ஆனி மாதத்தில் ஆரம்பமாகும் அழிவுகள்.. இந்தியர்களுக்கு வரப்போகும் பேராபத்து.. தலைவர்களின் உயிருக்கே உலை
Aani Maadha palan: வைகாசி நிறைவடைந்து ஆனி மாதம் தொடங்கியுள்ளது. இந்த ஆனி மாதத்தில் உலகத்தில் நடக்கும் மாற்றங்கள், ஏற்படப் போகும் பிரச்சனைகள், இயற்கைப் பேரழிவுகள் குறித்து பல்வேறு ஜோதிடர்களும் கூறிய கணிப்புகளை இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
மிதுனத்துக்கு சூரியன் வரும் மாதமே ஆனி. ஏற்கனவே மிதுனத்தில் குரு அமர்ந்திருக்கிறார். தற்போது குருவுடன் சூரியன் சேர்கிறார். இதனால், உலகத்தில் சில விஷயங்களில் நன்மைகளும், சில விஷயங்களில் பிரச்சனைகளும் ஏற்படும். அரசியல் அதிகாரிகள், பெரும் தொழிலதிபர்களுக்கிடையே தகராறுகள் ஏற்படும். நிம்மதியில்லாத தன்மை நிலவும்.

உயிருக்கு ஆபத்து
மீனத்தில் சனி இருப்பதாலும், மிதுனத்தில் குரு இருப்பதாலும் ஆனி மாதத்தில் தலைவர்களின் உயிர்களுக்கு பாதிப்புகள் ஏற்படும். ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளவில்லை என்றால் கோமா நிலைக்குச் செல்லும் சூழல் ஏற்படும். உலகிற்கு எதிரிகளால் தொந்தரவு ஏற்படும். இந்தியாவில் பெரும் வெள்ளம், பெரும் சேதம் ஏற்படும். மலைப் பிரதேசங்களுக்கு பெரும் சேதத்தை காட்டுகிறது. மலைக் கோயில்கள் மிகுந்த கவனமாக இந்த மாதத்தில் இருக்க வேண்டும்.
அரசால் வரும் பிரச்சனை
நிறைய பேருக்கு சட்டத்தால் சிக்கல் வருவதற்கான வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக இருந்த வழக்குகளில் தீர்ப்பு வரும். தலைவர்கள் தவறான முடிவுகளை எடுக்கக்கூடிய மாதமாக இருக்கும். மக்களுக்குத்தான் வரி விதிப்பு போன்ற பெரிய சிக்கல்கல் வரும். மத்திய அரசாங்கம் நிறைய தவறு செய்வதற்கான வாய்ப்புள்ளது. இமயமலை முதல் கன்னியாகுமரி வரைக்கும் இயற்கை சேதங்கள் நிகழும்.
இயற்கை சேதம்
புயல்கள் அதிக அளவில் உருவாகும். கச்சத்தீவு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் சூழல் உண்டாகும். எதிரி நாடுகளின் தீவிரவாதத்தால் மீண்டும் பதட்டம் ஏற்படும் சூழல் உள்ளது. ரஷ்யாவுக்கு மிகப்பெரிய சிக்கல்கள் ஏற்படப் போகிறது. அவப்பெயர் ஏற்படுவது போன்றவை உண்டாகும். இஸ்ரேலுக்கும் பிரச்சனை உண்டு. அமெரிக்காவில், பிரிட்டனில், லண்டனில் உள்ளவர்களுக்கு இன்னொரு வேலைவாய்ப்பை தயார்படுத்திக் கொள்வது நல்லது.
தொழில்
ஆனி மாதத்தில் மொத்த டார்கெட்டும் இந்தியா மீது தான் உள்ளது. நிறைய லே ஆஃப்புகள் நடக்கும். மீடியா துறையில் இருப்பவர்கள் ஆனி மாதத்தில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. யாரையும் சார்ந்திருக்காமல் இருப்பது நல்லது. எலக்ட்ரீசியன், விவசாயம், பிளம்பிங், ஏசி மெக்கானிக், டெலிபோன் ரிப்பேர், கணினி பழுது பார்ப்பது, ஹார்டுவேர் போன்ற துறைகளுக்கு மதிப்பு கூடும். நிறைய பேர் இதுதொடர்பாக படிக்க ஆரம்பிப்பார்கள்.
தங்கம் விலை
மக்கள் பதட்ட நிலையில் இருப்பார்கள். வேலூர் நாரயணி பீடத்தின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். குரு வீட்டில் சூரியன் வருவதால் நகையின் விலை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. போர், யுத்தம் போன்றவை ஏற்படும். அணு உலைகள் கவனமாக இருக்க வேண்டும். வெள்ளத்தால் பெரிய சேதங்கள் ஏற்படும். புயல், மழை பெரிய அளவில் ஏற்படும் வாய்ப்புள்ளது.
விமான விபத்து
பெரிய தொழிலதிபர்களுக்கு திடீர் சிக்கல்கள் ஏற்படும். மஞ்ச நோட்டீஸ் கொடுக்கும் நிலை ஏற்படும். விமான விபத்து கட்டாயம் நடக்கும். துயர விபத்துச் சம்பவங்கள் நடக்கும். பள்ளிக் குழந்தைகளை கூட்டிச் செல்லும்போது ஆசிரியர்கள் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. பள்ளிக் குழந்தைகளுக்கு சிக்கல்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
பிரச்சனை
வடநாடுகளில் இடியுடன் கூடிய பிரச்சனைகள் ஏற்படும். அந்தமான், மாலத்தீவு, கச்சத்தீவு, வங்கதேசத்தில் நிறைய பிரச்சனைகள் ஏற்படும். தமிழகத்தில் தஞ்சாவூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி பகுதிகள் கவனமாக இருக்க வேண்டும். சென்னைக்கும் சிறிது பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. கடலால் தொந்தரவுகள் ஏற்படும். கடல் மாசுபாடுகளை சரிசெய்வது நல்லது. ஆனி மாதத்தில் இருந்த சென்னையில் இருந்து காஞ்சிபுரம் வரைக்கும் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
எச்சரிக்கை
கல்பாக்கம், சாத்தான்குளத்தில் எதிரிகளால் பாதிப்புகள் ஏற்படும். ஆந்திராவில் நிறைய பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளதாம். மிளகாய் விலை உச்சமடையும். நூல் தறி விலை அதிகரிக்கும். டெல்லி, உத்தரப்பிரதேசம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஆனி மாதத்தில் பெருமாள், நரசிம்மர், தாயார் வழிபாடு செய்வது அற்புதத்தை ஏற்படுத்தும். கிருஷ்ணர், சிவன் வழிபாடு செய்வது நல்லது. சிவன் கோயில்களில் அன்னதானத்திற்கு பிரசாதம் வாங்கி கொடுப்பது நல்லது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications