12 மாதங்களுக்குப் பின்.. சுக்ராதித்ய ராஜயோகத்தால் ஜாக்பாட் அடிக்கும் 3 ராசிகள்.. அதிர்ஷ்டம் கொட்டும்

Subscribe to Oneindia Tamil

சுக்ராதித்ய ராஜயோகம்: 12 மாதங்களுக்குப் பிறகு சூரிய பகவானும், சுக்கிர பகவானும் சேர்கின்றனர். இந்த சேர்க்கை காரணமாக உருவாகும் ராஜயோகத்தால் மூன்று ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டங்கள் கிடைக்கப் போகின்றன. நற்பலன்களை எந்தெந்த ராசியினர் அனுபவிக்கப் போகின்றனர் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இடத்தை மாற்றுகின்றன. இந்த மாற்றத்தின்போதும், கிரகங்களின் சேர்க்கையின்போதும் ராஜயோகங்கள் உருவாகின்றன. சூரியன் சுக்கிரன் கிரகங்களின் சேர்க்கை 12 மாதங்களுக்குப் பிறகு நடைபெறவுள்ளது. இந்த சுக்கிரன், சூரியன் சேர்க்கையால் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகிறது. இந்த யோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம் துவங்கப் போகிறது.

lucky zodiac signs astrology

கிரங்கங்களின் சேர்க்கை, மாற்றத்தால் ஒவ்வொரு ராசியின் வாழ்க்கையிலும் சில தாக்கங்களை ஏற்படும். அந்த வகையில், கிரகங்களில் ராஜ கிரகமாக விளங்கும் சூரிய பகவான் மீன ராசியில் சஞ்சரிக்கிறார். அதே ராசியில் சுக்கிர பகவானும் அமர்ந்துள்ளார். இந்த கிரக சேர்க்கையினால் உருவாகும் சுக்ராதித்தய யோகம் சில ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம் ஆரம்பமாகிறது. 3 ராசிகளுக்கு செல்வ செழிப்பும், அதிர்ஷ்டங்கள் கொட்டும். எந்தெந்த ராசியினர் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர் என்று தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம் - சூரியன் மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் உருவாகும் ராஜயோகத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்கள் கொடுக்கும். இந்த ராஜயோகம் மிதுன ராசியின் கர்ம பாவ ஸ்தானத்தில் ராஜயோகத்தை தரப் போகிறது. இந்த காலகட்டத்தில் வேலை, வியாபாரம், தொழிலில் சிற்பான முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் நல்ல வளர்ச்சி முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.

வேலை செய்யும் இடங்களில் புதிய வாய்ப்புகள், திட்டங்கள் உருவாகும். இந்த வாய்ப்புகள் உங்களுக்கு நீண்டகால பலன்களை அள்ளித் தரும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. நிதி சார்ந்த லாபங்கள் கிடைக்கும். உங்கள் வியாபாரம், தொழிலை விரிவுபடுத்துவீர்கள். இந்த காலகட்டத்தில் தந்தையுடனான உறவு வலுப்படும்.

விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு சுக்ராதித்ய ராஜயோகத்தால் சிறப்பான காலம் தொடங்கப் போகிறது. இந்த ராஜயோகம் உங்களுடைய ஜாதகத்தின் ஐந்தாம் இடத்தில் உருவாகுவதால் சாதகமான பலன்களைக் கொடுக்கும். குடும்பத்தினருடன் இனிமையான நேரத்தை செலவிடுவீர்கள். திருமண உறவு, காதல் உறவில் இருப்பவர்களுக்கு வெற்றிகள் கிடைக்கும்.

இளைஞர்களுக்கு திருமணம், காதல் திருமணத்திற்கான வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். அமைதி உண்டாகும். வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். உங்களுடைய விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற்றும் காலமாக இருக்கும்.

கும்பம் - கும்ப ராசிக்காரர்களுக்கு சுக்ராதித்ய ராஜயோகத்தால் நன்மைகள் உண்டாகும். உங்கள் ராசியின் செல்வம், வாக்கு ஸ்தானத்தில் உருவாகுவதால் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். திடீர் பண வரவுகள் உண்டாகும். நிதி சார்ந்த விஷயங்களில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும். திடீர் நிதி ஆதாயத்தால் மகிழ்ச்சி உண்டாகும்.

நிதி சார்ந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். நீண்டகாலமாக திரும்ப வராமல் இருந்து வந்த பணங்கள் திரும்ப வருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உற்சாகம் அதிகரிக்கும், உடல் சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நோய் பாதிப்புகளால் பாதிக்கப்பட்டு வந்தவர்கள் அதிலிருந்து விடுதலை அடைவீர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+