய அளவே குற்றம் வந்தாலும், அதனைப் பனை என மிகப்பெரிய அளவாகக் கொள்வர்.
|
| 434 |
குற்றமே காக்க பொருளாகக் குற்றமே அற்றந் தரூஉம் பகை பொருள்: அரசிற்கு அழிவுதரும் பகை மனக்குற்றந்தான். அதனால் அக்குற்றம் தன்னிடம் வராமல் காப்பதையே பொருளாகக் கொள்ள வேண்டும்.
|
| 435 |
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும் பொருள்: தனக்கு ஒரு குற்றம் வருவதற்கு முன்பே வராமல் காத்துக் கொள்ளாத அரசு, நெருப்பிற்கு முன் வைக்கப்பட்ட வைக்கோல் போல அழிந்துபோகும்.
|
| 436 |
தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின் என்குற்ற மாகும் இறைக்கு பொருள்: முதலில் தன் குற்றத்தைக் கண்டு விலக்கிப் பிறகு அடுத்தவர் குற்றத்தைக் காணும் ஆற்றல் மிக்க அரசிற்குக் குற்றம் ஏதும் வராது!
|
| 437 |
செயற்பால செய்யா திவறியான் செல்வம் உயற்பால தன்றிக் கெடும் பொருள்: செல்வத்தால் தனக்குச் செய்து கொள்ள வேண்டியவற்றைப் பொருள்மீது கொண்ட பற்றினால் செய்யாமல், கஞ்சனாய் வாழும் ஆட்சியாளனின் செல்வம் வீணே கெட்டு, அழிந்து போகும்.
|
| 438 |
பற்றுள்ள மென்னும் இவறன்மை எற்றுள்ளும் எண்ணப் படுவதொன் றன்று பொருள்: செலவிட வேண்டியவற்றிற்குச் செலவிடாமல் செல்வத்தின் மீது ஆசை கொண்ட கஞ்ச மனத்தைப் பெற்றிருப்பது குற்றங்கள் எல்லாவற்றிலும் கொடிய குற்றமாகும்.
|
| 439 |
வியவற்க எஞ்ஞான்றுந் தன்னை நயவற்க நன்றி பயவா வினை பொருள்: எவ்வளவு பெரிதாக வளர்ந்தாலும் அகங்காரம் கொண்டு பெரிதாகப் பேசாதே; நாட்டுக்கும் ஆட்சிக்கும் நன்மை தராத செயல்களைச் செய்ய விரும்பாதே.
|
| 440 |
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் ஏதில ஏதிலார் நூல் பொருள்: தான் செய்ய எண்ணியவற்றைப் பிறர் முன்னதாகவே அறிந்துவிடாதபடி காத்தால், அவனை அழிக்க எண்ணும் பகைவர் எண்ணம் பழுதுபடும்.
|