ஆனி மாத பலன் 2025: லக்கி பாஸ்கராக மாறும் ரிஷப ராசி.. தொட்டதெல்லாம் தங்கம், பணம்
ஆனி மாத பலன்: விசுவாவசு வருடம், ஜூன் 15 ஆம் தேதி முதல் ஜூலை 16 ஆம் தேதி வரையிலான ஆனி மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
உத்திராயணத்தின் 6 வது மாதம் கடைசி மாதம் ஆனி. பொதுவாகவே மாதாந்திர கிரகம் என்று சொல்லக்கூடிய சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய 4 கிரகங்களின் மாற்றத்தை வைத்தே கணிக்கப்படுகிறது. சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்வதை வைத்து மாதத்தை நிர்ணயம் செய்வோம்.

இந்த ஆனி மாதத்தில் மேஷ ராசியில் சுக்கிரனும், மிதுனத்தில் புதன், குரு, சூரியன் ஆகிய 3 கிரகங்களும், சிம்மத்தில் செவ்வாய், கேது ஆகிய கிரகங்களும், கும்ப ராசியில் சனி, ராகு ஆகிய கிரகங்கள் உள்ளன. மொத்தத்தில் இந்த ராகு கேதுவில் எல்லா கிரகங்களும் அடங்கியுள்ளன. நாம் எடுக்கும் முயற்சிகள் அனைத்தையும் வெளிநாட்டு சக்திகள் எடுத்துக் கொள்ளும் வாய்ப்புள்ளது.
இந்த காலகட்டத்தில் நாம் போடக்கூடிய அனைத்து முயற்சிகளும் வெற்றியைத் தரக்கூடிய காலகட்டமாக இருக்கும். ஜூன் 22 ஆம் தேதி புதன் மிதுனத்தில் இருந்து கடகத்திற்குப் போகிறார். 29 ஆம் தேதி சுக்கிரன் சொந்த வீட்டுக்கு ஆட்சிக்குப் போகிறார். இந்த ஆனி மாதத்தில் இவை இரண்டும் தான் பெரிய கிரக மாற்றமாக உள்ளன. மற்றபடி அனைத்து வருட கிரகங்களும் அந்தந்த இடத்தில் உள்ளன.
இந்த ஆனி மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு ஏற்படப் போகும் அதிர்ஷ்டங்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ரிஷபம்
கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிஷம் மூன்று நட்சத்திரம் கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு ராதியாதிபதி சுக்கிரன். உங்கள் ராசிநாதன் ராசிக்கு 12 ஆம் இடத்தில் இருக்கிறார். சுக்கிரனுக்கு 12 ஆம் இடம் என்பது மறைவு ஸ்தானம் இல்லை. சுக்கிரனுடைய காரகத்துவம் என்பது 12 ஆம் இடத்தையே சாரும். ஏற்றத்தைக் கொடுக்கக் கூடிய காலகட்டமாக இருக்கும். நல்ல தூக்கம் கிடைக்கும். சுப செலவுகள் உண்டாகும்.
பண வரவு அதிகரிக்கும்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு பிஆர் கிடைக்கும் வாய்ப்பு உண்டாகும். வெளிநாடுகளுக்கு பயணம் சென்று வருவதற்கான யோகம் உண்டாகும். ராசிக்கு 8 ஆம் அதிபதியான குரு உங்களுடைய 8 ஆம் இடத்தையே பார்க்கிறார். இந்த காலகட்டத்தில் உங்களுடைய ஜூன் 15 முதல் ஜூலை 16 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் ராசிக்கு 2 ஆம் இடத்தில் இருக்கிறார். தனக்காரகனான குரு, தன ஸ்தானதிபதியான புதனுடன் சேர்ந்திருப்பதால் பண வருமானத்துக்குப் பஞ்சமே இருக்காது.
வீடு, மனை வாங்கும் யோகம்
பேச்சில் நல்ல இனிமை, நளினம் இருக்கும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். புதிய வீடு, மனை வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். ராசிக்கு 4 ஆம் இடத்தில் செவ்வாயும், கேதுவும் இருப்பதால், 12 ஆம் அதிபதியே 4 ஆம் இடத்திலும் இருப்பதால் பழைய வீடு விற்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு கண்டிப்பாக பழைய வீடு விற்கும் யோகம் உண்டாகும்.
லாபம்
சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் இந்த 4 கிரகங்களை வைத்தே மாத பலன்கள் கணக்கிடப்படுகிறது. ராசிக்கு 2 ஆம் இடத்தில் சூரியன் இருப்பதால் பெரிய ஏற்றம் உண்டாகும். புதிய வீட்டின் மூலமாக மிகப்பெரிய லாபங்கள் சம்பாதிக்கும் யோகம் உண்டாகும். தாயின் மூலம் ஏற்றம் கிடைக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். பண வரவுக்குப் பஞ்சம் இருக்காது.
பேச்சில் இனிமை
பேச்சில் நல்ல ஏற்றம் உண்டாகும். படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். செவ்வாய் பகவான் 4 ஆம் இடத்தில் இருப்பதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். புதிய வீடுகள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. கேது இருப்பதால் சிறு சிறு குழப்பங்கள் வந்து மறையக் கூடிய வாய்ப்பு உண்டு. சுக்கிரன் 12 ஆம் இடத்தில் இருப்பதால் ஜூன் 29 ஆம் தேதி வரை ராசிநாதன் ராசியிலேயே ஆட்சிப் பெற்றிருப்பது பெரிய ஏற்றத்தைக் கொடுக்கும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் ஜெயம் உண்டாகும்.
நினைத்தது நடக்கும்
நினைத்த விஷயங்கள், நினைத்த நேரத்தில், இடத்தில் நடக்கும் காலகட்டமாக இருக்கும். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல், அரசு சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏற்றமான காலகட்டமாக இருக்கும். சின்னத்திரை, கலைத்துறை, சினிமாவில் இருப்பவர்களுக்கு ஏற்றம் உண்டாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.
கவனம்
புதன் ராசிக்கு 2 ஆம் இடத்தில் இருந்து 3 ஆம் இடத்துக்குப் போவதால் புதிய முயற்சிகள், எழுத்து, கலைப் பணிகளில் ஏற்றம் உண்டாகும். ஜூலை 8 முதல் 11 ஆம் தேதி வரையிலான சந்திராஷ்டம காலத்தில் புதிய முயற்சிகள், பயணங்களை எடுக்காமல் இருப்பது நல்லது. அப்படியே செய்ய வேண்டியிருந்தாலும் அருகில் இருக்கும் சிவன் கோயில்களில் பச்சரிசி, நெல்லை கொடுத்து வழிபடுவது நல்லது.












Click it and Unblock the Notifications