அதிகார விளக்கம்: கல்வியின்மை மனிதனின் அறிவையும் சிந்தனையையும் செயல்திறனையும் குறைக்கிறது. கற்றவர்களின் முன்னிலையில் அறியாமை வெளிப்படும் என்பதால், வாழ்க்கையில் முன்னேறுவதற்கு கல்வியைப் பெற்று அறிவை தொடர்ந்து வளர்த்துக்கொள்ள வேண்டும்.
| எண் | குறள் |
|---|---|
| 401 |
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல் பொருள்: அறிவு வளர்ச்சிக்கு ஏற்ற நூல்களைக் கல்லாதவர், கற்றவர் அவையில் பேசுவது, கட்டம் போடாமல் தாயம் உருட்டுவது போலாம்.
|
| 402 |
கல்லாதான் சொற்கா முறுதன் முலையிரண்டும் இல்லாதாள் பெண்காமுற் றற்று பொருள்: படிக்காதவன் கற்றவர் அவையில் பேச ஆசைப்டுபடுவது, இரு முலையும் வளர்ச்சி பெறாத பெண் ஒருத்தி உடலுறவு கொள்ள ஆசைப்பட்டது போலாம்.
|
| 403 |
கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன் சொல்லா திருக்கப் பெறின் பொருள்: கற்றவர் அவையில் பேசாதிருந்தால் படிக்காதவரும் மிகநல்லவரே.
|
| 404 |
கல்லாதான் ஒட்பங் கழியநன் றாயினுங் கொள்ளார் அறிவுடை யார் பொருள்: படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும்.
|
| 405 |
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும் பொருள்: படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும்.
|
| 406 |
உளரென்னும் மாத்திரைய ரல்லால் பயவாக் களரனையர் கல்லா தவர் பொருள்: படிக்காதவர் உடலால் இருப்பவர் என்று சொல்லும் அளவினரே அன்றி, எவர்க்கும் பயன்படாதவர், ஆதலால் விளைச்சல் தராத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.
|
| 407 |
நுண்மாண் நுழைபுல மில்லான் எழினலம் மண்மாண் புனைபாவை யற்று பொருள்: நுண்ணிய, சிறந்த பல நூல்களிலும் நுழைந்த அறிவு இல்லாதவனின் உடல் வளர்ச்சியும் அழகும், மண்ணால் சிறப்பாகச் செய்யப்பட்ட பொம்மையின் அழகு போன்றதாகும்.
|
| 408 |
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே கல்லார்கண் பட்ட திரு பொருள்: படிக்காதவரிடம் இருக்கும் செல்வம், நல்லவரிடம் இருக்கும் வறுமையைக் காட்டிலும் கொடியது.
|
| 409 |
மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங் கற்றா ரனைத்திலர் பாடு பொருள்: படிக்காதவர் மேல்சாதியில் பிறந்திருந்தாலும், கீழ்சாதியில் பிறந்திருந்தும் படித்தவர் அளவிற்குப் பெருமை இல்லாதவரே.
|
| 410 |
விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல் கற்றாரோ டேனை யவர் பொருள்: விலங்கை நோக்க மக்கள் எவ்வளவு வேறுபட்டவரோ, சிறந்த நூலைக் கற்றவரை நோக்கக் கல்லாதவர் அவ்வளவு வேறுபட்டவர்.
|