உனக்கென ஓர் கவிதை...!!!
- சிவசங்கரி கலியமூர்த்தி
உள்ளத்தையே உன்னிடம்
ஒப்படைத்து விட்டேனே...
உணர்ந்துமா உனக்கென
ஓர் கவிதையை கேட்கிறாய்...?
உயிரையே உனக்காய்
தரத் துணிந்தேனே...
அறிந்துமா என்னை
சோதித்து பார்க்கிறாய்...?

வறண்ட நெஞ்சத்தில்
வான்மழையாய் விழுந்தாயடி...
இருண்ட இதயத்தில்
எழில்மதியாய் நுழைந்தாயடி...
கருவண்டு விழியாலே
கணந்தோறும் வதைத்தாயடி...
கற்கண்டு சிரிப்பாலே
கணையொன்றை தொடுத்தாயடி...
கனவை வருடி
கற்பனையை திருடி
ஒற்றை முத்தத்தால்
உலகையே கொடுத்தாயடி...
மங்கை உனைக்கண்டு
மதியிழக்க வைத்தாயடி...
மன்னன் எனைஉன்முன்
மண்டியிட செய்தாயடி...
சுட்டெரிக்கும் சூரியனையும்
கட்டியிழுக்கும் செந்தாமரையே...
முற்றும் துறந்த முனிவனையும்
பித்தேற செய்யும் மோகினியே...
அருந்தமிழ் வளர்த்த
அகத்தியனும் கூட உன்
அழகை பாட
அரும்பாடு படுவானடி...
முத்தமிழ் கடவுள்
முருகனும் உன்னழகை
முழுதாய் வர்ணிக்க
முடியாமல் தோற்பானடி...
உயிர் ஓவியமே
ஒப்பில்லா காவியமே...
உன்னழகை பாடிட
என்தமிழில் மொழியேதடி?
பெண்மையின் இலக்கணமே...
பிரம்மனின் தலைக்கணமே...
உனக்கென ஓர் கவிதையை
எப்படி படைப்பேனடி...?
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications