Rasi Palan This Week: தனுசு ராசிக்கு பிரகாசமான மாற்றம் காத்திருக்கு.. புரோமோஷன் கன்ஃபார்ம்
Dhanusu Rasi Palan: பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, தை 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் பிறந்துள்ளது. இந்த தை மாதத்தில் பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, தை 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
தனுசு
தனுசு ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும் காலகட்டம். உள்ளூர், வெளியூர், கடல் கடந்த பயணங்கள் அனுகூலத்தை தரும். இதுவரை இருந்து வந்த மனம் சார்ந்த பிரச்சனைகள் தீரும். விடுபட்ட குலதெய்வ வழிபாடுகளைச் செய்வது நன்மையைத் தீரும். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் பரிபூரணமாக நீங்கும்.
யோகம்
பல், கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வந்து போகும். குடும்பத்தில் சிறிய சிறிய சஞ்சலங்கள் நிவர்த்தியாகும். பேச்சு கம்பீரமாகும். பணப் பிரச்சனையே இருக்காது. வேலைவாய்ப்பு தொடர்பான ஆர்டர்கள் வரும். சூரியன், செவ்வாய் இணைவு இருப்பதால் நீங்கள் சொல்லும் விலைக்கு நிலத்தை விற்பீர்கள். நிலம், வீடு, இடம், பூர்வீக சொத்துகள் விற்கும் யோகம் உண்டு. சிவபெருமான், முருகன் தரிசனம் செய்வீர்கள்
மாற்றம், முன்னேற்றம்
3 ஆம் இடத்தில் சுக்கிரன், புதன், ராகு இருப்பதால் அற்புதமான காலகட்டமாக இருக்கும். இடமாற்றம், வீடு மாற்றம், மனை மாற்றம், புதிய வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். எதற்காகவும் கவலைப்படத் தேவையில்லை. ஜெயிக்க முடியும் என்கிற தன்னம்பிக்கை பிறக்கக்கூடிய வாய்ப்பு ஏற்படும். எதற்கும் பயப்படாத நிலைமை ஏற்படும். தனியாக நின்று ஜெயிக்கும் யோகம் உண்டாகும்.
அனுகூலம்
புதிய தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம் ஏற்படும் அற்புதமான காலகட்டம். படைப்பாளிகள், கலைத் துறையினர், மீடியா துறையினர், அறிவியல் அறிஞர்களுக்கு பெரிய விருதுகள் கிடைக்கும். நல்ல பதவி உயர்வுகள் கிடைக்கும். பரம்பரையாக உறவு முறையில், நட்பு முறையில் இருந்தவர்களைப் பார்க்கக்கூடிய யோகம் உண்டாகும். மனதில் சந்தோஷம் ஏற்படும். மனதில் சந்தோஷம் ஏற்படும். இனம் புரியாத பயம் எல்லாம் தீரும்.
வழிபாடு
தனுசு ராசியினருக்கு கண்டிப்பாக அரசு கெளரவமும், அரசியல்வாதிகளுக்கு ஏற்றமும் ஏற்படக்கூடிய காலகட்டமாக இருக்கும். காது, மூக்கு, தொண்டை, இருமல், சளி தொந்தரவு, தோள்பட்டை வலி தொடர்பான விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அம்மன் வழிபாடு மன நிம்மதியை ஏற்படுத்தும். துர்க்கை காயத்ரியை கேட்பது எல்லா விஷயத்திலும் வெற்றியை ஏற்படுத்தும்.
-
Mithunam: சிக்ஸர் அடிக்கும் மிதுன ராசி.. அள்ளிக் கொடுக்கும் கிரகங்கள்.. யோக காலம் -
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
குருப்பெயர்ச்சி: குருவின் அருளால் துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்? -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications