For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொரோனா கோரத்தாண்டவம்: மே 15 - ஜூன் 24ல் உச்சத்திற்கு சென்று படிப்படியாக குறையும் - ஜோதிடர்

கொரோனா இரண்டாவது அலையின் ஆட்டம் இனிதான் இருக்கிறது என்று பிரபல ஜோதிடர் நரசிம்ம ராவ் கணித்துள்ளார். மே 15ஆம் தேதி முதல் ஜூன் 24ஆம் தேதி வரைக்கும் கொரோனாவின் கோரத்தாண்டவம் உச்சத்தில் இருக்கும் என்று கணித்துள்ளார் ஜோதிடர்.

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனாவின் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரியும் மூன்றரை லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். 3 ஆயிரம் பேர் வரை மரணமடைகின்றனர். இந்த பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் ஒரு பக்கம் கூறி வரும் நிலையில் மே 15ஆம் தேதி முதல் ஜூன் 24ஆம் தேதி வரை கொரோனா வைரஸ் இந்தியாவில் உச்சத்தை தொடும் பின்னர் படிப்படியாக குறையும் என்று கணித்துள்ளா நரசிம்ம ராவ் என்ற ஜோதிடர்.

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. தினசரியும் மூன்றரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா மரணங்களும் தினம் தினம் அச்சுறுத்தும் வகையில் உள்ளது.

நாட்டின் தலைநகரமான டெல்லியில் குவியல் குவியலாக சடலங்கள் எரிக்கப்படுகின்றன. சுடுகாடுகளில் எந்த நேரமும் அணையாமல் சடலங்கள் எரிந்து கொண்டிருப்பதைப் பார்த்து பலரும் அதிர்ந்து போயிருக்கின்றனர். மகாராஷ்டிரா, கர்நாடகாவிலும் கொரோனா பரவலின் வேகம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

கொரோனா தடுப்பூசியை மொத்தமாக கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்குக - மோடிக்கு முதல்வர் கடிதம்கொரோனா தடுப்பூசியை மொத்தமாக கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்குக - மோடிக்கு முதல்வர் கடிதம்

முழு கட்டுப்பாடுகளுடன் லாக்டவுன்

முழு கட்டுப்பாடுகளுடன் லாக்டவுன்

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர லாக்டவுன்கள், வார விடுமுறை நாட்களில் லாக்டவுன் என அமல்படுத்தினாலும் எந்த பிரயோஜனமும் இல்லை. கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. வேறு வழியின்றி மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகாவில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

உச்சத்தை தொடும் கொரோனா

உச்சத்தை தொடும் கொரோனா

மே மாதத்தில் கொரோனா உச்சம் தொடும் என்றும் தினசரி மரணங்கள் 5 ஆயிரத்திற்கும் மேல் பதிவாகும் என்றும் புள்ளிவிபரங்கள் தெரிவித்து வருகின்றன. இப்போதே மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை. சுடுகாடுகளில் இடமில்லை சடலங்கள் வரிசையில் காத்திருக்கின்றன.

அலை அலையாக வீசும் கொரோனா

அலை அலையாக வீசும் கொரோனா

கொரோனா இரண்டாவது அலையே முடியாத நிலையில் மூன்றாவது அலையும் அதி தீவிரமாகக வீசும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொரோனா எப்போது முடிவுக்கு என்று எவராலும் சொல்ல முடியாத நிலையில் கொரோனாவின் வீரியம் எப்படி இருக்கும் என்று ஜோதிடர் கணித்துள்ளார்.

அதிகம் பரவும் கொரோனா

அதிகம் பரவும் கொரோனா

மார்ச் 21 முதல் மே 7ஆம் தேதி வரை இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்லும் பலர் உயிர் பிழைத்தாலும் மரணங்களும் அதிகரிக்கும். இதனால் பதற்றமும் குழப்பமும் உண்டாகும் என்று ஜோதிடர் கணித்துள்ளார்.
2021 மே 7-15 காலகட்டங்களிலும் ஜூன் 24ல் பயங்கர உச்சகட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஜூன் 24க்குப் பிறகு படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளது.

தடுப்பூசி இறக்குமதி

தடுப்பூசி இறக்குமதி

இந்த காலகட்டத்தில் இந்தியா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்கலாம் மேலும் அதிக தடுப்பூசிகளை இறக்குமதி செய்யலாம் இது கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர முக்கிய பங்கு வகிக்க கூடும். மாஸ்க் அணிய வேண்டியது மிக முக்கியமானது என்று ஜோதிடர் கணித்துள்ளார்.

2021 - 2022ல் கொரோனா மூன்றாவது அலை

2021 - 2022ல் கொரோனா மூன்றாவது அலை

இந்தியா மற்றும் அமெரிக்காவில் டிசம்பர் 2021-பிப்ரவரி 2022ல் இன்னொரு அலை ஏற்படக்கூடும். இது பல நாடுகளைத் தாக்கும் என்றும் ஜோதிடர் நரசிம்ம ராவ் கணித்துள்ளார். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தடுப்பூசிகள் அதிகம் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார். நோயில் இருந்து தற்காத்துக்கொள்ள மாஸ்க் அணிவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் ஜோதிடர் தெரிவித்துள்ளார்.

தைரியம் வேண்டும்

தைரியம் வேண்டும்

நோய் தொற்றை விட பயம் கொடியது. எனவே அச்சத்துடன் முடங்கி விட வேண்டாம் முன்னெச்சரிக்கை அவசியம். வைரஸ் தாக்கினாலும் தைரியத்துடன் எதிர்கொள்ளுங்கள். நம்பிக்கையுடன் இருங்கள். அலட்சியம் வேண்டாம் அது பயத்தை விட கொடியது. ஆரோக்கியதாக இருககும் போதே நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையாக அதிகரித்துக்கொள்ளுங்கள் என்றும் ஜோதிடர் தெரிவித்துள்ளார்.

English summary
It has been over a year since the Covid-19 took the world by a storm, and despite the availability of vaccines, the coronavirus pandemic. Astrologer prediction the terrible peak is likely to occur during 2021 May 7-15. During May 15-June 24, there may be a gradual slowdown. By around June 24, things may be pretty much under control. Astrologer prediction Fear is worse than infection! So please do not be paralyzed with fear. Take all precautions, but, God forbid, if you catch a virus, do not be afraid. Be confident that you will win it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X