Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆடி அமாவாசை : பித்ரு தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரம் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே வழிபடலாம்

ஆடி அமாவாசை நாளில் பித்ரு தர்ப்பணம் கொடுப்பதற்கு ராமேஸ்வரம் செல்ல முடியாதவர்கள் நம்முடைய ஊருக்கு அருகில் உள்ள புனித நீர் நிலைகளில் பித்ரு தர்ப்பணம் கொடுக்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமாவாசை திதி நம்முடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கான பிரத்யேகமான திதி. மாதம்தோறும் அமாவாசையன்று திதி கொடுப்பதால், பித்ரு தோஷம் நீங்குவதோடு முன்னோர்களின் ஆசி நமக்குக் கிடைப்பதுடன், குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். பித்ரு தர்ப்பணம் செய்வதற்கு அனைவராலும் ராமேஸ்வரம் செல்ல முடியாது என்பதால் நம் ஊருக்கு அருகில் உள்ள புனித நீர்நிலைகளில்,சிவ ஆலயங்களில் பித்ரு தர்ப்பணம் கொடுத்து முன்னோர்களை வழிபடலாம். கொரோனா பரவலை தடுக்க ஆலயங்களுக்கு செல்லவும் தடை உள்ளதால் நம்முடைய வீட்டிலேயே நாம் திதி தர்ப்பணம் கொடுத்து வழிபடலாம்.

நவ கிரகங்களில் தந்தைக்காரகன் சூரியனும் தாய் காரகன் சந்திரனும் ஒரே ராசியில் இணைவதே அமாவாசை. ஒவ்வொரு தமிழ் மாதமும் சூரியன் ஒவ்வொரு ராசியில் சஞ்சரிப்பார். ஆடி மாதத்தில் சூரியனின் பயணம் கடக ராசி தொடங்கும். இந்த மாதத்தில் தினக்கோளான சந்திரன் தனது ராசியான கடகத்தில் சூரியனுடன் சேரும் நாளே ஆடி அமாவாசை. இது சிறப்பு வாய்ந்த முன்னோர் வழிபாட்டிற்கு ஏற்ற அமாவாசையாகும்.

Aadi Amavasai Pitru Tharpanam - Important places in Tamil Nadu

ஆடி மாதம் முதல் மார்கழி வரை உள்ள காலம் தட்சிணாயனம். அதாவது சூரியன் தெற்கு நோக்கி நகரத் தொடங்கும் காலம். இது ஆடி மாதத்தில் தொடங்குகிறது. தட்சிணாயனம் தேவர்களுக்கு இரவுப் பொழுது. எனவே, இந்த காலத்தில் நம்மைப் பாதுகாக்கவும், நமக்கு அனைத்து நன்மைகளையும் தந்து ஆசீர்வதிக்கவும் நம்முடைய முன்னோர்கள் ஆடி மாதம் முதல் தேதியன்று பித்ருலோகத்தில் இருந்து பூமிக்கு வரத் தொடங்குகின்றனர்.

கருடப் புராணத்தில் இந்த பித்ருலோகம் சூரிய மண்டலத்தில் இருந்து பல லட்சம் மைல்கள் தொலைவில் இருப்பதாகச் சொல்லப்பட்டு இருக்கிறது. ஆடி மாதத்தில் பித்ருலோகத்தில் இருந்து புறப்படும் முன்னோர்களை வரவேற்கும் விதமாக, ஆடி மாத அமாவாசை தினத்தில் அவர்களுக்கு நாம் தர்ப்பணம் கொடுத்து, அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்க வேண்டும்.

நம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை நாம் மறக்கக்கூடாது அவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் அமாவாசை, புண்ய கால தர்பணம், வருஷ ஸ்ரார்தம், மஹாளய பட்சம் ஆகிய 96 நாட்கள் தர்பணம் செய்ய வேண்டும் என சாஸ்திரம் பரிந்துரைக்கிறது. இன்று வேலை மற்றும் தொழில், வாழும் சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த 96 நாட்களும் தர்பணம் செய்வது அனைவருக்கும் இயலாத காரியமாகும் என்றாலும் முக்கியமான தர்பணங்களையாவது தவறாமல் செய்வது நல்லது, அந்த வகையில் தக்ஷிணாயனத்தில் வரும் ஆடி அமாவாசையும் மகாளய அமாவாசையும் முக்கியமான ஒன்றாகும். அதேபோல உத்தராயணத்தில் தை அமாவாசையும் முக்கியமானது.

Aadi Amavasai Pitru Tharpanam - Important places in Tamil Nadu

அமாவாசை அன்று காலை ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளுக்குச் சென்று நீராடி தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ராகுகாலம், யமகண்டம் ஆகியவற்றை தர்ப்பணத்துக்கு பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. தர்ப்பணம் கொடுக்க மதிய வேளை மிகவும் சிறந்ததாகும். தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம், குலதெய்வம், தந்தை வழி மற்றும் தாய் வழியில் மூன்று தலைமுறையினரின் பெயர்களைச் சொல்லி, தர்ப்பணம் கொடுப்பது அவசியம்.

தர்ப்பணம் செய்த பின்னர் வீட்டுக்குத் திரும்பி வந்து, மறைந்த முன்னோர்களின் படத்தைச் சுத்தம் செய்து, வடகிழக்கு திசையில் வைத்து சந்தனம், குங்குமம் இட்டு துளசி மாலை சாத்த வேண்டும். பித்ருக்களுக்கு கண்கண்ட தெய்வமாக விளங்குபவர் மகாவிஷ்ணு. அவரை துளசி மாலை சாத்தி வழிபடுவது விசேஷம்.

அமாவாசையன்று பித்ருக்கள் வழிபாட்டின்போது, வீட்டில் முன்னோர்களின் படத்துக்கு துளசி மாலையோ, துளசி இலையோ சமர்ப்பிக்க வேண்டும். இது மகா விஷ்ணுவை மகிழ்விக்கும். இதனால் பித்ருக்களுக்கு விஷ்ணுவின் ஆசி கிடைக்கும். அவர்கள் மகிழ்ச்சியில் தமது சந்ததியினரை வாழ்த்துவார்கள். அதன் மூலம் நமது துயர்நீங்கி வாழ்வில் சுபீட்சம் ஏற்படும்.

முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து குத்துவிளக்கு ஏற்ற வேண்டும். முன்னோர்களுக்குப் பிடித்தமான இனிப்பு, காரம், பழ வகைகளைப் படைக்க வேண்டும். தலை வாழை இலையில் படையல் போட்டு வணங்க வேண்டும். கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை பசுவுக்கு தானமாக வழங்க வேண்டும். பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும்வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை ஒத்திவைத்து விட்டு, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடித்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளைச் செய்யலாம்.

குடும்பத்தில் இயற்கையாக மரணித்தவர்கள் தவிர கொலை, தற்கொலை, விபத்து மற்றும் அகால மரணங்கள் மூலம் உயிர் நீத்தவர்களுக்கு முறையான கர்மகாரியங்களை செய்வது அவசியம். அப்படி செய்வதன் மூலம் அந்த ஆத்மாக்கள் பித்ருலோகத்தை அடையும். அவ்வாறு செய்யாமல் விடுவதன் மூலம் பலவித தோஷங்கள் ஏற்படுகின்றன. அவை ஜாதகக் கட்டங்களில் அமர்கின்றன. இதனால் நமக்கு மட்டுமல்லாது நமது சந்ததியினருக்கும் திருமண தடை, குழந்தையின்மை ஏற்படும். வேலையில்லாத நிலையும், எதற்கெடுத்தாலும் பிரச்சினை, தீராத நோய்கள், கடன் பிரச்சினை என வாட்டி வதைக்கும். இதனால் கோபம், மனஉளைச்சல், நிம்மதியற்ற வாழ்க்கையால் சிலருக்கு தற்கொலை சிந்தனை ஏற்படும்.

Aadi Amavasai Pitru Tharpanam - Important places in Tamil Nadu

எனவே சிறப்பு வாய்ந்த ஆடி அமாவாசை நாளில் முன்னோரையும் மறைந்த தாய், தந்தையரையும் நினைத்து திதிகொடுப்பது. புண்ணிய நதிகள், கடல் போன்ற இடங்களில் புனித நீராடி இஷ்டதெய்வ ஆலயங்களில் வழிபாடு, சிறப்பு பூஜைகள் செய்வது, ஏழைகள், இல்லாதோர், இயலாதோருக்கு அன்னதானம், வஸ்திரதானம் செய்வது நாம் செய்த பாவங்கள், கர்மவினைகள், தீவினைகள் அனைத்தையும் போக்கி வாழ்வில் புண்ணியத்தை சேர்க்கும் என்பது நம்பிக்கை. சிலர் தண்ணீர் கூட தானமாக தரலாம். அமாவாசை நாளில் அன்னதானம் கொடுப்பதன் மூலம் நம் முன்னோர்களை மகிழ்விக்கும்.

தமிழ்நாட்டில் முன்னோர் வழிபாடு செய்வதற்குஏற்ற தலங்கள் சில உள்ளன. அவை, பவானி சங்கமேஸ்வரர் திருக்கோவில், மகுடேஸ்வரர் திருக்கோவில், கொடுமுடி, வரமூர்த்தீஸ்வரர் திருக்கோவில், அரன்வாயல், கவரப்பேட்டை, வீரராகவர் திருக்கோவில், திருவள்ளூர், ராமநாதசுவாமி திருக்கோவில், ராமேஸ்வரம்.
திருப்பள்ளிமுக்கூடல். குருவிராமேஸ்வரம் திருக்கோவில், திருவாரூர், பாபநாசம், திருநெல்வேலி மாவட்டம், சொறிமுத்து அய்யனார் கோயில், பாபநாசம் திருநெல்வேலி மாவட்டம் பித்ரு தர்ப்பணம் கொடுக்க ஏற்ற தலமாகும்.

இதே போல ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பவர்கள் திருப்புல்லானி சென்று பித்ரு தர்ப்பணம் கொடுக்கலாம். திருச்சி காவிரிக்கரையில் உள்ள அம்மா மண்டபம். வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள புஷ்பவனேஸ்வரர் - செளந்தரநாயகியம்மன் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்த சிவத்தலமாகும். பாண்டிய நாட்டின் பாடல் பெற்ற 14 தலங்களில் திருப்புவனமும் ஒன்று. அக்காலத்தில் புகழ்பெற்ற சுச்சோதி மன்னன் முன்னோர்களுக்கு திதி கொடுக்க திருப்புவனம் வந்து வைகையாற்றங்கரையில் வேண்டுதல் செய்துள்ளார்.

ராமேஸ்வரத்தில் செய்யப்படும் பித்ருக்கள் சம்பந்தமான அனைத்து பூஜைகளும் திலதர்ப்பணபுரியிலும் செய்யப் படுகின்றன இந்த திலதர்ப்பணபுரி திருக்கோயில் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகில் உள்ளது. அங்கு சென்று தர்ப்பணம் கொடுப்பவர்களுக்கு பித்ரு தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

ஆகஸ்ட் 8ஆம் தேதி ஞாயிறன்று ஆடி அமாவாசை கடைபிடிக்கப்படுகிறது. கொரோனா பரவல் காலமாக இருப்பதால் பித்ரு தர்ப்பணம் கொடுக்கும் தலங்கள், புனித நீர்நிலைகளுக்கு மக்கள் செல்வதற்கு தடை உள்ளது. எனவே ஆடி அமாவாசை நாளில் நம்முடைய வீட்டிலேயே முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடலாம். இதன்மூலம் மறைந்த முன்னோர்களின் ஆசியும் வாழ்த்தும் கிடைக்கும். நம்முடைய தோஷங்களும் நீங்கும். கொரோனா தடைக்காலம் முடிந்த பின்னர் புனித நீர்நிலைகளுக்கு சென்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+