கருகிய அரும்புகள்:
அவர்கள்
சின்னஞ்சிறு மனிதர்கள்;
இன்றைய மொட்டுகள்;
நாளைய நம்பிக்கைகள்.
அவர்கள்
மாலையில் கிரிக்கெட்
விளையாடவோ,
டாம் அண்ட் ஜெர்ரி பார்க்கவோ,
சீயான் விக்ரம் ஆட்டத்தை
காணவோ நினைத்து
இருந்திருப்பார்கள்.
களைத்து வரும் பிள்ளைகளுக்கு
சிற்றுண்டி தந்துவிட்டு,
நாளை இவன் டாக்டர்
என்று கனவு காண
பெற்றோர்கள் நினைத்து
இருந்திருப்பார்கள்.
ஆனால், தீயின்
கோர நாக்குகளில் சிக்குண்டு
அடையாளந் தெரியாமல்
போவார்கள் என்று
யாரேனும் நினைத்ததுண்டா?
நாளைய நம்பிக்கையை இழந்த,
பெற்றோர்களை தேற்றலாம்தான்,
இத்துயரில் இருந்து
சீக்கிரம் நாம் மீண்டுவிட்டால்...!
வேறு எதையாவது நினைத்து
இதை மறக்கலாம் என்றால்,
எந்தத் தீயைப் பார்த்தாலும்
அந்தப் பிஞ்சுகள் நினைப்பு வருகிறதே!
ஆமாம், அக்னிதேவன்
அரக்கனானது எப்போது?
முன்னொரு காலத்தில்
நந்தனை எரித்த தீ,
அன்று யாழ்ப்பாண
நூலகத்தை கொளுத்திய தீ,
நேற்று ஜெயஸ்ரீயின்
சுற்றத்தையும் நட்பையும்
பொசுக்கிய தீ,
இன்று ஒரு பள்ளியை
மயனமாக்கிவிட்டது.
தீக்குள் விரல் வைக்கும்
இன்பம் எல்லாம்
போய்விட்டது பாரதி!
இப்போது எந்த
நெருப்பைப் பார்த்தாலும்
வெறுப்புதான் படர்கிறது.
- அனுஷிராம்([email protected])
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications