ஆகஸ்ட் மாத ராசி பலன் 2021: ரிஷப ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரப்போகுது
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு நீச பங்க ராஜயோக அமைப்பை தரப்போகிறது. பண வரவும் அதற்கேற்ப சுப செலவுகளும் தேடி வரப்போகிறது.
சென்னை: ஆகஸ்ட் மாதம் நவகிரகங்களில் சில மாற்றங்கள் ஏற்படப்போகிறது. சூரியன் தனது வீடான சிம்ம ராசியில் மாத பிற்பகுதியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். புதனும் சிம்ம ராசியில் இணைந்து பயணம் செய்தாலும் மாத பிற்பகுதியில் கன்னி ராசியில் ஆட்சி உச்சம் பெற்று பயணம் செய்யப்போகிறார். இந்த கிரக அமைப்பினால் சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு நீசபங்க ராஜயோகத்தை தரப்போகிறது.
ஆகஸ்ட் மாதத்தில் முன்னேற்றங்கள் நிறைந்த மாதமாக உள்ளது. எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும் ராகு ராசியிலும் மூன்றாம் வீட்டில் சூரியன் புதன் பயணம் செய்கின்றனர். ராசிநாதன் சுக்கிரன் நான்காம் வீட்டில் செவ்வாயுடன் பயணம் செய்கிறார். 11ஆம் தேதிக்கு மேல் 5ஆம் வீட்டில் சென்று நீச்சம் பெற்று பயணம் செய்வார். புதன் நான்காம் வீட்டிற்கும் மாத இறுதியில் 5 வீடான கன்னி ராசியில் சென்று உச்சம் பெறுகிறார். நீச்சம் பெற்ற சுக்கிரன் உடன் ஆட்சி உச்சம் பெற்ற புதன் இணைவதால் நீச்ச பங்க ராஜயோக அமைப்பை தரப்போகிறது. கேது ஏழாம் வீட்டிலும் சனி 9ஆம் வீட்டிலும் புதன் பத்தாம் வீட்டிலும் இந்த மாதத்தில் பயணிக்கின்றனர்.
ராசிக்கு சுக ஸ்தானத்தில் சுக்கிரன் செவ்வாயுடன் இணைந்துள்ளதால் பண வரவு அதிகரிக்கும் வீடு சொத்து வாங்கலாம். கடன் பிரச்சினைகள் நீங்கும் என்றாலும் அதிக கடன் வாங்கி சொத்து வாங்க முயற்சி செய்யாதீர்கள். இந்த மாதத்தில் மன ரீதியாகவும் உடல் ரீதியாவும் உற்சாகமாக இருப்பீர்கள். வேறு எந்த மாதிரியான அதிர்ஷ்டங்கள் தேடி வரப்போகிறது என்று பார்க்கலாம்.

பதவி உயர்வு
தொழில் காரகன் சனி 9ஆம் வீட்டில் பயணம் செய்வதால் வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். பதவி மாற்றம், வேலை மாற்றம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. குரு பகவான் தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்வதால் நல்ல மாற்றங்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு நான்காவது வீட்டில் செவ்வாயுடன் ராசிநாதன் சுக்கிரன் பயணம் செய்வது சுக போக யோகமாகும். வீடு நிலம் வாங்க முயற்சி செய்யலாம்.

வண்டி வாகன யோகம்
புதன் இந்த மாதம் கடகம், சிம்மம், கன்னி ராசிகளில் பயணம் செய்கிறார், செவ்வாய், சுக்கிரனுடன் புதன் பயணம் செய்கிறார். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகத்தை புதன் தரப்போகிறார். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். மாத பிற்பகுதியில் புதன் சிம்ம ராசிக்கு வந்து ஆட்சி பெற்று அமரப்போகும் சூரியனுடன் இணைவது சிறப்பு. வண்டி வாகனம் வாங்கும் யோகம் கை கூடி வந்துள்ளது.

ஆடம்பர பொருட்கள்
ராசியில் உள்ள ராகு, ஏழாம் வீட்டில் உள்ள கேது சில சிக்கல்கள் தர வாய்ப்பு உள்ளது. திருமண முயற்சிகளுக்கு சாதகமாக உள்ளது. திருமணமானவர்களுக்கு கணவன் மனைவி இடையேயான நெருக்கம் கூடும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். ஆகஸ்ட் 11ஆம் தேதிக்கு மேல் சுக்கிரன் நீச்சமடைந்து 5வது வீட்டிற்கு செல்வதால் சில நேரங்களில் மன குழப்பம் ஏற்படும். தியானம் செய்வதன் மூலம் பாதிப்புகளை குறைக்கலாம். அலுவலகத்தில் பெரிய பொறுப்புகள் வரும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. வேலையில் கவனமும் நிதானமும் தேவை.

கர்ப்பிணிகள் கவனம்
இளம் தாய்மார்கள், கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருப்பது அவசியம். பாதுகாப்பற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. அதே நேரத்தில் ஆகஸ்ட் பிற்பகுதியில் புதன் ஆட்சி உச்சம் பெற்று நீச்சம் பெற்ற சுக்கிரன் உடன் அமர்வதால் நீச்சபங்க ராஜயோக அமைப்பு ஏற்படுகிறது. இதன் மூலம் திருமண சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும், குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு புத்திரபாக்கியம் கை கூடி வரும்.

ராஜயோகம்
சூரியன் மாத பிற்பகுதியில் நான்காம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சியாகி ஆட்சி பெற்று அமர்வதால் உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டிருந்த பாதிப்புகள் நீங்கும். 24ஆம் தேதிக்கு மேல் மிகப்பெரிய யோகத்தை தரப்போகிறது. மொத்தத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முன்னேற்றங்கள் நிறைந்த சுபமான மாதமாக அமைந்துள்ளது. ஆடி அமாவாசை நாளில் குல தெய்வ வழிபாடு செய்வது மனதில் அமைதியையும் உற்சாகத்தையும் கொடுக்கும்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications