சித்திரை மாதத்தில் பணத்தை அள்ளும் 3 அதிர்ஷ்ட ராசியினர்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா
சித்திரை மாத ராசி பலன்: தமிழ் புத்தாண்டு பிறந்துவிட்டது. இந்த விசுவாவசு வருடத்தின் முதல் மாதமான சித்திரை மாதத்தில் இருக்கிறோம். பல புதிய நம்பிக்கைகள், கனவுகளுடன் புதிய வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளோம். இந்த சித்திரை மாதத்தில் பல முக்கிய கிரகங்களில் பெயர்ச்சியும் உள்ளன. இந்த மாதத்தில் அதிர்ஷ்டத்தை அள்ளும் 3 ராசியினர் குறித்து இந்தக் கட்டுரையில் காணலாம்.
பொதுவாக சித்திரை பௌர்ணமி விரதத்துக்கு சிறந்த மாதம். தங்கம் வாங்குவதற்கும், புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கும் இது சிறந்த காலம். இந்த மாதத்தில் சுக்கிரனும், வியாழனும் பரிவர்த்தனை நிலையில் உள்ளனர். சூரியன் உச்சம் பெற்றுள்ளார். சனி சொந்த வீட்டில் இருக்கிறார். நீட்சபங்க மற்றும் பரிவர்த்தனை யோகங்கள் உள்ளன. கன்னி, விருச்சிகம், மகரம் ராசியினருக்கு சிறப்பாக இருக்கும்.

இந்த மாதம் ராகு கேது பெயர்ச்சி, குரு பெயர்ச்சி ஆகிய 2 முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. 26.4.2025 தேதி ராகு பகவான் கும்ப ராசிக்கும், கேது பகவான் சிம்ம ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். குரு பகவான் 11.5.2025 மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். 30.4.2025 புதன் நீட்ச நிலையில் இருந்து விலகி மேஷ ராசியில் சஞ்சரிக்கவுள்ளார்.
இப்படி பல முக்கிய நிகழ்வுகள் இந்த சித்திரை மாதத்தில் நிகழவுள்ளது. மேலும், 4.5.2025 - 28.5.2025 அக்னி நட்சத்திர காலகட்டம். இந்த காலத்தில் சுப நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும். சித்திரை மாதத்தில் பணத்தை குவிக்கும் 3 ராசியினர் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக காணலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு மனக் கவலைகளில் இருந்து விடுபடப் போகிறீர்கள். ராகு கேது பெயர்ச்சி அற்புதமான பலன்களை கொடுக்கும். எடுத்த அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறுவீர்கள். உத்யோகம் மற்றும் தொழிலில் வளர்ச்சி உண்டாகும். மேலதிகாரியிடம் இருந்த சிக்கல்கள் விலகி அவர்கள் உங்கள் கருத்துகளுக்கு மதிப்பளிப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். மன நிம்மதி ஏற்படும். புதன், சனி, சுக்கிரன் உங்கள் ராசியை பார்ப்பது சிறப்பான பலன்களை அள்ளித்தரும்.
திடீர் அதிர்ஷ்டங்கள் தேடி வரும். அரசு தொடர்பான காரியங்களில் அணுகூலம் கிடைக்கும். அரசுப் பதவிகள் கிடைக்கும். வீடு, நிலம், வண்டி வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. வெளிநாடு செல்லக் கூடிய யோகம் உண்டாகும். பயணங்களால் ஆதாயம் உண்டு. சுபகாரிய தடைகள் நீங்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு அதற்கான முயற்சியில் முன்னேற்றம் இருக்கும். நீண்ட காலமாக திட்டமிட்ட வீடு, பணி ஆகியவற்றில் மாற்றங்கள் நிகழும்.
தனாதிபதி உச்ச பலத்தில் இருப்பதாலும், குரு - சுக்கிரன் பரிவர்த்தனையாலும் பொருளாதாரத்தில் எந்தக் குறைவும் இருக்காது. பண வரவு சிறப்பாகவே இருக்கும். கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்கள் வாக்குக்கு செல்வாக்கு கூடும். முடிவுகள் எடுப்பதற்கு முன்பு நன்கு சிந்தித்து தெளிவாக செயல்பட வேண்டும். பயணங்கள், அலைச்சல் கூடும். எதிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். உங்கள் வீட்டின் அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று வழிபடுவது முன்னேற்றத்தை கொடுக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு வெற்றி செய்திகள் வீடு தேடி வரும். 5 ஆம் இடத்தில் புதன், சுக்கிரன் யோகம் வருகிறது. வாழ்க்கை துணை மூலம் ஆதாயம் கிடைக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். பிள்ளைகள் விஷயத்தில் இருந்த மனக்கவலைகள் நீங்கும். குழந்தைகளின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் நல்ல தகவல்கள் கிடைக்கும்.
உத்யோகம், தொழில் மிக சிறப்பாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கி உடல்நலத்தில் முன்னேற்றம் காணப்படும். மனதில் தெளிவு, உற்சாகம் அதிகரிக்கும். வீண் விரயம் சரியாகும். கடந்த காலங்களில் தடைபட்ட காரியங்கள் எல்லாம் தற்போது நிறைவேறும். பழைய பாக்கி வசூலாகும்.
உத்யோகத்தில் உங்களுக்கான உரிய அங்கீகாரம் கிடைக்கும். புதிய பொறுப்புகள் தேடி வரும். பணவரவுக்கு எந்த குறையும் இருக்காது. ஏதாவது ஒரு ரூபத்தில் பண வரவு இருந்து கொண்டே இருக்கும். தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். நிலம், வீடு, வண்டி ஆகிய சொத்துகளை வாங்குவீர்கள்.
அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்த தடைகள் விலகி அதில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அரசுப் பணிக்கு முயற்சி செய்வோருக்கு வெற்றி கிடைக்கும். தந்தையுடன் இருந்த பிரச்னைகள் நீங்கும். பண விஷயத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும். குடும்ப உறவுகளில் அவ்வபோது கருத்து வேறுபாடு வரும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
மகரம்
மகர ராசியை குரு பார்ப்பதால் ஏராளமான நன்மைகள் உண்டாகும். இனி பொருளாதாரத்தில் மேன்மை அடையும் காலகட்டமாக இருக்கும். உங்கள் முயற்சியால் தன வரவுகள் மேம்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. பல்வேறு வகையில் அபரிமிதமான பண வரவைப் பெறுவீர்கள். எழுத்து, ஆவணங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சுக்கிரன் உச்ச பலத்தில் இருப்பதால் தொழில், வியாபார ரீதியாக வெளியூர் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. அரசு, அரசு சார்ந்த விஷயத்தில் சில அனுகூலங்களைக் கொடுக்கக்கூடிய மாதமாக இருக்கும். நீண்டநாள்களாக அரசு சார்ந்த இழுபறியாக இருந்த விஷயங்களை செய்து முடிப்பீர்கள். வண்டி வாகனங்களை இயக்கும்போது கவனம் தேவை. இரவு நேர பயணத்தை தவிர்ப்பது நல்லது.
குழந்தைகளின் நலன் திருப்திகரமாக இருக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். குழந்தைகளுக்காக எடுக்கக்கூடிய முயற்சிகள் வெற்றியைத் தரும். வம்பு வழக்கு எதிரிகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. கடன் வாங்குவதற்கான வாய்ப்பு ஏற்படும். கடனை சுப கடனாக மாற்றிக் கொள்வது நல்லது. நீண்ட நாட்களாக திருமணமாகாமல் இருந்தவர்களுக்கு இனி திருமண யோகம் கைகூடி வரும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கோடீஸ்வர யோகம் பெறும் சிம்ம ராசி.. அள்ளிக் கொடுக்கும் குரு, கேது பகவான் -
தமிழ் புத்தாண்டு பலன்: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டமும், ஆபத்தும் சேர்ந்து வருது.. இந்த விஷயத்தில் கவனம் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்!












Click it and Unblock the Notifications