'அதுவே கடவுள்'...

எங்கும் நிறைந்திருக்கிறது
வார்த்தைகள்-தனக்கானவொன்றை
தேடிப்பிடித்து அனிந்து வெளிவரும்
தானே வளரும் ஓர் புதர்ச்செடியாய்....
என் கவிதைகள்
நீண்ட பெருமூச்சினூடே
பெரும்பணக்காரியாகிவிடும்
நிச்சயமில்லா கனவுகளோடே
வெண்டையும் கத்தரியும் தெருவெங்கும் கூவிப்போகிறாள்
கூன் கிழவி
எல்லா வெண்டையையும் முத்தாலாவென
ஒடித்துப் பார்த்துவிட்டு விலைபேசும்
ஏழையாகிவிட பயப்படுமொரு கூட்டம்...
எல்லாரும் பயப்படும்படி
நடு நிசியில் ஜக்கம்மாவின் துணையோடு
நல்லகாலம் பிறக்க வைக்கும் குடுகுடுப்பை
மழைக்கு ஒதுங்க இடமின்றி
பிய்ந்த சாக்குத்துணி போர்த்தி காடேகுவான்
ஜக்கம்மாவைத்தேடி......
இந்தமுறையேனும் கண்ணைத்திருடும்
அல்வாவையும் கோபுரங்களென அடுக்கிவைத்த
மிட்டாய்களையும் வாங்கி வரவேண்டும்...
திருவிழாவில் நுழையுமுன்னான முடிவினில்
கரகாட்டக்காரியின் பரிசாய் போன ரொக்கம் போக
இம்முறையும் குண்டுபலூன் வாங்கிப்போனான்....
மகள் உறங்கிக் கொண்டிருந்தாள்
கனவினில் இனிப்பை சுவைத்து...
தடுமாறும் எண்ணஓட்டம்
கால் நனைக்க பயந்து
அலைபார்த்து நின்றிருந்தேன்
ஊழிபெருஞ்சுழி தொடர
ஆழிப்பேரலை அடித்துப்போனதில்
நீயென்ன நானென்ன
இயற்கையே
ஆக்கவும் காக்கவும் மேலும் அழிக்கவும் செய்யுமாயின்
அதுவே கடவுள்...
-ரிஷி சேது ( [email protected] )
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications