அதிகார விளக்கம்: பிறரை அன்புடனும் இரக்கத்துடனும் அணுகி, அவர்களின் நிலையைப் புரிந்துகொண்டு மனிதநேயத்துடன் நடப்பது கண்ணோட்டமாகும். பிறரின் துன்பத்தை உணர்ந்து உதவுவது நல்ல உறவுகளையும் சமூக ஒற்றுமையையும் வளர்க்கிறது.
| எண் | குறள் |
|---|---|
| 571 |
கண்ணோட்டம் என்னுங் கழிபெருங் காரிகை உண்மையான் உண்டிவ் வுலகு பொருள்: முகம் பார்த்தல் என்னும் பேரழகு மனிதருள் இருப்பதால்தான் மக்கள் வாழ்க்கை தொடர்கின்றது.
|
| 572 |
கண்ணோட்டத் துள்ள துலகியல் அஃதிலார் உண்மை நிலக்குப் பொறை பொருள்: மக்கள் வாழ்க்கை கண்ணோட்டத்தால்தான் இயங்குகின்றது அக்கண்ணோட்டம் இல்லாதவர் வாழ்வது இப்பூமிக்கு பாரமே.
|
| 573 |
பண்ணென்னாம் பாடற் கியைபின்றேற் கண்ணென்னாங் கண்ணோட்டம் இல்லாத கண் பொருள்: பாடப்படும் பாடலுக்குப் பொருந்தவில்லை என்றால் ராகத்தால் என்ன பயன்? அதுபோல கண்ணோட்டம் இல்லை என்றால் கண்ணால்தான் என்ன பயன்?
|
| 574 |
உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினாற் கண்ணோட்டம் இல்லாத கண் பொருள்: வரம்பிற்கு உட்பட்ட கண்ணோட்டம் இல்லாத கண், முகத்தில் இருப்பது போல் இருக்கிறதே தவிர, அதனால் வேறு என்ன பயன் உண்டு?
|
| 575 |
கண்ணிற் கணிகலங் கண்ணோட்டம் அஃதின்றேற் புண்ணென் றுணரப் படும் பொருள்: ஒருவன் கண்ணிற்கு அணியும் நகை கண்ணோட்டமே; அந்த நகை மட்டும் இல்லை என்றால் அது புண் என்று பெரியோரால் அறியப்படும்.
|
| 576 |
மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ டியைடந்துகண் ணோடா தவர் பொருள்: கண் பெற்றிருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர் இயங்கினாலும் மண்ணோடு சேர்ந்து இயங்காமல் நிற்கும் மரம் போன்றவரே.
|
| 577 |
கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார் கண்ணோட்டம் இன்மையும் இல் பொருள்: கண்ணோட்டம் இல்லாதவர் கண் இல்லாதவரே; கண் இருப்பவர் கண்ணோட்டம் இல்லாதவராக இருப்பதும் இல்லை.
|
| 578 |
கருமஞ் சிதையாமற் கண்ணோட வல்லார்க் குரிமை உடைத்திவ் வுலகு பொருள்: தம் செயலுக்குச் சேதம் வராமல் கண்ணோட்டம் கொள்ளும் ஆற்றல் உடையவர்க்கு இந்த உலகம் சொந்தமாகும்.
|
| 579 |
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப் பொறுத்தாற்றும் பண்பே தலை பொருள்: தம்மை வருத்தும் இயல்புடையவரிடத்திலும் கண்ணோட்டம் கொண்டு, அவர்தம் பிழையைப் பொறுக்கும் பண்பே சிறந்தது.
|
| 580 |
பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர் பொருள்: எல்லாராலும் விரும்பத்தக்க நாகரிகத்தை விரும்புபவர், தமக்கு நெருக்கமானவர் நஞ்சையே தருகிறார் என அறிந்தும் கண்ணோட்டம் காரணமாக அதை உண்டு அவருடன் பழகுவர்.
|