தன்வந்திரி ஜெயந்தி - நோயற்ற வாழ்வுக்கு தன்வந்திரி பகவானை வணங்குங்கள்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். உடல்நலத்துடன் திகழ இந்த போற்றியை தினமும் விளக்கேற்றி பக்தியுடன் பாராயணம் செய்வது நல்லது.
சென்னை: மகாவிஷ்ணு தன்வந்திரியாக அவதரித்த நாள் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக உள்ள ஐப்பசி திரயோதசி நாளாகும். இந்த தினத்தை தன்வந்திரி ஜெயந்தியாகவும் தேசிய ஆயுர்வேத தினமாகவும் கொண்டாடப்படுகிறது. சிலர் ஐப்பசி ஹஸ்த நட்சத்திரத்தையும், சிலர் ஐப்பசி சுவாதி நட்சத்திரத்தையும் தன்வந்திரி ஜெயந்தியாக கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு இன்று 2.11.2021 ஐப்பசி ஹஸ்தம் நட்சத்திரம் திரயோதசி திதி ஸ்ரீதன்வந்திரி பெருமாள் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
தீபாவளி தினத்தில் எப்படி எண்ணெயில் லட்சுமி, சீயக்காயில் சரஸ்வதி, சந்தனத்தில் பூமாதேவி, குங்குமத்தில் கவுரி, மலர்களில் மோகினி, தண்ணீரில் கங்கை, இனிப்பு பலகாரத்தில் அமிர்தம், புத்தாடையில் மகாவிஷ்ணு ஆகியோர் உறைவதாகச் சொல்கிறோமோ, அதுபோல் தீபாவளி மருந்தில் தன்வந்திரி பகவான் உறைகிறார். எனவே, தீபாவளி மருந்து உட்கொள்ளும்போது ஸ்ரீதன்வந்திரி பகவானை மனபூர்வமாகப் பிரார்த்திக்க வேண்டும்.

எந்த ஒரு தீராத நோய்க்கும், உடல் சம்பந்தப்பட்ட கோளாறுகளுக்கும் தன்வந்திரி பகவானை வழிபட்டு, அவரது பிரசாதத்தைப் பெற்று உண்டால், நிவாரணம் பெறலாம் என்பது கண்கூடு. தன்வந்திரியின் மந்திரத்தை ஜபம் செய்வதால் தைரியம் ஏற்பட்டு பாபம், வியாதி, விஷம், கிரஹ தோஷங்கள் இவை அனைத்தும் நீங்குகின்றன.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். உடல்நலத்துடன் திகழ இந்த போற்றியை தினமும் விளக்கேற்றி பக்தியுடன் பாராயணம் செய்வது நல்லது.

ஓம் நமோ பகவதே வாசுதேவாய
தன்வந்த்ரயே அமிர்த கலச ஹஸ்தாய
சர்வாமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீமஹா விஷ்ணவே நமஹ.
அமுதத்தை ஏந்திநிற்கும் அருள்கரத்தோய் சரணம்
குமதச் செல்வி மணவாளன் மறுவடிவே சரணம்
சேய் எங்கள் நோய் நீக்கி காத்திடுவாய் சரணம்
தாய் போலே தரணிக்கும் தன்வந்தரி ஸ்வாமியே சரணம்.
தன்வந்திரி பகவான் போற்றி
1. ஓம் தன்வந்திரி பகவானே போற்றி
2. ஓம் திருப்பாற்கடலில் உதித்தவரே போற்றி
3. ஓம் தீர்க்காயுள் தருபவரே போற்றி
4. ஓம் துன்பத்தை துடைப்பவரே போற்றி
5. ஓம் அச்சம் போக்குபவரே போற்றி
6. ஓம் அஷ்டாங்க யோகியே போற்றி
7. ஓம் அபயம் அளிப்பவரே போற்றி
8. ஓம் அன்பு கொண்டவரே போற்றி
9. ஓம் அமரர் தெய்வமே போற்றி
10. ஓம் அகிலம் புகழ்வோனே போற்றி
11. ஓம் அட்சய பாத்திரமே போற்றி
12. ஓம் அருளை வழங்குபவரே போற்றி
13. ஓம் அடைக்கலம் தருபவரே போற்றி
14. ஓம் அழிவற்றவரே போற்றி
15. ஓம் அழகுடையோனே போற்றி
16. ஓம் அமிர்தகலசம் ஏந்தியவரே போற்றி
17. ஓம் அமைதியின் வடிவே போற்றி
18. ஓம் அல்லல் தீர்ப்பவரே போற்றி
19. ஓம் அனைத்தும் அறிந்தவரே போற்றி
20. ஓம் அண்டமெல்லாம் நிறைந்தாய் போற்றி
21. ஓம் ஆயுர்வேத தலைவரே போற்றி
22. ஓம் ஆரோக்கியம் தருபவரே போற்றி
23. ஓம் ஆயுள் பலம் நீட்டிப்பாய் போற்றி
24. ஓம் ஆயுதக்கலை நிபுணரே போற்றி
25. ஓம் ஆத்ம பலம் தருபவரே போற்றி
26. ஓம் ஆசாபாசம் அற்றவரே போற்றி
27. ஓம் ஆனந்த ரூபனே போற்றி
28. ஓம் ஆகாயத் தாமரையே போற்றி
29. ஓம் ஆற்றலின் வடிவே போற்றி
30. ஓம் உள்ளம் நிறைந்தவரே போற்றி
31. ஓம் உலக ரட்சகரே போற்றி
32. ஓம் உலக நாதனே போற்றி
33. ஓம் உலக சஞ்சாரியே போற்றி
34. ஓம் உலகாள்பவரே போற்றி
35. ஓம் உலகம் காப்பவரே போற்றி
36. ஓம் உயிர்களின் காவலரே போற்றி
37. ஓம் உயிர் தருபவரே போற்றி
38. ஓம் உயிர்களின் உறைவிடமே போற்றி
39. ஓம் உண்மை சாதுவே போற்றி
40. ஓம் எங்கும் நிறைந்தவரே போற்றி
41. ஓம் எமனுக்கு எமனானவரே போற்றி
42. ஓம் எழிலனே போற்றி
43. ஓம் எளியார்க்கும் எளியவரே போற்றி
44. ஓம் எல்லாம் தருபவரே போற்றி
45. ஓம் எல்லையில்லா தெய்வமே போற்றி
46. ஓம் எவர்க்கும் நோய் தீர்ப்பாய் போற்றி
47. ஓம் எல்லா பொருளின் இருப்பிடமே போற்றி
48. ஓம் எல்லையில்லா பேரின்பமே போற்றி
49. ஓம் எதற்கும் மருந்தளிப்பாய் போற்றி
50. ஓம் கண்ணுக்கு கண்ணானவரே போற்றி
51. ஓம் கருணைக் கடலே போற்றி
52. ஓம் கருணை அமுதமே போற்றி
53. ஓம் கருணா கரனே போற்றி
54. ஓம் காக்கும் தெய்வமே போற்றி
55. ஓம் காத்தருள் புரிபவரே போற்றி
56. ஓம் காருண்ய மூர்த்தியே போற்றி
57. ஓம் காவிரிக்கரை வாழ்பவரே போற்றி
58. ஓம் குருவே போற்றி
59. ஓம் கும்பிடும் தெய்வமே போற்றி
60. ஓம் ஸ்ரீதன்வந்திரி பகவானே போற்றி
61. ஓம் சகல நன்மை தருபவரே போற்றி
62. ஓம் சகல செல்வம் வழங்குபவரே போற்றி
63. ஓம் சகல நோய் தீர்ப்பவரே போற்றி
64. ஓம் சம தத்துவக் கடவுளே போற்றி
65. ஓம் சகிப்புத் தன்மை மிக்கவரே போற்றி
66. ஓம் சங்கு சக்கரம் ஏந்தியவரே போற்றி
67. ஓம் சமத்துவம் படைப்பவரே போற்றி
68. ஓம் சர்வ லோக சஞ்சாரியே போற்றி
69. ஓம் சர்வ லோகாதிபதியே போற்றி
70. ஓம் சர்வேஸ்வரனே போற்றி
71. ஓம் சர்வ மங்களம் அளிப்பவரே போற்றி
72. ஓம் சந்திரனின் சகோதரரே போற்றி
73. ஓம் சிறப்பாற்றல் கொண்டவரே போற்றி
74. ஓம் சித்தி அளிப்பவரே போற்றி
75. ஓம் சித்தமருந்தே போற்றி
76. ஓம் ஸ்ரீ ரங்கத்தில் வாழ்பவரே போற்றி
77. ஓம் சுகம் அளிப்பவரே போற்றி
78. ஓம் சுகபாக்யம் தருபவரே போற்றி
79. ஓம் சூரியனாய் ஒளிர்பவரே போற்றி
80. ஓம் சூலைநோய் தீர்ப்பாய் போற்றி
81. ஓம் தசாவதாரமே போற்றி
82. ஓம் தீரரே போற்றி
83. ஓம் தெய்வீக மருந்தே போற்றி
84. ஓம் தெய்வீக மருத்துவரே போற்றி
85. ஓம் தேகபலம் தருபவரே போற்றி
86. ஓம் தேவாதி தேவரே போற்றி
87. ஓம் தேஜஸ் நிறைந்தவரே போற்றி
88. ஓம் தேவாமிர்தமே போற்றி
89. ஓம் தேனாமிர்தமே போற்றி
90. ஓம் பகலவனே போற்றி
91. ஓம் பட்டதுயர் தீர்ப்பாய் போற்றி
92. ஓம் பக்திமயமானவரே போற்றி
93. ஓம் பண்டிதர் தலைவரே போற்றி
94. ஓம் பாற்கடலில் தோன்றியவரே போற்றி
95. ஓம் பாத பூஜைக்குரியவரே போற்றி
96. ஓம் பிராணிகளின் ஜீவாதாரமே போற்றி
97. ஓம் புருளஷாத்தமனே போற்றி
98. ஓம் புவனம் காப்பவரே போற்றி
99. ஓம் புண்ணிய புருஷரே போற்றி
100. ஓம் பூஜிக்கப்படுபவரே போற்றி
101. ஓம் பூர்ணாயுள் தருபவரே போற்றி
102. ஓம் மரணத்தை வெல்பவரே போற்றி
103. ஓம் மகா பண்டிதரே போற்றி
104. ஓம் மகாவிஷ்ணுவே போற்றி
105. ஓம் முக்தி தரும் குருவே போற்றி
106. ஓம் முழு முதல் மருத்துவரே போற்றி
107. ஓம் சக்தி தருபவரே போற்றி
108. ஓம் தன்வந்திரி பகவானே போற்றி போற்றி!
ஓம் நமோ நாராயணாய ஸ்ரீ தன்வந்திரி பகவான் ஜெயந்தியை முன்னிட்டு வாலாஜா தன்வந்த்ரி பீடத்தில் சிறப்பு ஹோமங்கள் விஷேச ஆராதனைகள் வருகிற 4.11.2021 அமாவாசை வரை நடைபெறுகிறது. ஸ்ரீ தன்வந்திரி பெருமாளே ஆயுர்வேத மருத்துவ முறையினை மக்களுக்கு அளித்ததாக ஐதீகம். இறைவன் மருந்தாகவும், மருத்துவராகவும் இருந்து மக்களைக் காப்பாற்றுகிறார் என்ற அரிய தத்துவத்தை இந்த வைத்திய அவதாரம் சுட்டிக்காட்டுகிறது. காக்கும் கடவுளான ஸ்ரீ தன்வந்திரி பெருமாள், மஹா விஷ்ணுவின் அம்சமாக பின்னிரு கரங்களில் சங்கு, சக்கரத்துடனும்,முன்னிரு கரங்களில் ஒரு கரத்தில் அமிர்த கலசத்தையும், ஒரு கையில் சீந்தலைக் கொடியுடனும் காட்சி அளிக்கிறார்.
அக்கால மருத்துவ முறையில் நோயாளியின் உடலிலிருந்து கெட்ட ரத்தத்தை உறிஞ்சி எடுத்து நோயை குணமாக்க அட்டைப் பூச்சிகள் பயன்பட்டனவாம். இப்போதும் இந்த முறையின் பயனை தற்கால மருத்துவம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆகவேதான் தன்வந்திரி விக்ரஹத்தில் அட்டை பூச்சியும் இடம்பெற்றுள்ளது.
இத்தனை அம்சங்களுடன் கூடிய தன்வந்திரி பகவானை உலக நலன் கருதி, நோயற்று வாழட்டும் உலகு என்ற தாரக மந்திரத்துடன் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் அமைத்து அங்கு மூலவராக ப்ரதிஷ்டை செய்து தினம் தோறும் ஹோமங்கள், ஜபங்கள் மற்றும் கூட்டுப்ரார்த்தனைகள் செய்து வருகிறார் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள். தன்வந்திரி பீடத்திற்கு வருகைத்தரும் பக்தர்களுக்கு நோய் தீர்க்கும் மாமருந்தான தீபாவளி லேகியம் வழங்கப்பட உள்ளது. இந்த பிரசாதத்தின் மூலம் பல்வேறு வகையான மன நோய்களுக்கும், உடல் நோய்களுக்கும் தீர்வு பெறலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications