தனுசு ராசிக்கு ஆகஸ்ட் மாதம் இல்ல.. அதிசய மாதம்.. தொட்டதெல்லாம் ஹிட்டு
ஆகஸ்ட் மாத ராசி பலன் 2025: ஆகஸ்ட் மாதத்தில் முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த ஆகஸ்ட் மாதத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஆகஸ்ட் மாதத்தில் மிதுன ராசியில் குரு பகவானும், சுக்கிர பகவானும் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி வரை இணைந்து இருக்கின்றனர். இந்த காலகட்டத்தில் மகாலட்சுமி வழிபாடு செய்வது அற்புதமான மாற்றங்களை கொடுக்கும். நாச்சியார் திருமொழி கேட்பது, படிப்பது வெற்றியைத் தரும். தற்போது கடக ராசியில் இருக்கும் புதன் பகவான் சிம்ம ராசிக்குள் பிரவேசமாகியிருக்கிறார்.

சுக்கிர பகவான் ஆகஸ்ட் 22 ஆம் தேதி மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு வருகிறார். கன்னியில் செவ்வாய், கும்பத்தில் ராகு, மீனத்தில் சனி பகவான் வக்கிரமாக இருக்கிறார். அந்த வகையில், இந்த ஆகஸ்ட் மாதத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இது மிக சிறப்பான மாதம். உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் செவ்வாய் இருக்கிறார். இதனை தசம அங்காரக அமைப்பு என்று கூறுவார்கள். ஏழாம் இடத்தில் குரு மற்றும் சுக்கிரன் அமர்ந்து ராசியை பார்த்து கொண்டிருக்கிறார்கள். இது மிகவும் அற்புதமான அமைப்பு. மனதில் நினைத்த காரியங்கள் எல்லாம் நிறைவேறும். தொட்டது துலங்கி நீங்கள் இறங்கிய காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும்.
பயணங்கள்
வெளியூர், வெளிநாடுகளில் இருப்போருக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். தந்தையுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். தந்தை வழி உறவால் ஆதாயம் உண்டு. வீண் விரயம் குறையும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மனதில் நீண்ட காலமாக யோசித்த புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. கோயில் கட்டுவது உள்ளிட்ட முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.
தன்னம்பிக்கை
மனதில் இருந்த கவலைகள், பாரம் குறையும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். யோக பலன்களை அதிகளவு பெறுவீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டு. கணவன் - மனைவி உறவில் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி அந்நியோநியம் அதிகரிக்கும். காதல் உறவில் இனிமை கூடும். புதிய காதல் வெற்றியாக மாறி திருமண நிலைக்கு செல்லும்.
வெற்றி
உத்யோகம், தொழிலில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். விவசாயம், விளை பொருட்கள் வியாபாரம், ரியல் எஸ்டேட், கட்டுமானத்துறையில் இருப்போர் ஏற்றம் காண்பார்கள். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். சகோதரி உறவுகளால் அதிர்ஷ்டம் ஏற்படும். உங்கள் சகோதரியுடன் இணைந்து செய்யும் முயற்சிகளில் பிரம்மாண்ட வெற்றி கிடைக்கும்.
பரிகாரம்
கல்வியில் இருந்த தடைகள் விலகி அடுத்தகட்டத்துக்கு செல்வீர்கள். முதலீட்டில் இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும். எல்லா வகையிலும் முன்னேற்றம் ஏற்படும். குல தெய்வத்தின் அருள் பரி பூரணமாக உள்ளது. உங்கள் குல தெய்வ கோயில் சென்று வழிபடுவது அதி அற்புதமான பலன்கள் கிடைக்கும்.
-
கண்ணா 2 லட்டு திண்ண ஆசையா.. விருச்சிகத்துக்கு இந்த வாரம் அடிக்கும் ஜாக்பாட் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Rasi Palan This Week: கும்பத்திற்கு ஜாக்பாட் வாரம்.. தொழில் வளர்ச்சி, பண யோகம் -
Rasi Palan This Week: மகரத்திற்கு வெற்றி மேல் வெற்றி!.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
லக்கி பாஸ்கராகப் போகும் கன்னி ராசியினர்.. இந்த வாரத்தில் வரப்போகும் குட்நியூஸ் -
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும் அற்புத காலம் -
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு எதிர்பாராத பணவரவு.. 7 நாட்களில் வரப்போகும் நல்ல மாற்றம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல்












Click it and Unblock the Notifications