Rasi Palan This Week: தனுசு ராசிக்கு அள்ள அள்ள தங்கம்.. நன்மைகளை அள்ளிக் கொடுக்கும் வாரம்
வார ராசி பலன்: அக்டோபர் 13 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரையிலான புரட்டாசி 27 முதல் ஐப்பசி 2 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் துலாம் ராசியில் நீச்சமாக இருக்கக்கூடிய மாதமே ஐப்பசி. அக்டோபர் 18 ஆம் தேதி முதல் நவம்பர் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி மாதத்தில் மழை, வெள்ளம், புயல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள், பெரும் புகழ்மிக்கவர்கள், தொழிலதிபர்கள், உலகத் தலைவர்கள், பிரதமர்கள், ராணுவத் தளபதிகள், முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.
அந்த வகையில், அக்டோபர் 13 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரையிலான புரட்டாசி 27 முதல் ஐப்பசி 2 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு லாபம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். செலவுகள் நிறைய ஏற்படும். ஆனால் அவை சுப விரயமாக இருக்கும். தாய் வழி உறவும், தந்தை வழி உறவும் மேன்மை அடையும். மனஅழுத்தம் படிப்படியாகக் குறையும் காலகட்டம். ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது.
நம்பிக்கை
கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் காப்பற்ற வேண்டும். உத்தியோகம் ரீதியாக எதிர்பார்த்து வந்த நல்ல விஷயங்கள் அனைத்தும் உண்டாகும். புதிய நம்பிக்கை, புத்துணர்ச்சி பெருகும். யோக பலன்களை அதிகளவில் பெறக்கூடிய சூழல் ஏற்படும். ஞாயிற்றுக்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு கோதுமை தவிடு, கோதுமை மாவு, சப்பாத்தி, வெல்லம் கலந்து கொடுப்பது நன்மையைத் தரும்.
கவனம்
சிறு சிறு தடைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. கோபப்படுவதைத் தவிர்ப்பது நல்லது. துணை விஷயத்தில் இணக்கமாக இருப்பது நன்மையை ஏற்படுத்தும். மற்றவர்களுக்காக உங்கள் துணையை கடுமையாகப் பேசுவதை தவிர்க்க வேண்டும். தனிப்பட்ட முறையில் குடும்பத்தில் மற்றவர்கள் தலையிடுவதையும், மற்றவர்கள் குடும்பத்தில் உங்களுடைய தலையீடும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பதவி உயர்வு
உத்தியோகம், தொழில், படிப்பு, வியாபாரத்தில் அனுகூலமும், சந்தோஷமும் ஏற்படும். பதவி உயர்வு கிடைக்கும். லாபங்கள் நிறைந்த வாரமாக இருக்கும். கட்சிப் பதவிகள் கிடைக்கும். வீடு உங்கள் பெயரில் வாங்கும் யோகம் உண்டாகும். நிறைய பிரச்சனைகளில் இருந்து வெளிவரும் காலகட்டம். சண்டை போட்டு காரியத்தை முடிப்பீர்கள். கால், பாதம், விட்டமின் குறைபாடுகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.
வழிபாடு
அண்ணன், தம்பியுடன் இணக்கமான சூழல் ஏற்படும். ஜாக்பாட்டான காலகட்டமாக இருக்கும். மிகப்பெரிய ஏற்றம், மாற்றம் உண்டாகும். தைரியமாக எல்லா விஷயத்தையும் முடிப்பீர்கள். விட்டுக் கொடுக்காமல் இருப்பது நன்மை பயக்கும். ருத்ரன் வழிபாடு செய்வது நன்மைகளை அள்ளிக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications