அதிகார விளக்கம்: உடல்நலத்தைப் பாதுகாக்க உணவின் அளவு, உடல்நிலை, நோயின் தன்மை மற்றும் சரியான சிகிச்சையை கவனிக்க வேண்டும். அளவான உணவு மற்றும் ஒழுங்கான வாழ்க்கை பல நோய்களைத் தவிர்க்க உதவும்.
| எண் | குறள் |
|---|---|
| 941 |
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று பொருள்: மருத்துவ நூலோர் சொல்லும் வாதம், பித்தம், சிலேட்டுமம் என்னும் மூன்றாம் ஒருவனின் உணவாலும், செயலாலும் அவற்றுக்கு ஒத்து இல்லாது. மிகுந்தோ, குறைந்தோ இருந்தால் நோய் உண்டாகும்.
|
| 942 |
மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய தற்றது போற்றி உணின் பொருள்: ஒருவன் முதலில் உண்டது சீரணமாகிவிட்டதை நன்கு அறிந்து அதன் பிறகு உண்டால், அவன் உடம்புக்க மருந்து என்று ஒன்று வேண்டியது இல்லை.
|
| 943 |
அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு பொற்றான் நெடிதுய்க்கும் ஆறு பொருள்: முன்பு உண்டது சீரணமாகிவிட்டது தெரிந்தால், அடுத்து உண்பதைத் தேவையான அளவு அறிந்து உண்க; அப்படி அளவாக உண்பதே இந்த உடம்பைப் பெற்றவன் அதை நெடுங்காலம் கொண்டு செல்லும் வழி.
|
| 944 |
அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல துய்க்க துவரப் பசித்து பொருள்: முன்பு உண்டது சீரணமாகிவிட்டதை அறிந்து நன்கு பசிக்கும்போது உடம்பிற்கும் காலத்திற்கும் ஒவ்வாத உணவினை விலக்கி, வேண்டியவற்றை உண்க.
|
| 945 |
மாறுபா டில்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபா டில்லை உயிர்க்கு பொருள்: ஒருவன் உடம்பிற்கு ஒவ்வொத உணவுகளை விலக்கி உண்டால், அவன் உயிர்க்கு நோயால் வரும் துன்பம் இல்லை.
|
| 946 |
இழிவறிந் துண்பான்கண் இன்பம்போல் நிற்கும் கழிபேர் இரையான்கண் நோய் பொருள்: குறைவாக உண்பதே நல்லது என்று அறிந்து உண்பவனிடம் இன்பம் விலகாமல் இருப்பது போல் மிக அதிகமாக விழுங்குபவனிடம் நோய் விலகாமல் இருக்கும்.
|
| 947 |
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின் நோயள வின்றிப் படும் பொருள்: தன் வயிற்றுப் பசி அளவு தெரியாமல் மிக அதிகமாக உண்டால் அவன் உடம்பில் நோய்கள் அளவு இல்லாமல் வளரும்.
|
| 948 |
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் பொருள்: நோயாளியின் உடல்மாற்றங்களால் வந்துள்ள நோயை இன்னது என்று அறிந்து அந்த நோய் வருவதற்கான மூல காரணத்தையும் அதைத் தீர்க்கும் வழியையும் அறிந்து அதைப் போக்குவதில் தவறு வந்துவிடாமல் மருத்துவர் செயல்பட வேண்டும்.
|
| 949 |
உற்றான் அளவும் பிணியளவும் காலமும் கற்றான் கருதிச் செயல் பொருள்: மருத்துவ நூலை நன்கு கற்ற மருத்துவர், நோயாளியின் நோயைப் போக்க முயலும்போது, நோயாளியின் வயது, அந்நோய் வந்திருக்கும் காலம், நோயைப் போக்கத் தனக்குத் தேவையாகும் காலம் ஆகியவற்றை எண்ணிச் செயல்பட வேண்டும்.
|
| 950 |
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென் றப்பானாற் கூற்றே மருந்து பொருள்: நோயாளி, மருத்துவர், மருந்து, அதைத் தயாரிப்பவர் என மருந்து நான்கு வகைப்படும்.
|