ஒற்றைப் பனைமரம்
வெட்ட வெளியிடை
ஒற்றைப் பனைமரமே..!
உனக்குத்தான் எத்தனை முகங்கள்.
விதையாய்
வடலியாய்
பனை மரமாய்
வளர்ந்த உன்
வளர்ச்சிக்கு மேலாய்
என் வாழ்வுடன்
எப்படி ஒன்றிப்போனாய்.
சிறு வயதில்
உன்னடியில்
ஓடிப்பிடித்து விளையாடியதும்
பனம்பழம் பொறுக்கியதும்
உனது கரங்கள்
விறகாய் எரிந்ததுமாய்
ஒரு பாச முகம்.
எங்கள் பாதுகாப்புக்கு
உனது சகோதரர்களுடன்
அரண் செய்த காலம்போய்
அவர்களை வெட்டியெடுத்து
அரண்செய்த காலத்திலும்
நிமிர்ந்து நின்றாயே
அந்த ஒரு வீர முகம்.
ஊரை விட்டு
நாங்களெல்லாம்
ஓடிப்போன ஓரிரவிலும்
எங்களுடன் ஓடிவராமல்
மண்ணொடு மண்ணாய் நின்றாயே.
மண்பற்று நிறைந்த முகத்துடன்;
நாங்களெல்லாம்
திரும்ப வந்தபோது
உனது சகோதரர்களை
காவலரண்களில் கண்டோமே
அவர்களுக்குக் காவலாய்;
அந்தவொரு
துரோக முகம்.
எங்கோ ஒருவீட்டில்
விழவிருந்த
ஷெல்லை
உன் தலையில் தாங்கி
முண்டமாக நிற்கையிலும்
நிமிர்ந்திருக்கும்
தியாக முகம்.
இன்றோ
தனியனாய்
உன்னடியில்
நிற்கும் போதுதான்
எனக்கும் தோன்றுகிறது
எனக்கும் உனக்கும்
எவ்வளவு ஒற்றுமை பார்.
நீயும் நானும்
இவ்வளவு முகங்களுடன்
ஒற்றைப் பனைமரங்களாய்...!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications