தனுசு ராசிக்கு அர்த்தாஷ்டம சனியிலும் கொட்டும் அதிர்ஷ்டம்.. ஆனா இதை கவனிக்காம இருந்தா பிரச்சனை தான்

Subscribe to Oneindia Tamil

Aani Maadha palan: வைகாசி நிறைவடைந்து ஆனி மாதம் தொடங்கியுள்ளது. ஜூன் 15 முதல் ஜூலை 16 ஆம் தேதி வரையிலான இந்த காலகட்டத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

மிதுனத்துக்கு சூரியன் வரும் மாதமே ஆனி. ஏற்கனவே மிதுனத்தில் குரு அமர்ந்திருக்கிறார். தற்போது குருவுடன் சூரியன் சேர்கிறார். இதனால், உலகத்தில் சில விஷயங்களில் நன்மைகளும், சில விஷயங்களில் பிரச்சனைகளும் ஏற்படும்.

aani-madha-palan-lets-see-what-kind-of-benefit-will-get-dhanusu-sagittarius-rasi-people-during-t

பொதுவாக ஆனி மாதத்தில் பெருமாள், நரசிம்மர், தாயார் வழிபாடு செய்வது அற்புதத்தை ஏற்படுத்தும். கிருஷ்ணர், சிவன் வழிபாடு செய்வது நல்லது. சிவன் கோயில்களில் அன்னதானத்திற்கு பிரசாதம் வாங்கி கொடுப்பது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த ஆனி மாதத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கான பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசிக்காரர்கள் புதன்கிழமையில் தெய்வ வழிபாடுகளை செய்வது மிக மிக முக்கியம் என்பதை நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. தோல் பிரச்சனை, சளி, இருமல் பிரச்சனைகளில் அதீத கவனமாக இருக்க வேண்டும். எதிர்பார்த்த விஷயங்கள் கைகூடக் கூடிய அனுகூலமான அமைப்பு என்பதை நியாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பணத் தட்டுப்பாடு நீங்கும்

கணவனாக இருந்தால் மனைவி சொல்வதை கேட்பதும், மனைவியாக இருந்தால் கணவன் சொல்வதை கேட்பதும் ஆனி மாதத்தில் உங்களுக்கு நன்மையைத் தரும். உறவினர்கள் வருகை, நண்பர்கள் வருகை உண்டாகும். விடுபட்ட தெய்வ யாத்திரைகளை செய்து முடிப்பீர்கள். பணத் தட்டுப்பாடுகள் நீங்கும். பிள்ளைகளின் நீண்ட நாள் கனவுகளை நிறைவேற்றுவீர்கள்.

முன்னேற்றம்

எல்லாவிதத்திலும் ஆச்சரியமான முன்னேற்றங்களும், அனுகூலமும் ஏற்படும். இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறுவதை கண்கூடாகப் பார்ப்பீர்கள். இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறுவது கண்கூடாகப் பார்க்கலாம். எடுத்த காரியத்தில் ஜெயம் ஏற்படும். நம்பிக்கையும், புதிய அனுகூலமும் அடுத்தடுத்து ஏற்படும்.

யோக பலன்கள்

உத்தியோகத்தில் அபரிமிதமான முன்னேற்றங்கள் ஏற்படும். தனுசு ராசிக்காரர்களுக்கு நிச்சயமாக யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். குடும்பத்தினரிடம் மனம் விட்டு பேசுவது நன்மையை ஏற்படுத்தும். துணை குறித்து உறவினர்கள் முன்போ, மற்றவர்கள் முன்போ தேவையில்லாதவற்றை சொல்லி விரிசல்கள் ஏற்படுத்திக் கொள்ளாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டிய காலகட்டம்.

அர்த்தாஷ்டம சனி

எல்லா விதத்திலும் அனுகூலம் ஏற்பட்டாலும் அர்த்தாஷ்டம சனி இருப்பதனால் உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பது நன்மையை ஏற்படுத்தும். குடும்ப ஸ்தானத்தில் 7 ஆம் இடம் என்ற கேந்திரத்தில் குருவும், உடன் சூரியனும் இருப்பதால் குடும்ப விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தொழில், உத்தியோகம் ரீதியாக அனுகூலம் ஏற்படும்.

அனுகூலம்

பணம் கொடுக்கல் வாங்கலில் குறைவிருக்காது. தெய்வ வழிபாடுகள், பயணங்கள் மேற்கொள்ளும் யோகம் உண்டாகும். வேற்று மொழி மனிதர்களால் அனுகூலம் ஏற்படும். அசையும், அசையாப் பொருள்கள் சேர்க்கை ஆனந்தத்தைப் பெற்றுத் தரும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பண வரவிற்குப் பஞ்சம் இருக்காது. தொட்ட காரியங்கள் அனைத்தும் துலங்கும் காலகட்டமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+