• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆத்மாவின் புத்துயிர்ப்பு

By Staff
|

- கி.பி. 3025ல் ஒரு நாள்.

- பொழுது மெல்லப் புலர்ந்தது. சேவல்களினது பறவைகளினதோ ஒலிகளேதுமில்லாமலே.

- கி.பி. 2800 அளவிலேயே இந்த நீல வண்ணக் கோளிலிருந்து உயிரினங்கள் அனைத்தும் அறிவு போட்ட குதியாட்டத்தில், மனிதனைத் தவிரஅழிந்தொழிந்து போய் விட்டன.

- ஒரு சில விருட்ச வகைகளே மிஞ்சியிருந்தன.

- மனிதர்கள் மாத்திரை உணவு வகைகள் பாவிக்கத் தொடங்கி மூன்று நூற்றாண்டுகளைத் தாண்டி விட்டிருந்தன.

- இதற்கிடையில் ஏனைய உயிரினங்களுக்கு ஏற்பட்ட நிலை மனித இனத்துக்கும் ஏற்படும் காலம் வெகு அண்மையில், ஒரு நூற்றாண்டு காலத்துக்குள்,அண்மித்து விட்டது. மனிதர்கள் ஆயிரம் வருடங்களுக்கு முன்னிருந்த பூமியின் நிலையினையொத்த கோளமொன்றினைக் காண்பதற்கான தேடுதலை விரைவுபடுத்தவேண்டிய தேவையிலிருந்தார்கள்.

Marine Telereporting- கதிரவன் "சிவப்பு அரக்கன்" நிலைக்கு வருவதற்கு இன்னும் பல பில்லியன் வருடங்களிருந்தன. அதுமட்டும் மனித இனம் இங்கிருக்க முடியாத நிலையினைமானுட இனம் ஏற்படுத்தி விட்டது.

- எவ்வளவு மாசுபடுத்த முடியுமோ அவ்வளவுக்கு மாசுபடுத்தப்பட்டு விட்டது இந்த அழகிய நீல வண்ணக் கோள்.

- இத்தகையதொரு சூழலில் விஞ்ஞானிகள் அண்டவெளிப் பயணங்களின் வேகத்தினைத் துரிதப்படுத்தும் ஆய்வில் ஈடுபட்டிருந்தார்கள்.

- அதில் முன்னணி வகித்த உலகப் புகழ் பெற்ற மருத்து விஞ்ஞானி ஆத்மாநாமின் மனம் அன்று மிகுந்த மகிழ்ச்சியுடனும், ஒரு வித பரபரப்புடனுமிருந்தற்குக்காணமிருந்தது.

- அவர் ஒரு முக்கிய ஆய்வில் ஈடுபட்டிருந்தார்.

- சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியர்களால் ஆரம்பிக்கப்பட்டிருந்த ஆய்வொன்றின் தொடர்ச்சியினைப் பூரணப்படுத்துமொரு நாளைஅண்மிக்கும் வகையிலானது அவரது ஆய்வு.

- குறைந்தது ஒளி வேகத்திலாவது செல்லும் வகையில் பிரயாணத்தின் வேகமிருக்க வேண்டும்.? கி.பி. 2003ல் ஆஸ்திரேலியர்கள் இதற்கான முதல்வித்தினை விதைத்திருந்தார்கள். அதற்கான பலனை அறுவடை செய்யுமொரு காலம் ஆயிரம் வருடங்களுக்குப் பின்னர் ஆத்மாநாமின் முயற்சியினால் அண்மித்துக்கொண்டிருந்தது.

அன்று ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் லேசர் கதிர்களை அழித்து மீண்டும் சிறிது தொலைவில் உருவாக்கிச் சாதனையொன்றினைப் புரிந்திருந்தார்கள்."தொலைகாவுதலுக்கான" (கூஞுடூஞுணீணிணூணாடிணஞ்) சாத்தியத்தினை அவர்களின் ஆய்வு அன்று தொடக்கி வைத்திருந்தது.

அதன் தொடர்ச்சியான ஆய்வுகளின் விளைவாக இன்று ஆத்மாநாம் ஒரு முழு மனிதனையே "தொலைகாவுதல்" மூலம்பிரயாணிக்கும் வகையிலானதொரு பொறியினை உருவாக்கி, அதனை வெற்றிகரமாகப் பரீட்சித்துப் பார்க்கவிருக்கின்றார்.இதற்காக நகரின் இரு எதிரெதிர் திக்குகளில் சுமார் 10 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்திருந்த இரு ஆய்வுக் கூடங்களிலுள்ளஇரு தொலைகாவும் அறைகள் பாவிக்கப்படவுள்ளன.

தொலைகாவும் அறை இலக்கம் 1லிருந்து தொலைகாவும் அறை இலக்கம் 2ற்கு முழு மனிதரொருவனைக் கடத்துவதற்கானசோதனை அன்று நடக்கவிருந்தது. ஒரு மனிதனின் உடலிலுள்ள, ட்ரில்லியன்கள் கணக்கிலுள்ள மூலக்கூறுகளையெல்லாம்அழித்து மீண்டும் உருவாக்குவதென்றால் அவ்வளவு இலேசான காரியங்களிலொன்றாயென்ன!

- மானுட வரலாற்றில் மிகப் பெரியதொரு பாய்ச்சலை நிகழ்த்திக் காட்டவுள்ளார் ஆத்மாநாம். விஞ்ஞானப் புனைகதைகளில்,விஞ்ஞானத் திரைப்படங்களில் மட்டுமே நிகழ்ந்து வந்திருந்ததொரு விடயம், இதுவரையில் கற்பனையில் மட்டுமேசாத்தியமாகியிருந்ததொரு விடயம், இன்று அவரது முயற்சியினால் நடைமுறைச் சாத்தியமாகும் தருணம் ஏற்பட்டுள்ளது.

இந்தப் பரிசோதனை மட்டும் வெற்றிகரமாக அமைந்து விட்டால் .. அதனை எண்ணவே ஆத்மாநாமின் சிந்தையெல்லாம் களியால்பொங்கிக் குதித்தது. சரித்திரத்தில், அவரது சாதனை பொறிக்கப்பட்டு விடும். சாதாரண சாதனையா என்ன? இந்தப் பரிசோதனைமட்டும் வெற்றியடைந்து விட்டால் .. மனிதர் ஒரு சில வருடங்களிலேயே அயலிலுள்ள சூரிய மண்டலத்திலுள்ள கோள்களுக்குபயணிப்பதற்கான சாத்தியம் ஏற்பட்டு விடும்.

- அண்டத்தை அளப்பதற்குரிய வல்லமையினை அவரது ஆய்வின் வெற்றி மனிதருக்கு வழங்கி விடும்.

- எத்துணை மகத்தான வெற்றியாக அது அமைந்து விடும்.

"ஆத்மா! உன்னைத்தான் பெரிதும் நம்பியிருக்கிறேன். என்னை இந்த கடைசித் தருணத்தில் ஏமாற்றி விடாதேயடா? " இவ்விதம்ஆத்மாநாம் ஒருமுறை தனக்குத்தானே கூறிக் கொண்டார்.

அவர் உண்மையில் தனக்குத்தானே கூறிக் கொண்டாலும் அவர் ஆத்மாவென்று விளித்தது அவரையல்ல. அவரதுபரிசோதனைக்குத் தன்னை உட்படுத்திக் கொள்ளத் துணிச்சலுடன் வந்ததொரு ஆத்மாவான "ஆத்மாவை"த்தான். இளைஞனானஆத்மாவைத்தான்.

ஆத்மாநாம் பத்திரிக்கையில் சுகாதார அமைச்சினூடாக வெளியிட்டிருந்த விளம்பரத்தைப் பார்த்து முன் வந்திருந்தஇளைஞர்களில் அவர் தேர்ந்தெடுத்திருந்தது இந்த ஆத்மாவைத்தான்.

ஆத்மா உண்மைலேயேயொரு இயற்பியல்-வானியற் பட்டதாரி. அத்துடன் அத்துறையில் ஆய்வுக்கட்டுரைகள் எழுதி வரும்பிரபல்யமான எழுத்தாளன். ஆத்மாநாமின் ஆய்வின் முக்கியத்துவத்தை மனதார விளங்கி, உணர்ந்து, தனது காலகட்டத்துக்கானபங்களிப்பு என அதனைப் புரிந்து முன் வந்திருந்தான். இந்தப் பரிசோதனையில் தன்னை இழப்பதற்கும் துணிந்து வந்திருந்தான்.

சரியாக காலை மணி பத்துக்குப் பரிசோதனை ஆரம்பிப்ப்பதாகவிருந்தது. ஆத்மாநாம் தனது கைக்கடிகாகரத்தைப் பார்த்தார்.சரியாக மணி ஒன்பது. ஆத்மாநாமை கூட்டிச் செல்வதற்காக ஆய்வுக் கூடத்திலிருந்து பணியாட்களிருவர் வாகனத்தில்வந்திருந்தார்கள்.

தொலைகாவும் அறை இலக்கம் 1ல் ஏற்கனவே ஆத்மாவுட்பட வெகுசன ஊடகவியலாளர்கள் பலரும் வந்து காத்திருந்தனர். முதல்நாளிரவிலிருந்தே அவர்கள் பலர் வந்து கூடாரம் அடித்து விட்டிருந்தார்கள். ஆத்மாநாம் ஆய்வு கூடத்தை அடைந்தபொழுதுமணி சரியாக ஒன்பது மணி பதினைந்து நிமிடங்கள்.

அவரை எதிர்பார்த்து ஆத்மா காத்திருந்தான். ஏற்கனவே அவன் உடல் நிலையெல்லாம் சக வைத்தியர்களால்பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு, பரிசோதனைக்கு அவன் தகுதியானவனென அவர்களால் அத்தாட்சிப்படுத்தப்பட்டிருந்தான்.

ஆத்மாநாம் ஆத்மாவைப் பார்த்துக் கேட்டார். "என்ன திரு ஆத்மா! பரிசோதனைக்குத் தயாரா?"

ஆத்மா அதற்கு இவிவிதம் பதிலுறுத்தான். "நான் தயார், நீங்கள் தயாரா? "

ஆத்மாநாம் கேட்டார். திரு. ஆத்மா, நீங்கள் வெகுசன ஊடகவியலாளர்களுக்கு ஏதாவது கூற விளைகின்றீர்களா?

அதற்கு ஆத்மா கூறினான், "அவர்களேதாவது கேட்கும் பட்சத்தில்"

ஆத்மாநாம் ஊடகவியலாளர்களைப் பார்த்து பின்வருமாறு கேட்டார். "நீங்கள் திரு. ஆத்மாவிடம் ஏதாவது கேட்கவிரும்புகின்றீர்களா? "

அதற்குப் பலர் தங்களது கைகளை உயர்த்தினார்கள்.

ஆத்மாநாம் கூறினார். "எல்லோருக்கும் பதிலுறுப்பது சாத்தியமில்லை. இருவருக்கு மட்டும் திரு. ஆத்மா பதிலிறுப்பார்."

ஊடகவியலாளர்கள் ஒருவர் எல்லோரையும் முந்திக் கொண்டு பின்வருமாறு கேட்டார். "திரு. ஆத்மா! உங்களுக்குஇத்தகையதொரு விஷப் பரிட்சையில் ஈடுபடும் எண்ணம் எவ்விதமேற்பட்டது?"

இந்த ஆயிரம் வருடங்களில் கேள்வி கேட்பதில் மட்டும் இன்னும் இந்த ஊடகவியலாளர்கள் இன்னும் கொஞ்சம் கூடப் பரிணாமவளர்ச்சியின்றியிருந்தார்கள் என்பதற்கு சான்றானதொரு வினா.

அதற்கு ஆத்மா சிறிது யோசித்து விட்டுக் கீழ்வருமாறு பதிலுரைத்தான். "இதனை விஷப் பரிட்சையென்று சொன்ன முட்டாள் யார்?இது என் வரலாற்றுக் கடமை. ஆயிரம் வருடங்கள் வாழும் வினாடியையொத்த எம் வாழ்வின் பயனாக இதனை நான்கருதுகின்றேன். சிறு வயதிலிருந்தே அண்டவெளிப் பயணம் பற்றிக் கனவு கண்டு வளர்ந்தவன் நான். அதுதான் முக்கியக் காரணம்"

(கி.பி. 3000ல் மனிதர்கள் ஆயிரம் வருடங்கள் வரை வாழும் நிலையிலிருந்தார்கள். பிறக்கும் ஒவ்வொருவரும், இருதயம்தொடக்கம், மூளை தவிர, சகல உடலின் அங்கங்க்ளையும் அடிக்கடி மாற்றுவதன் மூலம் சுமார் ஆயிரம் வருடங்கள்வாழக்கூடியதொரு நிலை நிலவிய காலகட்டம்)

எல்லோரும் ஆத்மாவின் தைரியத்தை மெச்சினார்கள். இன்னுமொரு ஊடகவியலாளர் கூறினார்: "திரு. ஆத்மா, உங்கள்தைரியத்துக்கு நாம்தலை வணங்குகிறோம். மானுட குலத்தின் நீட்சிக்குத் தங்கள் பங்களிப்பு வரலாற்றில் பொறிக்கப்படும்.உங்கள் பயணம் வெற்றியடைய எமது வாழ்த்துக்கள். "

அவரைத் தொடர்ந்து அனைவரும் வாழ்த்தி வழியனுப்ப, ஆத்மா தொலைகாவும் அறை இலக்கம் 1ற்குள், விஞ்ஞானிஆத்மாநாம், மற்றும் அவரது உதவியாளர்கள் சகிதம் நுழைந்தான்.

வெளியில் ஏனைய மருத்துவர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகளெனப் பலர் பார்வையாளர் கூடத்தில் காத்திருந்தார்கள்.பரிசோதனை தொடங்க இன்னும் சில நிமிடங்களே இருந்தன. ஆத்மாநாம் தொலைகாவும் அறை இலக்கம் 2லிருந்த சகமருத்துவர்களுடன் கதைத்து அங்கு எல்லாம் தயார்தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார்.

அங்கும் ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகளெனப் பலர் மீள உயிர்த்தெழும் ஆத்மாவை வரவேற்பதற்காகக் காத்திருந்தார்கள்.

ஆத்மாநாம் இறுதியாக ஆத்மாவை பார்த்துக் கூறினார். "திரு. ஆத்மா! உங்களது இந்தப் பங்களிப்புக்காகத் தலைவணங்குகின்றேன், மானுட இனம் சார்பில். உங்களைப் போன்ற சூழலை மீறிய துணிச்சற்காரர்களால்தான் மானுட இனம்இத்துணை தூரத்துக்கு வளர்ச்சி கண்டுள்ளது. வரலாற்றில் நிலைத்து நின்று விட்டீர்கள். இந்த ஒரு செய்கையின் மூலம் திரு. ஆத்மாஉங்களுக்காகத் தலை வணங்குகின்றேன். "

ஆதற்கு ஆத்மா கூறியவைதான் கீழேயுள்ளவை. "நீங்கள் மிகவும் புகழ்கின்றீர்கள். நான் செய்யும் இந்தச் சாதாரண காரியத்துக்காகஎன் மனித இனம் பெரும் பயனைடயுமானால் அதுவே எனக்குப் பெரு மகிழ்ச்சி"

இதன் பின்னர் ஆத்மா தொலைகாவும் அறை இலக்கம் 1இனுள் விஞ்ஞானி ஆத்மாநாமுடன் நுழைந்தான். அவனைச் சரியாகஇருக்கையில் அமர்த்தி விட்டுச் செய்ய வேண்டியவை பற்றிய அறிவுறுத்தல்களை மீண்டுமொருறை ஞாபகப்படுத்தி விட்டுஆத்மாநாம் வெளியில் வந்தார்.

வரும்பொழுது அவர் பின்வருமாறு தமக்குள் எண்ணினார். "எத்துணை துணிச்சலான பையன். ஆத்மா நீ வாழ்க!"

சரியாகப் பத்து மணிக்கு விஞ்ஞானி ஆத்மாநாம் தொலைகாவும் அறை இலக்கம் 1இனை இயக்கி வைத்தார். அதேகணத்தில்தொலைகாவும் அறை இலக்கம்2இல் காத்திருந்த விஞ்ஞானிகள் அறைக் கதவை திறந்தார்கள். ஒளி வேகத்தில்தொலைகாவுதல் நடப்பதால் ஆத்மாவின் புத்துயிர்ப்பு அதே சமயத்தில் நிகழ வேண்டும்.

அறையினைத் திறந்த மருத்துவ விஞ்ஞானிகளை வெற்றிகரமாகத் தொலைகாவப்பட்டிருந்த ஆத்மாவின் ஆத்மாவற்ற ஸ்தூலஉடல் வரவேற்றது.

- வ.ந.கிரிதரன்(ngiri2704@rogers.com)

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ak.khan@greynium.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X