தனுசு ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் குரு, சுக்கிரன்.. ராஜயோகத்தால் வாழ்க்கையே குஷியாகப் போகுது
Aavani matha palan: ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதம் பிறக்கப் போகிறது. 2025 ஆம் ஆண்டின் ஆவணி மாதத்தில் தனுசு ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள், என்னென்ன நன்மைகள் கிடைக்கும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2025 ஆவணி மாதம் பிறக்கப் போகிறது. சூரியனின் இயக்கத்தை வைத்தே தமிழ் மாதங்கள் ஆரம்பமாகின்றன. அதன்படி, தலைமை கிரகமான சூரியன் ஆட்சி என்கிறது உயர்நிலை அமைப்போடு சிம்மத்தில் வலுவாக இருக்கப் போகிறார். இது விசேஷமான அமைப்பாகும். குரு மிதுனத்திலும், சனி மீனத்திலும், சுக்கிரன், புதனின் இயக்கங்கள் கடகத்திலும், சிம்மத்திலும் மாறியிருக்கின்றன.

கன்னியில் செவ்வாய் இருப்பது நல்ல விசேஷமான நிலையாகும். புதனில் குருவும், செவ்வாயும், கடகத்தில் சூரியன், புதன், சுக்கிரன் இருப்பது நல்ல அமைப்பாகும். கும்பத்தில் இருக்கும் ராகுவை குரு பார்ப்பது நல்ல மாற்றங்களைத் தரும். அந்த வகையில் இந்த ஆண்டு ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதம் பிறக்கிறது.
இந்த ஆவணி மாதத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், ஏற்படப் போகும் மாற்றங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு அட்டகாசமான மாதமாக இருக்கும். செவ்வாய் 10 ஆம் இடத்தில் இருக்கிறார். பாக்கியாதிபதியான சூரியன் 8 இல் மறைந்திருந்த நிலையில் இப்போது 9 ஆம் இடத்தில் இருக்கிறார். தந்தை வழியிலான நன்மைகள் ஏற்படும். பாக்கியங்கள், கோயில் திருப்பணி தொடர்பான விஷயங்கள், ஆலயத் திருப்பணி, யாத்திரிகள் தொடர்பான விஷயங்கள் என அனைத்து விஷயங்களிலும் அற்புதம் ஏற்படும்.
குரு, சுக்கிரன்
மாதத்தின் ஆரம்பத்தில் 7 ஆம் இடத்தில் இருந்த குரு, சுக்கிரன் இருவரும் ராசியைப் பார்க்கின்றனர். இரண்டு சுபர்கள் வலுத்துப் பார்க்கின்றனர். தனுசு ராசிக்காரர்களுக்கு முதுகில் குத்த தெரியாது. பிறரை கெடுத்து வாழ தெரியாது. தனுசு ராசிக்காரர்கள் நல்லவர்களாக இருப்பதுதான் உங்களுக்கு பலவீனமே. இனி உங்களுக்கு படிப்படியாக நன்மைகள் ஏற்படும் காலகட்டமாக இருக்கும்.
அனுகூலம்
தந்தை வழியிலான நன்மைகள் ஏற்படும். அப்பாவின் உடல்நிலை சரியில்லை, கணவர், மனைவிக்கு அப்பாவுடன் ஆகவில்லை என்ற வருத்தங்களில் இருப்பவர்களுக்கு அந்த நிலைகள் எல்லாம் மாறும். தந்தை தொடர்பான விஷயங்களில் அனைத்து விதமான நன்மைகளும் ஏற்படும். இல்லையெனில் அவர் மூலமாக உங்களுக்கு நன்மைகள் ஏற்படும். தந்தை வழி சார்ந்த விஷயங்களில் மிகப்பெரிய நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
சொத்துகளை அனுபவிக்கும் யோகம்
அப்பா தந்த சொத்துகளை அனுபவிக்க முடியாமல் கோர்ட், கேஸ் என அலைந்து கொண்டிருந்திருப்பவர்களுக்கு சுமூகமான நல்ல தீர்வுகள் கிடைக்கும். 9 ஆம் இடத்தில் சூரியன் வலுவாக இருக்கக்கூடிய அமைப்பில் தொழில் செய்யக்கூடிய தைரியம் உண்டாகும். தொழில் அமைப்புகளில் சரியான இடத்தில் கடை கிடைக்கவில்லை, வேலை ஆட்கள் கிடைக்கவில்லை என்றிருந்தவர்களுக்கு உதவிகள் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும்.
வெற்றி
பெரும்பான்மையான விஷயங்கள் உங்களுக்கு நன்மையையும், வெற்றியையும் ஏற்படுத்தும். 4 ஆம் இடத்தில் சனி இருப்பதால் அம்மா சார்ந்த விஷயங்களில் சிறு மன வருத்தங்கள் இருக்கும். என் பேச்சையே கேட்பதில்லை என்பது போன்று சில விஷயங்களில் நம்மைப் பற்றி கவலைப்படக்கூடிய நிலை ஏற்படும். தூர இடத்தில் இருப்பவர்களுக்கு அம்மா தொடர்பான கவலைகள் இருக்கும்.
அர்த்தாஷ்டம சனி
அம்மாவிடம் சில விஷயங்களுக்கு அனுமதி வாங்குவதில் அர்த்தாஷ்டம சனியின் காரணமாக கருத்து வேறுபாடுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. மற்றபடி அனைத்து விஷயங்களிலும் உங்களுக்கு சாதமாக நிலை ஏற்படும். இனி படிப்படியாக உங்களுக்கு நன்மைகள் ஏற்படும் காலகட்டமாக இருக்கும். தொழில், வியாபாரம், உத்தியோகம் என அனைத்து விஷயங்களிலும் நன்மை பெறுவீர்கள்.
-
Simmam: ஜூன் 15க்கு பிறகு சிம்மத்தின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்!.. குரு பார்வையால் வரும் அதிர்ஷ்டம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications