மீண்டும்....மீண்டும்..
எனது சிதைகளினின்றே
அன்றைய எலும்புகளைப் பொறுக்கிக்கொண்டு
ஏன் இன்று சிறகடிக்கிறாய் ஃபீனிக்ஸாய்?
அன்று வடிந்த வெள்ளத்தின்
வண்டல்களில் பதிந்த உன் நகக்கீறல்களை
மீண்டும் வரையாதே என்கரைகளில்.
என் உறுதிகளாம் இரவுத்திரைகளை
உன் சிரிப்பின் ஒளிக்கீற்றால்
கிழிப்பதில் சிந்தும் ரத்தத்தில்
உன் வஞ்சகங்களின் நஞ்சு நீலமாய்.
பிரிவின் நினைவுகளே
என் தனிமையின் துணைகளானபின்
மீண்டும் நனவுகளின் நிழல்களால்
ஏன் என் கற்பனை விளக்குகளில்
இருள் பாய்ச்சுகிறாய்?
என்றேனும் இந்நிழல் நிஜமாகுமென்ற
அச்சத்திலேயே இதுகாறும்
ஒளி தவிர்த்தேன்
இந்நினைவுச்சிலைகள்மேல்.
பின்னரே புரிந்தது
தாங்கிய சிலைகள்
சிலுவைகளேயென..
நினைவுகள் உயிர்க்குமாயின்
நெஞ்சில்வேரூன்றி
உயிர் உறிஞ்சுமென்றஞ்சி
ஒவ்வொரு நினைவுத் துளிரையும்
துண்டித்தெறிந்தேன்..
வெட்டுப்பட்டது என் வேர்களேயென
அறியாமலேயே..
பயணப்படு..
இப்பதர்கள்
வேறு நிலங்களில் வளர்ந்து,
சாவிகளை அறுவடைக்கு
அனுப்பிவைக்க,
அறியாக் கிரகங்களின்
உதயங்களை கிரகணமடித்து
இருளை மேலும் கனக்கவைக்க,
உன் சிரிப்புகள் தேவைப்படும்
அயல்வெளிகளில்...
திரும்பி நீ வேறு உருக்கொண்டு
வந்திடுவாயென அறிந்த பின்பும்
வலுக்கட்டாயமாக விடையளிக்கிறேன்.
அன்றுவரை
அமைதியாக இறக்கவிடு..
என்னருகே என்னை
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications