For Quick Alerts
For Daily Alerts
Just In
காதலின் சப்தம்

காதலின் சப்தத்தை
எழுதச்சொன்னாய்
அதிகாலை என் ஜன்னலோரம்
மெல்லிறகை அசைத்துப்பறந்த
புறாவின் சப்தமாகவோ
மெந்தூரலில் நுழைந்தாடும்
காற்றின் சப்தமாகவோ
பெருங்கூட்டத்தில்
சிதைந்தாடும் வார்த்தைக்குவியலின்
கலவைச் சத்தமாகவோ
தீரா வெயிலின் நடைகளைப்பில்
முதிர்கிழவியின் நிழல்கண்ட
ஆசுவாச அனுபவிப்பின்
சப்தமாகவோ
மலர்கூட்டம் புகுந்தாடும்
சில்வண்டுகளின் சப்தமாகவோ
இதுவெதுமில்லா
சிறுகுழந்தையின்
முதல் அழுகை,
முதல் முத்தச்சப்தமாகவே பட்டதெனக்கு....
-ரிஷி சேது (rishi_sethu23@rediffmail.com)