Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுக்கிரன் வீட்டில் சூரியனுடன் இணைந்த செவ்வாய்: நன்மை அடையப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

செவ்வாய் பகவான் துலாம் ராசியில் சூரியன் உடன் இணைந்துள்ளார். இந்த கூட்டணியால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் வரப்போகிறது.

Subscribe to Oneindia Tamil

மதுரை: செவ்வாய் பகவான் இதுநாள் வரை கன்னி ராசியில் புதனுடன் சஞ்சரித்து வந்தார். இன்று அக்டோபர் 21 முதல் சுக்கிரன் வீடான துலாம் ராசிக்கு இடப்பெயர்ச்சியாகி சூரியனுடன் இணைந்துள்ளார். துலாம் ராசியில் உள்ள சூரியன், செவ்வாய்க்கு மகர ராசியில் உள்ள சனிபகவானின் பார்வை கிடைக்கிறது. இந்த இடப்பெயர்ச்சி மற்றும் சனியின் பார்வையால் மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிகளில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் எப்படி இருக்கும் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

செவ்வாய் கிரகம் ஆண்மைக்கும், பெண்மைக்கும், உணர்ச்சிக்கும், வீரியத்துக்கும் காரண கர்த்தா. ஆண், பெண் உடலில் காதல் தீயை உண்டாக்குபவர். உடல் உறவில் பலத்தையும், வீரியத்தையும், வேகத்தையும் தருபவர். செவ்வாய் என்றாலே சக்தி. ஒருவருக்கு செவ்வாய் பலவீனமடையும்போது அவரும் சேர்ந்து பலவீனமடைகிறார். செவ்வாய் தோஷம் திருமண வாழ்க்கையில் தடங்களை ஏற்படுத்துகிறது. தாம்பயத் உறவில் பலத்தையும், நெருக்கத்தையும் வீரியத்தையும், வேகத்தையும் தருபவர். சுக்கிரன் இருவரையும் கவர்ந்து இழுக்கும் காந்த சக்தியாக விளங்குபவர். பெண்களுக்கு களத்திர காரகனாய் விளங்குபவர் செவ்வாய். இவர் ஒரு வைத்தியரும் கூட நோய்களை குணப்படுத்துவதில் வல்லவர்.

ராசி மண்டலத்தில் மூன்றாவதாக வீற்றிருக்கும் செவ்வாய் கிரகமானது ஆற்றல், வீரியம், செயல் திறன் மற்றும் படைப்புத் திறன் போன்றவற்றைக் குறிக்கிறது. செவ்வாய் ஒருவருடைய ராசி மண்டலத்தில் நுழையும்போது அது சில தைரியமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அதுவே ஒருவருடைய ஜாதகத்தில் அமைந்திருக்கும் விதத்தைப் பொருத்து, அவருடைய வாழ்க்கையை நேர்மறையாக அல்லது எதிர்மறையாக மாற்றக்கூடிய ஆற்றல் பெற்றது செவ்வாய் கிரகம். செவ்வாயின் இந்த ராசி மாற்றத்தினால் அனைத்து ராசியினருக்கும் சின்னச்சின்ன பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். சில ராசியினருக்கும் குறைந்த பாதிப்புகளையும் சிலருக்கு சற்று அதிக பாதிப்புகளையும் ஏற்படுத்தவும் கூடும். இந்த இடப்பெயர்ச்சியினால் உங்களின் அதிர்ஷ்ட வாய்ப்புகள் எப்படி இருக்கும் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்

மேஷம்

உங்க ராசி நாதன் செவ்வாய் பகவான் உங்க ராசிக்கு ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். அடிக்கடி உணர்ச்சி வசப்படுவீர்கள்,ராசிக்கு ஏழாம் வீட்டில் செவ்வாய் அமர்ந்துள்ளதால் இது ருசக ராஜயோகம். திருமணம் நடைபெறுவதில் இருந்த தடங்கள் நீங்கும். காரணம் மங்களகாரகன் செவ்வாய் பார்வை உங்க ராசியின் மீது விழுகிறது. அவரது எட்டாம் பார்வை உங்க குடும்ப ஸ்தானத்தின் மீதும் விழுகிறது. உங்க தொழில் ஸ்தானத்தின் மீது செவ்வாயின் பார்வை விழுவதால் புதிய வேலைகள் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும் வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். உங்களின் அப்பாவின் உடல் நலனில் அக்கறை செலுத்தவும். உஷ்ண கிரகம் செவ்வாய் கூடவே சூரியன் இணைந்துள்ளதால் வார்த்தைகளில் அனல் பறக்கும் வீட்டில் மனைவியிடம் வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிக்கொள்ளாதீர்கள். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளிடம் சண்டை வரலாம். பேச்சில் அமைதியை கடைபிடியுங்கள். உடல் நலனில் அக்கறை தேவை. மகிழ்ச்சியில் குறைவு இருக்கும். மன அழுத்தம் அதிகரிக்கலாம். செவ்வாய்கிழமைகளிலும் கந்த சஷ்டி நாளிலும் முருகப்பெருமானை வணங்க நன்மைகள் அதிகரிக்கும்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷபம் சுக்கிரனின் வீடு. உங்கள் ராசிக்கு 6வது வீட்டில் நுழைந்திருக்கிறார் செவ்வாய். ஆறாம் வீடு எதிரி ஸ்தானம், ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சனியோ செவ்வாயோ அமர்வது அற்புதமான அமைப்பு. செவ்வாய் அமர்ந்துள்ள துலாம் ராசியும் சுக்கிரனின் வீடு எனவே நீங்கள் எதிரிகளை தைரியமாக எதிர்கொண்டு வெல்வீர்கள். உடல் நலனில் அக்கறை தேவை. நீண்ட காலப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும். குடும்ப வாழ்க்கையில் அமைதியாக இருக்கும். காதலில் வெல்வீர்கள் பாஸ். சட்ட போராட்டங்களில் வெற்றி கிடைக்கும். சேர்த்து வைத்த பணத்தை பத்திரப்படுத்துங்கள். உங்களின் முகப்பொலிவு அதிகரிக்கும். கடன்கள் கேட்ட இடத்தில் கிடைக்கும். எதிரிகளை அடையாளம் கண்டு ஓட ஓட விரட்டுவீர்கள். மாணவர்களுக்கு இது அற்புதமான பெயர்ச்சி போட்டி தேர்வுகளில் வெல்வீர்கள். உடல் நலனில் அக்கறை தேவை. நீண்ட காலப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும். முருகப்பெருமானுக்கு செவ்வாய்கிழமைகளில் பாலபிஷேகம் செய்து வணங்கலாம்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு 5வது இடத்தில் செவ்வாய் பகவான் அமர்ந்துள்ளார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் அமர்வது சுமாரான அமைப்புதான். செவ்வாயின் பார்வை உங்க ராசிக்கு விரைய ஸ்தானம், லாப ஸ்தானம், ஆயுள் ஸ்தானத்தின் மீது விழுகிறது. வேலை செய்யும் இடத்தில் வாக்குவாதங்களை தவிர்க்கவும். குடும்பத்திலும் வேலை செய்யும் இடத்திலும் எதிர்ப்புகள் வலுக்கும். ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். குழந்தைகளின் உடல் நலனில் பிரச்சினை வரலாம். கர்ப்பிணிகள் கவனம் தேவை. நிதானம் அவசியம். பங்குச் சந்தையில் உங்களுக்கு சந்தோஷ செய்தி கிடைக்கலாம். நீண்ட கால முதலீடுகள் லாபத்தை தரலாம். பொறுமையாக எதையும் கையாள வேண்டும். சவால்களை சாதனைகளாக மாற்றுவீர்கள். கர்ப்பிணிப்பெண்கள் கவனமாக இருக்கவும். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள் அற்புதமாக இருக்கும்.

கடகம்

கடகம்

கடகம் ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் செவ்வாய் பகவான் அமர்ந்துள்ளார். வேலையில் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். மனைவி அல்லது கணவருக்கு பதவி உயர்வை எதிர்பார்க்கலாம். நான்காம் வீடு தாய் ஸ்தானம் இது சுக ஸ்தானம் கூட. அம்மாவின் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்யலாம். வீடு மனை வாங்கலாம் லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் எதிர் பாலினருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை வரை போகலாம். வாயைக் கட்டுவது நல்லது. திருமண வாழ்க்கையில் உரசல்கள் ஏற்படலாம். உடல் நலப் பிரச்சினைகளுக்கு வாய்ப்புண்டு. குடும்பத்தில் உறவினர்களால் மன அமைதிக்கு பங்கம் வரலாம்.

சிம்மம்

சிம்மம்

சிம்மம் ராசிக்கு 3வது வீட்டில் செவ்வாய் நுழைந்திருக்கிறார். உங்கள் ராசிநாதன் சூரியன் உடன் செவ்வாய் இணைந்துள்ளார். இது முயற்சி ஸ்தானம். உங்க தைரியம் தன்னம்பிக்கை கூடும். பொருளாதாரம் மேம்படும். வெளியூர் பயணங்களுக்கு வாய்ப்புண்டு. வேலையில் உங்களுக்கு சாதகமான சூழல் நிலவும். உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும், இளைய சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சின்னச் சின்ன வாக்குவாதங்கள் வரலாம். உரசல்களை தவிர்த்து விடுங்கள். வேலை விசயமாக சிறு பயணம் செல்வீர்கள். பயணங்களினால் நன்மைகள் நடைபெறும். உங்களின் உடல் நலம் மேம்படும். உடல் நலப் பிரச்சினை தீரும். மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்கு இரண்டாம் இடத்தில் செவ்வாய் பகவான் நுழைந்துள்ளார். இரண்டாம் வீடு குடும்ப ஸ்தானம், தன ஸ்தானம், வாக்கு ஸ்தானம். வாக்கில் உஷ்ண கிரகம் சூரியன் உடன் செவ்வாய் இணைந்து இருப்பதால் நாக்கில் கவனம். கோபமாக சுள்ளென்று பேச வேண்டாம். மனைவியுடன் மோதல் மூளும் வாய்ப்புகள் உள்ளன. பிசினஸில் ஈடுபட்டுள்ளோருக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். வேலையில் பிரச்சினை வர வாய்ப்புள்ளது. கவனமாக இருப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் சவாலான சூழ்நிலை ஏற்படும். கடினமான பணிகளை செய்ய வேண்டியிருக்கும். பிசினஸ் பேச்சுவார்த்தை சுமாராகவே இருக்கும். முதலீடுகளில் லாபம் கிடைக்கும். குழந்தைகளின் உடல் நலனில் கவனம் தேவை. கணவர் அல்லது மனைவி அல்லது பெற்றோரில் யாராவது ஒருவருக்கு உடல் நலக் குறைபாடுகள் ஏற்படலாம். உணவில் கவனமும் அக்கறையும் தேவை.

துலாம்

துலாம்

செவ்வாய் உங்கள் ராசியில் நுழைந்திருக்கிறார். ராசியில் ஏற்கனவே உஷ்ண கிரகம் சூரியன் இருப்கிறார் கூடவே செவ்வாய் இணைவதால் கோபம் அதிகரிக்கும். மனைவியுடன் சண்டை வரும் கவனம் ப்ளீஸ். சுறுசுறுப்பாக வேலை செய்யுங்கள். உடல்நலம் பாதிக்கப்படலாம். மற்றவர்களை அடக்கி ஆளுவீர்கள். அதேசமயம் யாருடனவாவது சண்டை மூள வாய்ப்புள்ளது. கோபத்தோடு எழுபவன் நஷ்டத்தோடு அமர்வான் எனவே சண்டை போடாதீர்கள். கோபத்தை தவிர்த்து விடுங்கள். எனக்கு ஏன் இப்படி என்ற மன அழுத்தம் இருக்கலாம். வாகனங்களை ஓட்டும்போது கவனம் தேவை. இந்த இடப்பெயர்ச்சி காலத்தில் முருகப்பெருமானை செவ்வாய்கிழமைகளில் வணங்குவதால் நன்மைகள் நடைபெறும்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே... உங்கள் ராசிநாதன் செவ்வாய் 12வது வீட்டில் அமர்ந்துள்ளார். 12 ஆம் இடம் செலவு, விரைய ஸ்தானம், மோட்சம், தூக்கம் ஆகியவைகளை குறிக்கும் இடம். பிசினஸ் செய்பவர்களுக்கு திடீர் செலவுகள் வரலாம். வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனமாக செல்வது அவசியம். சிறிது கவனம் பிசகினாலும் விபத்தின் மூலம் மருத்துவ செலவுகளும் வரும். திருமண வாழ்க்கையில் சின்னச் சின்ன சண்டை வரலாம். மனைவியுடன் வாக்குவாதத்திற்கு வாய்ப்புள்ளது. வெளிநாடு செல்லும் யோகம் கூடும். அல்சர் போன்ற உபாதைகளுக்கு வாய்ப்புண்டு. உறக்கம் கெடும் இதனால் மன அமைதி கெடும். பண விசயத்தில் முக்கிய முதலீடுகளை தவிர்த்து விடுங்கள். கவனமாக இல்லாவிட்டால் உடல் நலம் பாதிக்கப்படும்.

 தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களே இனி உங்கள் ராசிக்கு 11வது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்கிறார். நிறைய பலன்களை எதிர்பார்க்கலாம். அடுத்த 6 வாரங்களுக்கு உங்களுக்கு யோகம்தான். பணவரவு அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு உயரும். மனைவியுடன் வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். சொத்துப் பிரச்சினைகள் தீரலாம். கோர்ட் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கலாம். முன்னோர்கள் சொத்துக்களை விற்பனை செய்வதில் கவனம் தேவை. குழந்தைகளுக்கு நன்மைகள் நடைபெறும். செவ்வாய்கிழமையன்று துர்க்கா தேவியை செவ்வரளி பூக்களைக் கொண்டு வணங்கலாம் பாதிப்புகள் குறையும்.

மகரம்

மகரம்

மகரம் ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் செவ்வாய் பகவான் அமர்ந்துள்ளார். பத்தாம் வீட்டில் செவ்வாய் அமர்வது ராஜயோகம் வரும் காலம். நல்ல நேரம் வந்து விட்டது. அரசு பணியாளர்கள், காவல்துறையினர், தீயணைப்புத்துறையினருக்கு நன்மைகள் நடைபெறும் காலம். வேலையில் முன்னேற்றம் கிடைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வுக்கு வாய்ப்பு உண்டு. உயர் பதவிகளை அடைவீர்கள். பொறுப்புகள் கூடும். தனிப்பட்ட வாழ்க்கையில் சிலபிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. உறவினர்களிடம் உற்சாகமாக இருப்பீர்கள். அம்மா வழி உறவினர்கள் அன்புடன் இருப்பார்கள். மாணவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். சொத்து சேர்க்கை ஏற்படும்.

கும்பம்

கும்பம்

கும்பம் ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு 9வது வீட்டில் செவ்வாய் பகவான் அமர்ந்துள்ளார். வேலையில் மாற்றம் ஏற்படலாம். பொருளாதாரம் வலுப்பெறும். திருமணமான தம்பதிகள் சந்தோஷமாக இருப்பீர்கள். காதல் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். உங்க கருத்தை உங்க வாழ்க்கை துணை புரிந்து கொள்வார். வெளியூர் செல்லும் வாய்ப்பு வரும். தேவையற்ற செலவுகளை தவிர்த்து விடுங்கள். பெற்றோர்களின் உடல் நிலையில் கவனம் தேவை. பிசினஸில் பெரிய அளவில் லாபம் இருக்காது என்றாலும் நிநி நிலைமை நிலையாக இருக்கும். வெளியூர் செல்லும் வாய்ப்பு வரும். செவ்வாய் கிழமைகளில் முருகப்பெருமான வணங்க நன்மைகள் நடைபெறும் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று வணங்கலாம்.

மீனம்

மீனம்

செவ்வாய் இப்போது உங்கள் ராசிக்கு 8வது வீடான அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். செவ்வாய் பகவானின் பார்வை குடும்ப ஸ்தானம், தன ஸ்தானங்களின் மீது விழுகிறது. பணம் வரும் வாய்ப்பு ஏற்படும். தைரியம் கூடும். எதிலும் திருப்தி இருக்காது. கடுமையாக உழைக்க நேரிடும். எதிர்பாராத லாபம் ஒன்றை சந்திப்பீர்கள். விபத்துகாரகர் எட்டில் அமர்வதால் வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. ஏற்கனவே சூரியன் வேறு அங்கே சஞ்சரிக்கிறார். கூடவே செவ்வாய் இணைவதால் சிறு சிறு விபத்துகள் ஏற்படும். காரமான உணவுகள் எண்ணெய் பலகாரங்களை சாப்பிட வேண்டாம் வயிறு பிரச்சினைகள் வந்து விடும் கவனம் தேவை. ரத்தம் தொடர்பான பிரச்சினைகளுக்கு வாய்ப்புண்டு. கவனம் அதிகம் தேவை. மன அழுத்தம் கூடும். கந்த சஷ்டி கவனம் படித்து முருகனை வணங்க நன்மைகள் நடைபெறும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+