கள்ளுக்கும் கள்
-ஆனந்த்
கண்ணே கண்மணியே என்றுனைப்
புகழப் போவதில்லை - நின்
கண்கள் என்னைக் காயப்படுத்தியதால்!
என் வாழ்வுதனை
இருட்டாக்கிடவா நின்
விரிந்த கூந்தலுக்குள் இரவினை
மறைத்து வைத்தாய்?
வெண்மேகங்களைக் கண்ணுக்குள்
பரவவிட்டு
விண்மீன்களைக் கருவிழிகளாய்
அணிந்தவளே!
என்னை மட்டும் காலணியாய்
அணிந்ததன் காரணம்
நினைத்ததும் தூக்கி எறியத்தானா?
தடாகக் கமலமதைத் தாங்கிடத்
திறனின்றித் தள்ளாடித் தாலாட்டும்
தண்டு போல
வாடாமலர் நின் முகமதைச்
செங்கழுத்து எப்படித் தாங்கிடுமென்றுத்
தவித்திருந்தேன் - இன்றோ
இப்புவி கூட எனைத்
தாங்கிடத் தயங்குகிறதே!
நீ நடக்கையில்
பறந்திடும் தூசியதை உயிர் வாயுவாய்
சுவாசித்திருந்தேன் - இன்றென்
சுவாசமோ
நேரம் பார்த்து நின்றிடக் காத்துக் கிடக்கிறது,
நல்ல காற்றிருந்தும்!
பேதைப்பெண் என்றுரைத்து ஆண்
மேதையையும் பேதையாக்கும்
கன்னிப் பெண்ணவள்
கள்ளுக்கும் கள்!
-ஆனந்த்([email protected])
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications