Rasi Palan This Week: தனுசு ராசிக்கு அதிர்ஷ்டத்துக்கு மேல் அதிர்ஷ்டம்.. ஆரோக்கியத்தில் மட்டும் ரொம்ப கவனம்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: ஆகஸ்ட் 19 முதல் 24 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதம் பிறக்கப் போகிறது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

Weekly rasi palan Dhanusu Lucky zodiac signs

இந்த ஆவணி மாதத்தில் புதன் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இந்த மாதத்தில் கடகம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிறைய பேருக்கு வேலையில் நிரந்தர தன்மை உண்டாகும். திடீர் பண வரவுகள் ஏற்படும். மிதுனம், துலாம், கும்ப ராசிக்கும் நன்றாக இருக்கும். வீடு வாங்குவோருக்கு

அந்த வகையில், ஆகஸ்ட் 19 முதல் 24 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு அதிக அளவில் நற்பலன்கள் கிடைக்கும் காலகட்டம். பயணங்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். உறவினர்கள் மத்தியில் இருந்த கஷ்டங்கள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். திட்டமிட்டு செய்யக்கூடிய விஷயங்கள் மிகப்பெரிய ஏற்றத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும். இதுவரை தடை ஏற்பட்டுக் கொண்டிருந்த விஷயங்கள் அனைத்தும் இனி அடுத்தடுத்து நடக்கும்.

லாபம்

வியாபாரத்தில் இருந்த பாதிப்புகள் நீங்கி நல்ல லாபங்கள் கிடைக்கத் தொடங்கும். தொடர்ச்சியாக இருந்து வந்த மனம் சார்ந்த பிரச்சனைகள், பணம் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும். புதிய அறிமுகத்தில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் காணப்பட்டிருந்த சிக்கல்கள் தீர்வது அனுகூலத்தை தரும்.

ஆரோக்கியம்

முதுகு, கழுத்து, வயிறு வலி தொடர்பான விஷயங்கள், பற்கள் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி நன்மையை ஏற்படுத்தும். மற்றபடி அனைத்து விஷயங்களிலும் சிறிது சிறிது தடைகள் ஏற்பட்டாலும் பொறுமையாக இருந்தால் சந்தோஷமாக முடிக்கக்கூடிய அமைப்பு உண்டாகும். தொழில், வியாபாரத்தில் இருந்த வந்த தடைகள் அனைத்தும் தவிடு பொடியாகும்.

குடும்பம்

குடும்பத்தில் உறவினர்கள் வருகை, நண்பர்கள் வருகை என மகிழ்ச்சிகரமான காலகட்டமாக இருக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல காரியங்கள் அனைத்தும் இனி நடக்கும். பூமி சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த தொடர்ச்சியான பாதிப்புகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். துணையுடன் இருந்து வந்த மன வருத்தங்கள் எல்லாம் தீரும்.

பரிகாரம்

குடும்பத்தில் அந்நியோன்யம், மகிழ்ச்சி அதிகரிக்கும். கடல் கடந்த பயணங்கள் போன்ற நல்ல விஷயங்கள் நடக்கும். வேற்று மொழி மனிதர்களால் அதிக அளவிலான ஆதாயம் ஏற்படும். ஞாயிற்றுக்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு உணவு தானமாக அளிப்பது நல்ல மாற்றத்தையும், ஏற்றத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+