
ஆடி அமாவாசை, ஆடிப்பூரம்,ஆடித்தபசு, ஆடிக்கிருத்திகை - ஆடி மாதத்தில் என்னென்ன விஷேசங்கள்
ஆடி மாதம் பிறந்துள்ளது. ஆடியில் சூரியன் கடக ராசியில் பயணம் செய்வார். தட்சிணாயன புண்ணிய காலமான ஆடி மாதத்தில் வரும் அமாவாசை நாள் முன்னோர் வழிபாட்டிற்கு ஏற்ற நாள். ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் களைகட்டும். இந்த மாதத்தில் என்னென்ன முக்கிய பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது என்று பார்க்கலாம்.
மதுரை மீனாட்சி அம்மனுக்கு ஆடி முளைக்கொட்டு விழா கோலாகலம் - அலங்காரமாக உலா வரும் அம்மன்
தட்சிணாயனம் மழைக்காலத்தின் துவக்கத்தைக் குறிக்கிறது. அதாவது, வளத்தினை, தொடர்ந்து பண்டிகைகள், தெய்வீக வழிபாட்டு நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் ஒவ்வொரு தமிழ் வருடத்திலும் ஆடி மாதம்தான் துவக்க மாதமாக அமைகிறது.

மழைகாலத் துவக்கமான ஆடியில் நல்ல மழை வேண்டியும் உடல் நலம் பெறவும், நோய்கள் பரவாமல் இருக்கவும் நம் முன்னோர்கள் பல பண்டிகைகளைக் கொண்டாடி அம்மனுக்கு வழிபாடு நடத்தினார்கள்.
- ஆடி 1ஆம் தேதி சனிக்கிழமை ஆடி மாதப் பிறப்பு. ஆடிப்பண்டிகை கொண்டாட்டம்
- ஆடி 04 ஆம் தேதி செவ்வாய்கிழமை விஷ்ணு சயன ஏகாதசி கோபத்ம விரதம்
- ஆடி 07 ஆம் தேதி வெள்ளிக்கிழமை குரு பூர்ணிமா. பவுர்ணமி பூஜை
- ஆடி 11ஆம் தேதி செவ்வாய்கிழமை அங்காரக சதுர்த்தி, வீடு கட்ட வாஸ்து பூஜை செய்ய நல்ல நாள்
- ஆடி 15 சனிக்கிழமை நீலகண்ட அஷ்டமி
- ஆடி 17 திங்கட்கிழமை ஆடிக்கிருத்திகை
- ஆடி 18 செவ்வாய்கிழமை ஆடி 18ஆம் பெருக்கு
- ஆடி 19 புதன்கிழமை ஏகாதசி யோகினி ஏகாதசி
- ஆடி 21 வெள்ளிக்கிழமை பிரதோஷம்
- ஆடி 23 ஞாயிற்றுக்கிழமை ஆடி அமாவாசை சர்வ அமாவாசை
- ஆடி 26 புதன்கிழமை ஸ்வர்ண கவுரி விரதம் ஸ்ரீ ஆண்டாள் திருவாடிப்பூரம்
- ஆடி 27 வியாழக்கிழமை நாக சதுர்த்தி விரதம்
- ஆடி 28 வெள்ளிக்கிழமை நாக பஞ்சமி, கருட பஞ்சமி விரதம்
- ஆடி 29 சனிக்கிழமை சஷ்டி விரதம், கருடாழ்வார் ஜெயந்தி
- ஆடி 30 ஞாயிற்றுக்கிழமை பானு சப்தமி சூரிய வழிபாடு செய்ய ஏற்ற நாள்
- ஆடி 31 திங்கட்கிழமை கடைசி ஆடிப்பண்டிகை